25 March 2017
விபத்தில் 4 மாணவிகள் பலி - முதல்வர் ரூ.1 லட்சம் நிதியுதவி
Saturday, March 25, 2017
No comments
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் நடந்த சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பத்மனாபபுரம் கிராமம், தேசிய நெடுஞ்சாலையில், தக்கலை அருகே புலியூர்குறிச்சி என்னும் இடத்தில் 24.3.2017 அன்று ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி
மாணவிகளை ஏற்றி தக்கலை நோக்கி வந்து கொண்டிருந்த மகேந்திரா வேனும், நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் மோதிக் கொண்டதில், வேனில் பயணம் செய்த, கல்லூரி
மாணவிகள் பரைக்கோடு, வைகுண்டபுரத்தைச் சேர்ந்த அர்ஜுணன் என்பவரின் மகள் மஞ்சு, திருவிதாங்கோடு, புங்கரையைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் சிவரஞ்சினி,
சக்தி நகரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் தீபா மற்றும் மண்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மனைவி சங்கீதா ஆகிய நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சாலை விபத்தில் மூன்று மாணவிகள் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
11 March 2017
சிறுமியை கற்பழித்த பொலிஸ் அதிகாரி: பதற வைக்கும் பின்னணி!
இந்தியாவில் 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரில் Kamatipura காவல் நிலையத்தில் 48 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவியும் 5 குழந்தைகளும் உள்ளனர்.
இதே பகுதியில் தாய், தந்தையை இழந்த 15 வயது சிறுமி ஒருவரும் வசித்து வந்துள்ளார். சிறுமியை அவரது மூத்த சகோதரி வளர்த்து
வந்துள்ளார்.
இதை அறிந்த பொலிஸ் அதிகாரி சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். மேலும், சிறுமியை தான் திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாக அவருடைய உறவினர்களிடம்
தெரிவித்துள்ளார்.
சிறுமி தங்களுக்கு சுமையாக இருப்பதால் அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால், சிறுமியும் அவரது சகோதரியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 2-ம் திகதி வாகனத்தில் வந்த பொலிஸ் அதிகாரி சிறுமியை கட்டாயப்படுத்தி தூக்கிச் சென்றுள்ளார். இதே நகரில் உள்ள Shastripuram என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில்
வைத்து பூட்டியுள்ளார்.
இதுமட்டுமில்லாமல், திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காத சிறுமியை அவர் தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது தங்கையை தூக்கிச்சென்ற பொலிஸ் அதிகாரி மீது சகோதரி
புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற பொலிசார் சிறுமியை கடத்திய பொலிஸ் அதிகாரியை கைது செய்து விசாரணை செய்தபோது அவர் அனைத்து உண்மைகளையும் தெரிவித்துள்ளார்.
தகவல்களை பெற்ற பொலிசார் உடனடியாக சென்று வீட்டில் அடைக்கப்பட்ட சிறுமியை மீட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை
நடைபெற்று வருகிறது.
07 March 2017
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு,வாயில் சிலிக்கான் திணிப்பு ?
27 கேமராக்கள் நிறுத்தப்பட்டன! 22 டாக்டர்கள் பணி நீக்கம். தினம் தினம் நர்சுகள் டார்ச்சர். மற்ற நோயாளிகளை வெளியே விரட்டினார்கள்.
லைவ் டே வாசகர்களே, எதை அறிய வேண்டும் என்று துடித்தீர்களோ அது வெளிவர ஆரம்பித்துள்ளது.
அதுவும் அதிமுகவினர்கள் மூலமே வெளியாகி உள்ளது. இன்னும் நிறைய வெளிவரும் என்றும் கூறுகிறார்கள். பொறுமையாக படியுங்கள்:
“செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் என்று மட்டும் சொன்னார்கள்.
அதன் பிறகு, 75 நாள்கள் யாரையும் பார்க்கவிடாமல் தடுத்துவிட்டு, திடீர் என அவர் இதயத் துடிப்பு முடக்கத்தால் மரணம் அடைந்துவிட்டதாகக் கூறினார்கள்.
இது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். ‘பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்’, ‘இட்லி சாப்பிடுகிறார்’ என்று சொல்லிவிட்டு, அவருக்கு ‘செப்டிசீமியா’ என்ற நோய் இருப்பதாக அடுத்து அறிக்கைவிட்டது எதனால்?
சசிகலாவைத் தவிர யாரையும் அந்த அறைக்குள் அனுமதிக்கவில்லை. செப்டிசீமியா இருந்தாலும் ஒரு சிலரையாவது உரிய பாதுகாப்புக் கவசங்களுடன் அறைக்குள் அனுப்பியிருக்கலாம். கவர்னரைக் கூட அனுமதிக்காமல் அப்படி என்ன சிகிச்சை ?
ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது, அப்போலோவில் இருந்த 27 சி.சி.டி.வி கேமராக்கள் செயல் இழக்க வைக்கப் பட்டுள்ளன.
அதன் பின் 22டாக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். ஏன் அப்படிச் செய்யப்பட்டது? நர்சுகள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். ஒரு கேரளா டாக்டரிடம் ஜெ., “என்னை அடிக்கிறார்கள்” என்று அழுதுள்ளார்? அந்த கேரளா டாக்டர் எங்கே..?
‘‘ஜெயலலிதா மரணம் குறித்து பிரதமர் மோடிக்கு சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதாவைப் பார்க்க வருவதாக இரண்டு முறை மோடி சொன்னார்.
இரண்டு முறையும் தடுத்தார்கள். எனவே, உள்விஷயங்களை மோடியும் அறிவார். மேலும், சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.க-வைக் கைப்பற்றத் துடிப்பதை மோடி ரசிக்கவில்லை என்றும்
கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச தேர்தல் முடிந்த பிறகு, தமிழக அரசியலில் மோடியின் பார்வை இருக்கும். அதற்கான முன்னோட்டம்தான் சசி சிறை சென்றதும்..பன்னீரை ஜனாதிபதி சந்தித்த
நிகழ்வும்..!
இரண்டு மாதங்களில் இதற்கான வேலைகள் ஆரம்பம் ஆகும் என்றும் சொல்கிறார்கள்.
‘‘அப்போலோ மருத்துவமனை தந்த ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் அறிக்கையில், ‘அவர் கீழே விழுந்துதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்து
உள்ளார்கள்.
அப்படியானால், ‘அவர் எங்கே, எப்படி கீழே விழுந்தார்? அவராக விழுந்துவிட்டாரா? அவரை யார் தள்ளிவிட்டது? எதற்காகத் தள்ளிவிட்டார்கள்? அதற்கு என்ன நோக்கம்?’ என்பதை
விளக்க வேண்டும்.
போயஸ் கார்டனில் இருந்து டி.எஸ்.பி ஒருவர்தான் அப்போலோவின் 1066 என்ற ஆம்புலன்ஸ் எண்ணுக்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளார்.
அந்த ஆம்புலன்ஸ், போயஸ் கார்டன் வீட்டுக்குள் நுழைந்ததும், ஜெயலலிதா அதில் ஏற்றப்பட்டதுமான காட்சிகள் கொண்ட சி.சி.டி.வி
பதிவுகள் எங்கே?
அப்போலோ மருத்துவமனையில் இருந்து சென்ற ஆம்புலன்ஸில்தான் ஜெயலலிதா அழைத்துவரப்பட்டார் என்றால், அவருடன் பயணம் செய்தவர்கள் யார் ?
ஆம்புலன்ஸில் செல்லும் அளவுக்கு சீரியஸ் என்றால், ஆம்புலன்ஸ் உடனே புறப்படாமல் தாமதம் செய்யப்பட்டது ஏன்?
போயஸ் கார்டனுக்கு ஆம்புலன்ஸ் சென்ற அடுத்த சில மணி நேரத்தில் அப்போலோ மருத்துவமனையின் வெளியே, உள்ளே, இரண்டாம் தளம் ஆகியவற்றில் இருந்த 27 சி.சி.டி.வி கேமராக்கள் செயல் இழக்க வைக்கப்பட்டுள்ளன.
அப்போலோவில் கேமராக்கள் அகற்றப்பட்டாலும், போயஸ் கார்டன் உள்ளேயும் வெளியேயும் கேமராக்கள் உள்ளன. அந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஏன் இதுவரை வெளியிடவில்லை?
ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கவனித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சாந்தாராம், 2016 மே மாதமே ‘உங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் சரியில்லாமல் இருப்பதால் பக்கவாதம் வரப்போகிறது’ என்று எச்சரித்துள்ளார்.
அதன்பிறகு அவரை போயஸ் கார்டன் பக்கமே அனுமதிக்காத மர்மம் என்ன? 2016-ம் ஆண்டு மே மாதம் ஆரம்பித்து, ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டம்பர் மாதம் வரை அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நிறைய மர்மங்கள் புதைந்தது கிடக்கின்றன.
இந்தக் காலகட்டத்தில்தான் அவரது உடலில் சர்க்கரை அளவு உச்சபட்ச நிலையில் இருந்துள்ளது. இதற்கு என்ன சிகிச்சைகள் அளித்தார்கள்? கால் விரல்களை யாரை வைத்து அகற்றினார்கள்.
அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட உணவுகள் சோதனை செய்யப்பட்டு தரப்பட்டதா?
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அந்த 75 நாள்களில், அவரைக் காண வந்தவர்கள் பற்றிய விவரங்களை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் எடுத்துச் சென்றுவிட்டதாக சொல்கிறார்கள்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு, அவரின் உடல் எடை 47 கிலோ குறைந்துள்ளது. பற்கள், கால்கள்
அகற்றப்பட்டுள்ளது.?
உடம்பு வற்றி துரும்பாக மாறிவிட்ட ஜெ., இறந்த பின் முகம் உப்பி காணப் பட்டார். வாயில் சிலிகான் வைத்து தாயகப்பட்டது உண்மையா ?
அதற்குக் காரணம் என்ன? யாரை வைத்து,யாரிடம் கையெழுத்து பெற்று அகற்றினார்கள்..? பற்கள் உடை பட்டிருந்தன.
வெளிநாட்டு மருத்துவர்கள் ஜெயலலிதாவைப் பார்க்க வந்தபோது, சசிகலா மட்டுமே உடன் இருந்துள்ளார். தமிழ் மட்டுமே தெரிந்த சசிகலா, தமிழே தெரியாத வெளிநாட்டு மருத்துவர்களோடு எவ்வாறு
உரையாடினார்?
வாஸ்து சீனிவாசன் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் அதிரடி மாற்றங்களைச் செய்து, அந்த அறையை இருட்டாக
ஆக்கியது ஏன்?
ஜெயலலிதாவுக்கு மருந்து கொடுக்கக்கூட, நல்ல நேரம் பார்த்துக் கொடு்த்த தவற்றைச் செய்தது ஏன்?
எய்ம்ஸ் மருத்துவக்குழு அப்போலோ வந்து, ஜெயலலிதாவின் நிலையைப் பார்த்துவிட்டு டெல்லிக்குக் கிளம்பியபோது அடித்த கமென்ட்டை இப்போது சிலர் சொல்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை ‘It is a secret service, not a medical service’ என்று அந்த மருத்துவர்கள்
சொன்னார்களாம்.
2011-ம் ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு உதவியாக ஒரு நர்ஸை அனுப்பியுள்ளார். ஆனால், அவர் சில மாதங்களில் இங்கிருந்து அனுப்பப்பட்டார்.
அப்போதே மோடி, “உங்களுக்கு அளிக்கப்படும் உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள்” என்று ஜெயலலிதாவிடம் அறிவுறுத்தி உள்ளார். ‘‘அதையும் இந்த சம்பவங்களையும் முடிச்சுப் போட்டுப் பாருங்கள்’’ என்கிறார்கள் ஒரு தரப்பினர்.
அப்போலோ மருத்துவமனை, ‘ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு ஐந்து கோடி ரூபாய்’ என்று சொல்லியிருந்தது.
ஆனால், அவருடைய சிகிச்சை செலவு 7.8 கோடி ரூபாய் என்கிறார்கள். அதில் உணவுச் செலவு மட்டும் 30 லட்ச ரூபாய் என்று கணக்குக்
காட்டியுள்ளார்கள்.
‘‘30 லட்சம் ரூபாய்க்கு உணவுச்செலவு என்றால் தினமும் யார் யாரெல்லாம் அங்கு இருந்தார்களோ, அவர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும்’’ என்று ஜனாதிபதியிடம் சொல்லப்பட்டிருக்கிறது.
‘சி.பி.ஐ வரும்போது, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் சிவகுமாரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்’
கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயலலிதாவுடன் இருந்த சிவகுமார், சமீப காலமாக எங்கும் தலைகாட்டவில்லை. இதுவும் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.
மருத்துவமனையில் சசிகலாவின் நிழலாக இருந்தவர், அவருடைய உதவியாளர் கார்த்திகேயன். அவருக்கும் அனைத்தும் தெரியும்’’ என்கிறார்கள் இவர்கள்.
‘சி.பி.ஐ., எந்த நேரத்திலும் வந்து வளைக்கலாம்’ என்று சொல்கின்றன டெல்லி தகவல்கள். விரைவில் மன்னார்குடி கும்பல் மொத்ததும் உள்ளே போகும் என்கிறார்கள் பன்னீர் தரப்பினர்..
06 March 2017
பெண் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியதால் உயிருடன் எரிப்பு !
இந்தியாவில் பெண் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தவறுதலாக கூறியதை தொடர்ந்து அப்பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரில் Devesh Chaudhary(23) மற்றும் Rachna Sisodia(21) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் மனைவிக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவரை கணவர் மருத்துவமனையில்
அனுமதித்துள்ளார்.
ஆனால், அவரது மனைவி அபாயக் கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி பெண் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக
தெரிவித்துள்ளனர்.
நண்பர்களுடன் மனைவியின் உடலை எடுத்துச் சென்ற கணவர் மனைவியின் பெற்றோருக்கு கூட தகவல் தெரிவிக்கமால் சவத்தில் வைத்து எரிக்க ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இத்தகவல் அறிந்த மனைவியின் பெற்றோர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்து சுடுகாட்டிற்கு விரைந்துள்ளனர்.
ஆனால், இவர்கள் செல்வதற்குள் பெண்ணிற்கு தீயிட்டுள்ளனர். சவத்தில் எரிந்துக்கொண்டு இருந்த பெண்ணின் உடலை பொலிசார் இழுத்து வெளியேற்றியுள்ளனர்.
இருப்பினும், பெண்ணின் உடல் சுமார் 70 சதவிகிதம் வரை தீயில் எரிந்து உயிரிழந்துள்ளது.
எனினும், சந்தேகம் அடைந்த பொலிசார் எரிந்த சடலத்தை தடவியல் துறை மருத்துவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
சடலத்தை மருத்துவர்கள் சோதனை செய்தபோது, நுரையீரல் மற்றும் மூச்சுக் குழாயில் சாம்பல் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
ஒருவரை உயிருடன் எரிக்கும்போது மட்டுமே சாம்பல் மூச்சுக் குழாய் வழியாக உடலுக்குள் செல்லும்.
எனவே, பெண்ணை எரிக்கும்போது அவர் சுவாசித்துக்கொண்டு இருந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த கணவர் தற்போது தலைமறைவாக உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)