.உத்தரபிரதேச மாநிலம் ஷாரன்பூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் கக்கர் (வயது16). இவர் அங்குள்ள ரெயின்போ பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை கார்த்திக் கக்கர் தனது நண்பர்கள் 3 பேருடன் சைக்கிளில் டெல்லி சாலையில் உள்ள சுன்காதி ரெயில்வே கேட்
அருகே சென்றார்.
பின்னர் மாணவர் கார்த்திக் கக்கர் அந்த இடத்தில் நின்று கொண்டு செல்போனில் ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது ஹரித்துவார்-அஜ்மீர் செல்லும்
எக்ஸ்பிரஸ் ரெயில்
கண்இமைக்கும் நேரத்தில் மாணவர் கார்த்திக் கக்கர் மீது பயங்கரமாக மோதியது. இதில் 500 மீட்டர் தூரத்துக்கு ரெயில் மாணவரை இழுத்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த மாணவர் கார்த்திக் கக்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment