31 October 2014
விமான நிலையத்தில் தங்கம் கடத்த முயற்சித்த இருவர் கைது
இந்தியாவின் பெங்களூருக்கு தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 26 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமென சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
அக்குரண பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்மனைவியின் காதை கடித்து குதறிய கணவர் கைது
மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியின் காதை கடித்து குதறிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
மனைவியிடம் தகராறுதானே, பிவண்டி கோன்காவ் பகுதியை சேர்ந்தவர் பப்பு(வயது50). இவரது மனைவி ராக்மா(40). பப்புவிற்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி மனைவி ராக்மாவிடம் பணம்கேட்டு துன்புறுத்தி வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல் பப்பு வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்தார். அவரிடம் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கும்படி ராக்மா கூறினார்.
அப்போது அவர் தனக்கு மது குடிக்க பணம் வேண்டும் என்று கூறி ராக்மாவிடம் தகராறு செய்தார். ஆனால் ராக்மா தன்னிடம் பணம் இல்லை என்று கூறி மறுத்து விட்டார்.
காதை கடித்து குதறினார்
குழந்தைகளின் படிப்பு செலவிற்காக ராக்மா பணம் சேமித்து வைத்துள்ளதை தெரிந்துகொண்ட பப்பு அந்த பணத்தை எடுத்து கொடுக்கும்படி கேட்டார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பண தர மறுத்து மனைவி தன்னிடம் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பப்பு, ராக்மாவின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்தார். மேலும் அவர் ராக்மாவின் காதை கடித்து குதறினார்.
இதில் வேதனை தாங்க முடியாமல் அலறி துடித்த ராக்மாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கல்யாணில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் கோன்காவ் போலீசார் வழக்குப்பதிவு செய்து
பப்புவை கைது செய்தனர்
30 October 2014
விசாரணைய தொடங்குகிறது கருப்பு பணம் குறித்து 90 பேருக்கு எதிராக
கருப்பு பண விவகார வழக்கில், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 இந்தியர்களின் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதில் இடம்பெற்றுள்ள மும்பை நகரை சேர்ந்த 90 நபர்களில் கணக்கில் குற்றம் எதுவும் நடைபெற்றுள்ளதாக என்பதை அறிய விசாரணை நடத்த முதல்கட்ட நடவடிக்கையை மும்பை வருமானவரித்துறை விரைவில் தொடங்க உள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 இந்தியர்களில், 235 பேர் மும்பை சிட்டியை சேர்ந்தவர்கள் மும்பை வருமான வரி(புலனாய்வு) இயக்குநரக தகவல்கள் தெரிவித்துள்ளது.
"90 நபர்கள் வங்கி கணக்கு தொடர்பாக சுவிஸ் அதிகாரிகளிடம் இருந்து நமக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, வங்கி கணக்கில் குற்றம் நடந்துள்ளதா என்பதை நிர்ணயிக்கும் பணி விரைவில் தொடங்கும்." என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. வெளிநாடுகளில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களை கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் என்று வகைப்படுத்த முடியாது. நாங்கள் அனைத்து அம்சங்களையும் சரிபார்ப்போம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அளித்த பட்டியலில், அரசியல்வாதிகள், ரியஸ் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், பெரிய வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு துறையினை சேர்ந்த மக்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
கருப்பு பண விவகார வழக்கில், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 இந்தியர்களின் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது. மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்த மூடி முத்திரையிடப்பட்ட அந்த 3 உறைகளையும் பெற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அவற்றை பிரிக்கவில்லை. இந்த 3 உறைகளையும் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் மட்டுமே திறப்பார்கள் என்று கூறியது. சிறப்பு புலனாய்வு குழு அடுத்த மாத (நவம்பர்) இறுதிக்குள் விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தணிக்கையாளர் அறிக்கைகளை பரபரப்பு ஆக்கக் கூடாது:
டெல்லியில் தலைமை கணக்கு தணிக்கையாளர் வருடாந்திர மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கணக்கு தணிக்கையாளர் என்பவர் ஒரு முடிவு எடுக்கப்பட்ட பின்னர் அதை நாம் ஆய்வு செய்கிறோம் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்பதை பார்க்க வேண்டும். தலைமை கணக்கு தணிக்கையாளர் தனது அறிக்கைகளை பரபரப்பாக்க கூடாது. தலைப்பு செய்திகளில் தலைமை கணக்கு தணிக்கையாளர் வரவும் கூடாது.
கணக்கு தணிக்கையாளர் செயல்படுகிற கணக்கு தணிக்கையாளராக இருக்க வேண்டும். ஆனால், செயல்பாடு என்பதும் கட்டுப்பாடு என்பதும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். முடிவு எடுக்கும் செயல்பாடுகளை அவர் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். வேண்டிவர்களுக்கு சலுகை காட்டுகிற வாய்ப்பினை ஒழித்துக் கட்ட வேண்டும்.
தணிக்கையாளர் என்பவர் தவறான முடிவையும், ஊழலையும் வேறுபடுத்தி பார்க்க தகுந்தவராக இருக்க வேண்டும். எடுக்கப்பட்ட ஒரு முடிவில் ஊழல் நடந்துள்ளது என கண்டால், அதை அவர் விமர்சிப்பது என்பது முற்றிலும் மாறுபட்டது.
பல்வேறு கருத்துக்களை எதிர்கொள்ளுகிறபோது, அவர் தாராளமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் நாம் உணர்ச்சிவயப்படுகிற மனோநிலையை கொண்ட சமூகத்தில், அதிகளவில் சந்தேகம் கொள்ளுகிற சமூகத்தில் வாழுகிறோம். பொதுமக்களின் கருத்தினை அப்படியே ஒருவிதமான விசாரணையற்ற முடிவாக மாற்றி விடக்கூடாது.
பொறுப்பினை சுமத்துவதற்கும், வெளிப்படையான நிர்வாகத்திற்கும் கணக்கு தணிக்கை மிகவும் முக்கியம். நல்ல நிர்வாகத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
சில நேரங்களில் பிரச்சினைக்குரிய கேள்விகளை எழுப்பாவிட்டாலும், ஆட்சி முறை சர்வாதிகாரத்தின் பக்கம் சாய்ந்து விடும். எனவே எந்த முறையிலான ஆளுகையிலும், பொறுப்பேற்க வைக்கும் சட்டங்கள் இருக்க வேண்டும்.
29 October 2014
உறுப்பினர் பதவி ஜெயலலிதாவிற்கு பறிபோகுமா?
சபாநாயகரின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை உத்தரவை தமிழக சட்டசபைக்கு அனுப்பி வைத்துள்ளது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம். சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என்று கடந்த மாதம் 27ம்தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை மட்டுமின்றி ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தையும் இழந்தார். இருப்பினும் தீர்ப்பு நகலை பரிசீலித்து, அதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி, ஜெயலலிதாவின் சட்டசபை உறுப்பினர் பதவியை பறிக்குமாறு சிபாரிசு செய்ய வேண்டிய கடமை தமிழக சபாநாயகருக்கு உள்ளது. இதுவரை அதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதனிடையே சபாநாயகர் தனபால் சார்பில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், ஜெயலலிதா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நகலை சட்டசபைக்கு வழங்குமாறு கேட்கப்பட்டிருந்தது. இன்று விரைவு தபால் மூலமாக, தீர்ப்பு நகலை தமிழக சட்டசபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
மர்ம முறையில் இங்கிலாந்தில் இந்திய குடும்பம் மரணம்
இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஜதீந்திர லாட் (வயது 49). இவர் மனைவி துக்ஷா (44), மகள்கள் திரிஷா (19), நிஷா (17) ஆகியோருடன், இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிளேட்டன் என்ற அழகிய கிராமத்தில் வசித்து வந்தார். அக்கம்பக்கத்தினருடன் இணக்கமான நல்லுறவை பராமரித்து வந்துள்ளனர். தொடர்ந்து சில நாட்களாக இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி அதிர்ச்சியும், கவலையும் அடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து சென்று, அவர்களது வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே ஜதீந்திர லாட், மனைவி, மகள்கள் என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களது உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி, மகள்களை கொலை செய்துவிட்டு, ஜதீந்திர லாட் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம், சம்பவம் நடந்து இரண்டு, மூன்று தினங்கள் ஆகி இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 2 லட்சத்து 35 ஆயிரம் பவுண்ட் (சுமார் ரூ.2 கோடியே 35 லட்சம்) மதிப்புள்ள ஜதீந்திர லாட் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடயங்களை சேகரிப்பதற்காக தடயவியல் வல்லுனர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அந்த கிராமத்திற்கு ஜதீந்திர லாட் 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்ததாகவும், 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டில் குடியேறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஜதீந்திர லாடின் மூத்த மகள் திரிஷாவை அறிந்த இந்திய வாலிபர் சேஹஜ் சிங், “திரிஷாவை நான் 8 வருடங்களாக அறிவேன். அவர் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அவர் அருமையான பெண். தனது குடும்பத்தினரைப் பற்றி எந்த தவறான தகவலையும் அவர் கூறியது இல்லை” என்று தெரிவித்தார். மேற்கு யார்க்ஷைர் போலீஸ் சூப்பிரண்டு சைமன் ஆட்கின்சன், “இப்போது வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. நால்வரும் எப்படி இறந்தார்கள் என்று யூகிக்க விரும்பவில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை” என கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
பேட்டிங் தர வரிசையில் இந்திய வீரர் கோலிக்கு பின்னடைவு
சர்வதேச கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியல் அவ்வப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் ஐ.சி.சி. தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
இதன்படி பேட்டிங் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்து இருக்கிறார். இந்திய வீரர் விராட்கோலி ஒரு இடம் இறக்கம் கண்டு 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணி கேப்டன் டோனி 6-வது இடத்தில் தொடருகிறார். ஷிகர் தவான் இரு இடம் சரிந்து 9-வது இடம் பெற்றுள்ளார்.
பந்து வீச்சாளர்கள் தர வரிசையில், தடை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜா 6-வது இடத்திலும், புவனேஷ்வர்குமார் 7-வது இடத்திலும் தொடருகின்றனர்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணி (115 புள்ளிகள்) தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நம்பர் ஒன் இடம் வகித்த தென் ஆப்பிரிக்க அணி 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி (114 புள்ளிகள்) 2-வது இடத்திலும், இந்திய அணி (113 புள்ளிகள்) 3-வது இடத்திலும் உள்ளன.
28 October 2014
கடத்தப்படவிருந்த 50 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!
இராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த தடை செய்யப்பட்ட 50 கிலோ பதப்படுத்திய கடல் அட்டைகளை பறிமுதல் செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபம், பாம்பன் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மண்டபம் சேதுநகர் கடற்கரைப் பகுதியில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட பதப்படுத்திய கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அத்துடன் கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ஒருவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர் இந்தக் கடலட்டைகள் இலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படவிருந்தமை விசாரணைகளில் தெரியவந்தது. பறிமுதல்செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபா என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
வானொலியில் கட்டாய ஹிந்தி - மீண்டும் மொழிப் போராட்டம் !!
புதுவை மாநிலத்தின் காரைக்கால், தமிழ்நாட்டின் தர்மபுரி உள்ளிட்ட சில வானொலி நிலையங்களில் இந்தி மொழி ஒலிபரப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வானொலி மட்டுமின்றி, எஃப்.எம். என்றழைக்கப்படும் பன்பலை வரிசைகளில் பல தனியார் வானொலிகள், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஒலிபரப்பு செய்து வருகின்றன. இந்தி பேசும் மக்களுக்கு அம்மொழியில் மட்டும் நிகழ்ச்சிகளை ஒலி பரப்பு செய்யும் வானொலிகளும் இருக்கின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அகில இந்திய வானொலியின் ஒரு பிரிவு, தனியாக இந்தி மொழி நிகழ்ச்சிகளையும், பாடல்களையும் ஒலிபரப்பி வரும் நிலையில், எதற்காக மற்ற மொழி வானொலி நிலையங்களையும் இந்தி மொழி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்யுமாறு வற்புறுத்த வேண்டும்?
இந்தி மட்டும்தான் இந்திய நாட்டின் மொழியா? இந்திய அரசமைப்பு சட்டத்தின் மொழி அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள 23 மொழிகளும் தேசிய மொழிகள் என்றிருக்கையில், இந்தி மொழிக்கு மட்டும் வலிந்து முன்னுரிமை கொடுக்க மத்திய அரசு முயற்சிப்பது ஏன்? இன்று வரை இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்திய ஒன்றியம் (யூனியன் ஆஃப் இந்தியா) என்றே குறிப்பிடப்பட்டிருப்பதற்குக் காரணமென்ன?
இந்த நாட்டில் பல்வேறு மொழிகளை பேசக்கூடிய, பல பண்பாடுகள் கொண்ட மக்கள் வாழும் மாநிலங்களின் ஒன்றிணைப்பு என்பதுதானே இந்திய ஒன்றியம் என்பதன் பொருள். பிரதமர் மோடி, முதலமைச்சராக இருந்து ஆண்ட குஜராத் மாநிலம் கூட, மொழி அடிப்படையில் அல்லவா ஒன்றுபட்ட பம்பாய் மாநிலத்தில் இருந்து பிரிந்து தனி மாநிலம் ஆனது? இதனை ஏன் மோடி மறந்தார்? குஜராத்தில் இந்தி மொழியை அரசு மொழியாக்குவாரா மோடி? அங்கு இந்தியை கட்டாய கல்வி மொழியாக்குவாராழ அதனை குஜராத்திகள் ஏற்றுக்கொள்வார்களா? கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் கூட குஜராத்தி தவிர வேறு மொழி இல்லாத மாநிலமாக குஜராத் இருப்பதால் அதன் முன்னேற்றம் கெட்டுவிட்டதா என்ன?
எனவே, இந்தி பேசாத மொழி வழி மாநிலங்களின் மக்களின் மீது தொடர்ந்து இந்தி திணிக்கப்படுவது ஏன்? இந்தியாவின் மற்ற தேசிய மொழிகளுக்கு இல்லாத அறிவு வளம் ஏதாவது இந்தி மொழியில் உள்ளதா? இந்திய நாட்டு மொழிகளிலேயே இறுதியாகப் பிறந்த மொழி இந்தி மொழி. அதுவும் இந்தி பேசும் மாநிலங்களில் வெவ்வேறு வழக்காடுகளைக் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், வளமையான மொழிகள் பலவுள்ள இந்திய நாட்டில் இந்திக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து நாட்டு மக்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்துவது ஏன்?
பிரதமர் மோடி தலைமையிலான அரசு சர்சைக்குரிய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கருப்புப் பணத்தை வெளிக்கொணருவோம் என்றது, இப்போது கருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலை வெளியிட முடியாது என்று கூறுகிறது. அத்யாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்போம் என்றார்கள், ஒன்றும் குறையவில்லை. கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலைகள் குறைத்துள்ளோம் என்றார்கள். ஆனால், டிசல் விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்து விட்டார்கள். அதே நேரத்தில் சமையல் எரிவாயு உருளை விலையை உயர்த்தி விட்டார்கள்.
நாட்டின் உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது என்று பரப்புரை செய்கிறார்கள், ஆனால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்னமும் 61 ரூபாயில்தான் நிற்கிறது, இறங்க மறுக்கிறது. வேலை வாய்ப்பை உருவாகுவோம் என்றார்கள், இப்போது அந்நிய நேரடி முதலீடு வந்தால் அதுவாகவே சாத்தியமாகும் என்கிறார்கள். இப்படி ஆட்சியை வைத்துக்கொண்டு நன்மை பயக்கும் திட்டங்களை வரையறை செய்து நிறைவேற்ற திறனற்ற மோடி அரசு, மக்களை திசைதிருப்ப இந்திப் பிரச்சனையை எழுப்புகிறது. மக்களின் நலனிற்காக போராடும் அரசியல் சக்திகளின் ஆற்றலை திசை திருப்பி வீண்டிக்கும் நோக்கும் கொண்டதாக இந்தித் திணிப்பு இருக்கிறது.
இந்த நாட்டின் வளங்களை பயன்படுத்தி, தொழில் உற்பத்தியை பெருக்கி, வேலை வாய்ப்புகளை பெருக்க வகையில்லாமல், சமஸ்கிருதம் வளர்ப்பு, இந்தி திணிப்பு என்று எதிர்மறை வேலைகளில் ஈடுபடுகிறது மோடி அரசு. பாரதிய ஜனதா கட்சியினர் தமி்ழ்நாட்டை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக பெரு்ம போராட்டங்களை கண்ட தமிழகம், இந்தி மொழி திணிக்கப்பட்டால், அதனை எதிர்த்து மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் என்பதை மறுந்து
விடக்கூடாது.
27 October 2014
அமைச்சர்கள் வழிபாடு ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும்! -
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்தார். அ.தி.மு.க பொது செயலாளர், முன்னாள் முதலமைச்சர், தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டி கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் புனித தெராசா சர்ச் மற்றும் சி.எஸ்.ஐ. சர்ச் உள்ளிட்ட தேவாலயங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை செய்தார். பின்னர் தாந்தோணிமலையில் உள்ள ஊரணி காளியம்மன் கோவிலில் 1008 லிட்டர் பாலில் அம்மனுக்கு சிறப்பு அபிN~கம் செய்தார்.
இதனை தொடர்ந்து மண்மங்கலம் முனியப்பன் கோவிலில் சிறப்பு அபிN~கமும், சின்னப்பள்ளி வாசலில் சிறப்புத் தொழுகையும் செய்தார். மேலும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் திருக்கோவிலில் குத்துவிளக்கு ப+ஜையும் மற்றும் சிறப்பு அபிN~கமும், பாலமலை முருகன் கோவிலில் தங்கரதம் இழுத்து ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சராக அமைச்சர் செந்தில் பாலாஜி மனமுருகி வேண்டிக்கொண்டார்.
நிகழ்ச்சியின்போது அ.தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் காளியப்பன், பொருளாளர் முரளி, நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகர கழக செயலாளர் கவுன்சிலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட கழக பொருப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
அக்னி-5 ஏவுகணை சோதனை அடுத்த மாதம் நடக்கிறது
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை -5 இந்திய ராணுவம் ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தி வருகிறது. அக்னி என்ற பெயரிடப்பட்ட இந்த வரிசையில் ‘அக்னி-1’ 700 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடியது. ‘அக்னி-2’ 2 ஆயிரம் கிலோ மீட்டரும், ‘அக்னி-3’ மற்றும் ‘அக்னி-4’ முறையே 2,500 கி.மீ, 3,500 கி.மீ.க்கு மேல் சென்று தாக்கக் கூடியவைகளாகும்.
ஏவுகணை தொழில்நுட்பத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அக்னி-5 ஏவுகணையை இந்திய ராணுவம் தயாரித்துள்ளது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன்பெற்ற இந்த அக்னி-5 ஏவுகணை ஏற்கனவே 2 முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. 3-வது முறையாக ஒரு சிறப்பான இரும்பு ஏவுதளத்தில் இருந்து ஏவி சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த ஏவுகணையை ஏவும் தளத்துடன் சேர்த்து ஒரு வாகனத்தில் வைத்து ஏவும் இடத்துக்கு சுலபமாக எடுத்துச்செல்ல முடியும். மிகவும் விரைவாகவும், பலமுனை ஏவுதளத்தில் இருந்தும் இதனை ஏவ முடியும். இந்த அக்னி-5 ஏவுகணை 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று தாக்கக்கூடியது. இந்தியாவில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகரையோ, அதற்கு இடையே உள்ள எந்த ஒரு நகரையோ தாக்கவல்லது.
இந்த ஏவுகணையை தாங்கிப்பிடிக்கும் ஏவுதளம் சிறப்பான எக்கினால் செய்யப்பட்டது. ஏவும்போது வெளிப்படும் அதிகப்படியான அழுத்தத்தை தாங்கக்கூடியது. 17 மீட்டர் நீளமும், 50 டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணையை, 300 முதல் 400 டன் வேகத்தில் உந்தித்தள்ளும் சக்தி கொண்டது. அதுமட்டுமல்ல இந்த ஏவுதளத்திற்குள் ஏவுகணையை பல ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக வைக்க முடியும்.
3 அடுக்குகளை கொண்ட இந்த ஏவுகணை ஒரு டன் அளவுக்கு வெடிக்கும் முன்பகுதியை கொண்டது. இந்த ஏவுகணை முதலில் ஏவுதளத்தில் இருந்து 30 மீட்டர் உயரத்திற்கு உந்தித்தள்ளும். அதன்பின்னர் மோட்டார் ஏவுகணையை பற்றவைக்கும். இவ்வளவு சக்திவாய்ந்த அக்னி-5 ஏவுகணையின் மூன்றாம்கட்ட சோதனை அடுத்த மாத இறுதியில் நடைபெற இருப்பதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரதட்சணை கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க
அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒரு பெண், அவளுடைய கணவராலோ அல்லது அவருடைய குடும்பத்தினராலோ சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டு வரை ஜெயில் தண்டனையும், அபராதமும் விதிக்க இ.பி.கோ. 498 ஏ பிரிவு வகை செய்கிறது. ஆனால், சமீபகாலமாக வரதட்சணை கொடுமை புகார்கள் அதிகரித்து வருகின்றன என்றும், இந்த சட்டம், மனைவிமார்களால் கேடயமாக பயன்படுத்தப்படாமல், ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாகவும் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
எனவே, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கவனமுடன் பின்பற்ற வேண்டும். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
அதன்படி, இ.பி.கோ. 498 ஏ பிரிவின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவரை தன்னிச்சையாக கைது செய்யக்கூடாது என்று அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். கைது செய்வதற்கான அவசியம் உள்ளதாக போலீஸ் அதிகாரிகளே திருப்தி அடையும் வகையில் காரணங்கள் இருந்தால்தான் கைது செய்ய வேண்டும். அந்த காரணங்கள் அடங்கிய பட்டியலை, போலீஸ் அதிகாரிகளுக்கு மாநில அரசுகள் அளிக்க வேண்டும்.
வழக்கு பதிவு செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குள், குற்றம் சாட்டப்பட்டவர் நேரில் ஆஜராவதற்கான நோட்டீசு அனுப்பப்பட வேண்டும். அந்த கால அவகாசத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் குறிப்பிட வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதில்லை என்ற முடிவை இரண்டு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டுக்கு போலீஸ் அதிகாரி தெரிவிக்க வேண்டும். அந்த கால அவகாசத்தை போலீஸ் சூப்பிரண்டு நீட்டித்துக் கொள்ளலாம். அதற்கான காரணத்தையும் எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்.
இந்த உத்தரவை பின்பற்ற தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் மீது சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டு முன்பு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும்.
மேலும், இத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது, போலீஸ் அதிகாரியின் அறிக்கையை ஆய்வு செய்து, மேற்கூறிய காரணங்கள் உள்ளதா என திருப்தி அடைந்த பிறகே, அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட வேண்டும்.
ஆனால், இந்த காரணங்கள் இல்லாமல் காவலில் வைக்க உத்தரவிட்டால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு மீது ஐகோர்ட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும்.
26 October 2014
உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுகிறது ஒடீசா அரசு
வரும் 2015 ஜூலை மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவது என ஒடீசா அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பயனாளர்களை தேர்வு செய்ய களமிறங்குகிறது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2011-ல் மத்திய அரசால் இந்தியாவில்
வாழும் இந்திய குடிமக்களுக்கு தங்கள் வாழ்வதற்கு தேவையான
பாதுகாப்பான உணவினை அவர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலமாகவோ அல்லது அவர்களுக்கு நேரடியாக பணமாக வழங்கியோ அவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக நலனை காக்கும் வகையில் வரையப்பட்ட சட்டம் ஆகும். இந்த சட்டம் செப்டம்பர் 12, 2013 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை மையம் ..
குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
பருவமழை
தென்மேற்கு பருவமழை நிறைவடைந்து, தமிழ்நாட்டுக்கு அதிக மழை பொழிவை தருகிற வடகிழக்கு பருவமழை கடந்த 18–ந்தேதியன்று தொடங்கியது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது.
சென்னையை பொருத்தமட்டில் நேற்று வானம் பிரகாசமாக காணப்பட்டது. மழைக்கான அறிகுறிகள் எதுவும் இன்றி காலையிலிருந்து வெயில் அடித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிர தாழ்வு மண்டலம்
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
அரபிக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, தீவிர தாழ்வு மண்டலமாக மாறி ஓமன் நாட்டின் சலாலா நகரின் கிழக்கு மற்றும் தென்கிழக்காக சுமார் 950 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 72 மணி நேரத்தில் ஓமன், ஏமன் நாட்டு கடலோர பகுதிகள் வழியாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது.
மழை பெய்யும்
குமரி பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
25 October 2014
குஷ்பு அதிமுகவில் இணைகிறாராம் ?
நடிகை குஷ்பு விரைவில் அதிமுகவில் இணைவார் என தக்வல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் திமுகவிலிருந்து விலகிய நடிகை குஷ்பு, மவுனம் காத்து வந்தார். இந்நிலையில், அதிமுகவில் குஷ்பு சேரப்போவதாக தகவல் வெளியாகி வருகின்றன.
இதனிடையே, தீபாவளி சஸ்பென்சாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்போவதாக குஷ்பு அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள குஷ்பு, விரைவில் நல்ல முடிவு எடுக்கப் போகிறேன். அதற்காக என்னை வாழ்த்துங்கள். என்ன முடிவு எடுக்கப் போகிறேன் என்று இப்போது சொல்ல மாட்டேன். உடனே புதுப்படம் அல்லது தொலைக்காட்சியில் நடிக்கப் போகிறேன் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு தி.மு.க.வில் இருந்தபோது கட்சித் தலைவர் பதவி தொடர்பாக மு.க.ஸ்டாலின் மீது விமர்சனம் செய்ததாக கூறிய திமுகவினர் அரை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, அவர் மீது செருப்பு வீச்சும் நடந்தமை குறிப்பிடத்தக்கது.
பாலியல் பலாத்கார சம்பவம்: விதிகளை மீறி பள்ளிக்கூடம் நடத்திய நிர்வாகி கைது
வயது மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக அந்த பள்ளி வாகன டிரைவர்களிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அதோடு விதிகளை மீறி பள்ளிக்கூடம் நடத்திய நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
4 வயது மாணவி பலாத்காரம்
பெங்களூர் ஜாலஹள்ளி கிராஸ், தும்கூர் மெயின் ரோட்டில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் 4 வயது மாணவி கடந்த 21–ந் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதனை கண்டித்து கடந்த 3 நாட்களாக அந்த தனியார் பள்ளி முன்பு பெற்றோர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக ஜாலஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பள்ளிக்கூடத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தார்கள். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்த 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்களில் பள்ளி ஊழியரான குண்டன்னா மேல் மட்டும் போலீசாருக்கு பலத்த சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, அவரை பிடித்து துருவி, துருவி விசாரித்து வருகிறார்கள். ஆனால் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.
டிரைவர்களிடம் விசாரணை
இதற்கிடையில், அந்த பள்ளிக்கூடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த பஸ்சுக்குள் சிறுமியை யாரோ அழைத்து செல்வது போன்ற காட்சிகள் காமிராவில் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, பள்ளியில் பணியாற்றும் பஸ், வேன் டிரைவர்களிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. மேலும் பள்ளி ஊழியர் குண்டன்னா உள்பட மற்ற டிரைவர்களின் புகைப்படங்களும் சிறுமி காண்பிக்கப்பட்டதாகவும், ஆனால் சிறுமி யாரையும் அடையாளம் காட்டவிலை என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று காலையில் சம்பவம் நடந்த தனியார் பள்ளிக்கூடத்திற்கு சட்டம்–ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார், துணை கமிஷனர் சுரேஷ் ஆகியோர் நேரில் சென்றார்கள். பள்ளிக்கூடம் முழுவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தகவல்களை சேகரித்தார்கள். பின்னர் சட்டம்–ஒழுங்கு கூடுதல் கமிஷனர் அலோக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
சாட்சிகள் திரட்ட வேண்டும்
“சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எல்லா கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பள்ளி ஊழியர்கள், டிரைவர்களிடம் விசாரித்து வருகிறோம். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 வயது தான் ஆகிறது. இதனால் சிறுமியிடம் அடிக்கடி விசாரணை நடத்த முடியவில்லை. இது ஒரு பதற்றமான வழக்கு ஆகும்.
அதனால் சரியான தகவல்கள், சாட்சிகள், பலமான ஆதாரங்கள் திரட்ட வேண்டிய அவசியம் உள்ளது. அப்போது தான் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்து கொள்ள முடியும். சிறுமி பலாத்கார வழக்கில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் குற்றவாளியை கைது செய்வோம்.“இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி நிர்வாகி கைது
கர்நாடக பொது அறிவுரை கமிஷனர் மொகமது மொசின், விதிமுறையை மீறி செயல்பட்டு வரும் அந்த தனியார் பள்ளி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் சிபாரிசு செய்திருந்தார். அதன்பேரில் நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகம் மீது கிரிமினல் வழக்கு, போக்சோ சட்டப்பிரிவுபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், விதிமுறையை மீறி பள்ளிக்கூடம் நடத்தி வந்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மஞ்சுநாத் என்பவர் ஜாலஹள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரிலும், கல்வித்துறை அதிகாரியின் சிபாரிசு பேரிலும் அந்த பள்ளியின் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், இணை செயலாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் பள்ளியின் செயலாளரான கே.ஆர்.கே.ரெட்டி என்பவரை ஜாலஹள்ளி போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியின் தலைவர் உள்பட 3 பேரையும் கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பள்ளி நிர்வாகத்தின் முறைகேடுகள்
கர்நாடக பொது அறிவுரை கமிஷனர் மொகமது மொசின் பள்ளி நிர்வாகம் செய்துள்ள முறைகேடுகள் குறித்து கூறியதாவது–
“பள்ளிக்கூட நிர்வாகம் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 34, 418, 420(மோசடி) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கல்வி உரிமைச்சட்டம் பிரிவு 18(5)–ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது உரிய அனுமதி பெறாமல் பள்ளிக்கூடம் நடத்தினால் இந்த பிரிவின் கீழ் அந்த பள்ளிக்கூடத்தை செயல்படாமல் நிறுத்தி வைக்கலாம். மேலும் அந்த பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கலாம். அதோடு விதிமுறைகள் நீடிக்கும் ஒவ்வொரு நாளைக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கலாம்.
இந்த பள்ளி நிர்வாகம் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு அங்கீகாரம் பெற்று இருப்பதாக பொதுமக்களை ஏமாற்றி இருக்கிறது. இப்படி செய்ததின் மூலம் ஏராளமான மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடி இருக்கிறது. சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் இல்லாமலேயே சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பாடங்களை நடத்தி இருக்கிறார்கள். 5–ம் வகுப்பு வரை கன்னட வழியில் பாடம் நடத்த மட்டுமே இந்த பள்ளி நிர்வாகம் அனுமதி பெற்று உள்ளது. ஆனால் 7–ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் பாடம் நடத்தி உள்ளனர். அதோடு உரிய அனுமதி இல்லாமல் நர்சரி பள்ளியையும் நடத்தி இருக்கிறார்கள்.இவ்வாறு கர்நாடக பொது அறிவுரை கமிஷனர் மொகமது மொசின் கூறினார்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் பலி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஆசனூர். தாளவாடி, கேர்மாளம், பவானி சாகர் உள்ளிட்ட வனப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.தொடர்ந்து மழை பெய்து வருவதால் சத்தியமங்கலம் பகுதியில் தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளம் செல்கிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வடவள்ளி வேடர் காலனி பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 25) , சுரேந்திர பிரசாத் (23). இருவரும் உறவினர்கள். நேற்று இரவு நண்பர் ஒருவருடன் மோட் டார் சைக்கிளில் சினிமா பார்க்க சென்றனர். நள்ளிரவில் சினிமா முடிந்ததும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந் தனர்.
சத்தியமங்கலம் கஸ்தூரி நகர் அருகே வந்த போது அங்குள்ள தரைப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மோட்டார் சைக்கிளில் வந்த வினோத் உள்பட 3 பேரும், தரைப்பாலத்தை கடக்க முயன்றனர்.அப்போது காட்டாற்று வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் வினோத், சுரேந்திர பிரசாத் மற்றும் நண்பர் ஆகிய 3 இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் தரைப்பால வெள்ளத்தில் கயிறு கட்டி தேட ஆரம்பித்தனர். கிராம மக்களும் உடல்களை தேடினர். இன்று அதிகாலையில்
வினோத், சுரேந்திரபிரசாத் ஆகியோரது உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர்களுடன் சென்ற நண்பரின் உடல் கிடைக்க வில்லை. அவரது உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களுக்கு எதிராக குற்ற ???
இந்தியாவிற்கு எதிராக வேவுபார்த்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்களுக்கு எதிரான ஆரம்ப குற்ற பத்திரிகை நேற்று சென்னை நகர நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்பிரல் மாதம் வெளிநாடொன்றில் இருந்து தமிழக கியூ பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து சாகீர் ஹூசேன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த கைதையடுத்து ஏனையவர்களும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
24 October 2014
ஜெயலலிதா இரங்கல் தனி முத்திரை பதித்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்’-
ஜெயலலிதா இரங்கல் தனி முத்திரை பதித்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்’-
தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்’ என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.
பழம்பெரும் திரைப்பட நடிகரும், ‘எஸ்.எஸ்.ஆர்.’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான ‘லட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 86&வது அகவையில் இன்று (நேற்று) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
மேடை நாடகங்கள் மூலம் திரையுலகிற்குள் நுழைந்து, முதலில் சிறு சிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்த எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு ‘முதலாளி’ என்ற திரைப்படம் தான் முகவரி பெற்றுத்தந்தது. ‘குமுதம்’, ‘சாரதா’, ‘சிவகங்கை சீமை’, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மூலம் தமிழக மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு
தனது தெளிவான தமிழ் வசன உச்சரிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். ரசிகர்களால் ‘லட்சிய நடிகர்’ என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன், தலைமுறை தாண்டி தற்போதைய இளம் தலைமுறை நடிகர்களுடனும் நடித்த பெருமைக்குரியவர். திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தடம் பதித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியவர்.
எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும். தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்த எஸ்.எஸ்.ராஜேந்திரனின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.
எஸ்.எஸ்.ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
குறைவான சம்பளம் வழங்கிய நிறுவனத்துக்கு அபராதம்
இந்தியர்களுக்கு அமெரிக்காவில் இ.எப்.ஐ. என்ற நிறுவனம், பாஸ்டர் சிட்டியிலிருந்து பிரிமாண்ட் என்ற இடத்துக்கு இடம் பெயர்ந்தது. அப்போது, அந்த நிறுவனத்துக்கு கம்ப்யூட்டர் இணைப்புகள் வழங்குவது தொடர்பான பணியை 8 இந்திய பணியாளர்கள் செய்து கொடுத்தனர். அவர்களை வாரத்துக்கு 122 மணி நேரம் வரை வேலை செய்ய வைத்த நிறுவனம்,
அவர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமாக மணிக்கு 1.21 டாலர் (சுமார் ரூ.72) மட்டுமே வழங்கியது.
இது தொடர்பான ரகசிய தகவல், அமெரிக்க தொழிலாளர் நலத்துறைக்கு சென்றது.
அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய தொழிலாளர்கள் 8 பேருக்கு ஊதியமாக மேலும் 40 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.24 லட்சம்) வழங்க தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டது.
மேலும் இந்திய பணியாளர்களுக்கு குறைவான சம்பளம் தந்த குற்றத்துக்காக அந்த நிறுவனத்துக்கு 3 ஆயிரத்து 500 டாலர் (சுமார் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம்) அபராதமும் விதிக்கப்பட்டது.
23 October 2014
லாரி கவிழ்ந்து விபத்து 5 பேர் உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் ஒங்கம்பாடியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்த சிலர், வரதம்பட்டியில் துக்க நிகழ்ச்சிக்கு லாரியில் சென்றுள்ளனர். லாரி, அணைக்கட்டு அருகே ஒங்கம்பாடியில் சென்றுக் கொண்டியிருந்தபோது கவிழ்ந்தது. இந்த சம்பவத்தின் 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லாரி பள்ளத்திற்குள் கவிழ்ந்துள்ளது.
லாரி கவிழ்ந்த தகவல் அறிந்த அப்பகுதியினர் உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டனர். காயம் அடைந்தவர்கள் வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். லாரியில் அதிகமான மக்கள் பயணம் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் விவரம்:அடுத்த வாரம் ???
சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அடுத்த வாரம் மத்திய அரசு சமர்ப்பிக்க உள்ளது. முதற்கட்டமாக சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து 136 பேரின் விவரங்களை மத்திய அரசு சமர்ப்பிக்கிறது. பிரதமர் மோடி, மத்திய நிதி மந்திரி மற்றும் பா.ஜ.க. தலைவர் அருண் ஜெட்லி ஆகியோருக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கருப்பு பணம் பதுக்கிய 800 பேர் பற்றிய விவரங்களை ஐரோப்பிய அரசுகள் அளித்துள்ள நிலையில் முதலில் 136 பேரின் பட்டியலை மட்டும் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அரசின் இம்முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மத்திய அரசு பணம் பதுக்கியவர்கள் பற்றிய ஒட்டுமொத்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. வரும் திங்களன்று இந்த விவரங்கள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுடன், மறுநாள் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
சர்வதேச நிதி நேர்மை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பின் படி சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுவும் 1948 லிருந்து 2008 ஆம் ஆண்டு வரை பதுக்கிய கறுப்பு பணம் பற்றிய விவரம் தான்.
சுவிஸ் வங்கியில் கடந்த 2012 ஆம் ஆண்டு 9514 கோடி ரூபாய் கருப்பு பணம் பதுக்கப்பட்ட நிலையில் ஒரு வருடத்தில் (அதாவது 2013) 40 சதவிகித அளவுக்கு கருப்பு பண பதுக்கல் அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு 14000 கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
மீண்டும் ஜெ.ஜெயலலிதா முதல்வராவார்- நடிகர் சங்கம் அறிக்கை
சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் நளினி, பொதுச் செயலாளர் பூ விலங்கு மோகன், பொருளாளர் தினகரன்
ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தமிழக மக்களின் நலன் காக்கும் தங்கத் தலைவியாம் மக்களின் முதல்வர் அம்மா சோதனைகளை கடந்து தமிழகம் திரும்பியிருப்பது
சின்னத்திரை கலைஞர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.அவர்கள் அனைத்து தடைகளையும் வென்றெடுத்து மீண்டும் தமிழக முதல்வராக
ஆட்சிக் கட்டிலில் அமர்வது திண்ணம்.
பெற்ற தாய்க்கு மேலாக தன்னை நாடி வரும் கோடான கோடி தமிழ் இதயங்களின் தேவைகளை கொடுத்து, தமிழ் மக்களின் துயரங்களை துடைக்கும் புரட்சித்தலைவிக்கு கசந்த காலம் வசந்த காலமாக மாற சின்னத்திரை நடிகர் சங்கம் பிரார்த்தனை செய்கிறது
22 October 2014
கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை, பொதுமக்கள் தீபாவளியை கொண்டாடும் வகையில் நேற்று முன்தினம் மாலை முதல் விடுமுறை அளித்தது.
இந்நிலையில் இலங்கைக்கு அருகே வளி மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசம் மற்றும் தூத்துக்குடியில் 9 செ.மீ, குன்னூரில் 8 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி .நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம் தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம் தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
21 October 2014
தீ விபத்து: பட்டாசு தொழிற்சாலையில் 10 பேர் பலி
ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் பலியானார்கள். தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகளை தயாரித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தீப்பிடித்தாக கூறப்படுகிறது. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பிடித்த தீ மள மளவென தொழிற்சாலை முழுவதும் பரவியதாக தெரிகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
இத்தீவிபத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தொழிற்சாலையின் மற்ற பகுதிகளிலும் தீ வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது.
தீயை அணைக்க தீயணைப்பு வண்டிகள் அப்பகுதி விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 October 2014
கடந்த 5 மாதங்களில் ரூ.470 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
இந்தியா முழுவதும் 5 மாதங்களில் ரூ.470 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 1,780 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உலகிலேயே தங்கத்தை அதிகம் பயன்படுத்துகிற நாடாக இந்தியா திகழ்கிறது.
இந்த நிலையில் சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் உள்ள ஸ்ரீநகர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், டெல்லி, ஆமதாபாத், கவுகாத்தி, நாக்பூர், மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், கோவா, பெங்களூர், சென்னை, கோழிக்கோடு, கோவை, திருச்சி, கொச்சி, திருவனந்தபுரம், போர்ட்பிளேர் சர்வதேச விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நடவடிக்கையை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் எடுத்துள்ளது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் தொடங்கி ஆகஸ்டு வரையிலான 5 மாத காலகட்டத்தில் ரூ.470 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுங்கத்துறையினர் 1,780 வழக்குகளை தாக்கல் செய்திருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக வட்டாரங்கள் கூறுகின்றன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், வழக்குகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
2013-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் தங்க கடத்தல் தொடர்பாக 550 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் ரூ.153 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்கத்திற்கு பெருகி வரும் கிராக்கியை சமாளிக்க, கடத்தல்காரர்கள் தங்க கடத்தலில் புதிய வழிமுறைகளை பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கடத்தல்காரர்கள் கடல் மார்க்கத்தையும் தங்க கடத்தலில் இருந்து விட்டு வைக்கவில்லை. குளிர்பான பாட்டில்களுக்கு மத்தியில் வைத்து கடத்தி வந்த தங்கம், குஜராத் துறைமுகம் ஒன்றில் கைப்பற்றப்பட்டுள்ளது.
லாரி மீது கார் மோதல்: பெண் உள்பட 3 பேர் காயம்
கன்னியாகுமரி மாவட்டம் ஆனந்தமேடு பகுதியை சேர்ந்தவர் உமாநாத் (வயது38). நேற்று இவரும் இவரது உறவினர் சந்தோஷ் என்பவரின் மனைவி தேவஸ்ரீ (34) மற்றும் இவரது 2½வயது பெண் குழந்தை ஸ்ரீதிகா ஆகிய 3 பேரும் ஒரு காரில் சென்னை புறப்பட்டு வந்தனர். காரை உமாநாத் ஓட்டி வந்தார்.
திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் அருகே எழுத்தூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற உமாநாத் மற்றும் காரில் பயணம் செய்த தேவஸ்ரீ, ஸ்ரீதிகா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
19 October 2014
சுவரில் கார் மோதி தாய்–மகன் உள்பட 4 பேர் பலி…!!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடையை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 35). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று நள்ளிரவு முருகானந்தம் , அவரது மனைவி ஆனந்தி , தாய் வசந்தா(60) மற்றும் உறவினர்கள் 14 பேர் ஒரு காரில் புறப்பட்டனர். காரை முருகானந்தம் ஓட்டினார். இன்று காலை 5
மணிக்கு கார் தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாற்று ஓடை ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் நிலைதடுமாறி ரவுண்டானா சுவரில் பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த முருகானந்தம், அவரது மனைவி ஆனந்தி, தாய் வசந்தா, உறவினர் பூமிநாதன் மகள் சிவசங்கரி (3) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து
சென்றனர். பின்னர் காயமடைந்து உயிருக்கு போராடிய 10பேரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்குதீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்கள் விவரம் வருமாறு:– ஒத்தக்கடையை சேர்ந்த மீனா (30), வைஷ்ணவி(5), அழகுசுந்தரம் (25), பிரகாஷ்(7), முத்துலட்சுமி (30), ஸ்ரீராம்(12), வெள்ளையப்பன்(50), தமிழரசன் (40),அசோதை (50), ஈஸ்வரி (47). இதில்
ஈஸ்வரியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்த காரில் 8 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால் அந்த காரில் 14 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி முத்தையாபுரம் வளைவு அருகே செல்லும் போது அப்பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் முருகானந்தம் அங்குள்ள வளைவை கவனிக்காமல் நேராக ரவுண்டானாவில் மோதிவிட்டார். இதனால்தான் விபத்து நிகழ்ந்துள்ளது. -
18 October 2014
கருப்புப் பணம் குறித்த தகவல்களை வழங்க சுவிஸ் அரசு ஒப்புதல்! -
சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்புப் பணம் குறித்து தகவல்களை வழங்க அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசியதாவது.. எச்எஸ்பிசி வங்கியிலும், வரிவிதிப்பு குறைவான லீக்டென்ஸ்டீன் நாட்டிலும் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்ள சுவிட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த விஷயத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது தவிர இந்தியர்கள் வெளிநாடுகளில் வைத்துள்ள வங்கிக் கணக்குகள் தொடர்பாக நமது புலனாய்வு அமைப்புகள் திரட்டியுள்ள தகவல்களின் உண்மைத்தன்மையை சுவிஸ் அரசு உறுதிப்படுத்தும். வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பான விவரங்களை பகிரங்கமாக வெளியிட முடியாமல் இருப்பதற்கு 1995இல் அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு, ஜெர்மனியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம்தான் காரணம் என்றார் அவர்.
ஜெயலலிதா என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான ஜெயலலிதா என்னவெல்லாம் செய்யலாம் அல்லது செய்ய முடியாது என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் சில வழக்கறிஞர்களிடம் விசாரித்த போது அவர்கள் கூறிய தகவல் வருமாறு... தற்போது தண்டனை மீதான இடைக்காலத் தடை மற்றும் ஜாமீன் பெற்ற நிலையில் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராகவோ முதல்–அமைச்சராகவோ ஆகமுடியாது. ஆனால் அவருடைய ஜாமீன் குறித்து எந்த நிபந்தனையையும் நீதிமன்றம் விதிக்காததால், அவரால் முழுமையாக கட்சிப்பணியாற்ற முடியும். தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியும். கட்சி கூட்டங்களை தலைமையேற்று நடத்த முடியும். தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவருடைய கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாகவும் பொறுப்புகளில் உள்ளதாலும் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்களையும் அழைத்து கட்சித்தலைவர் என்ற முறையில் ஆலோசனைகள் நடத்த எந்தத் தடையும் இல்லை.
ஆனால் அரசாங்க விஷயத்தில் எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது. எந்த வகையான அதிகாரத்தையும் செலுத்த முடியாது. மேலும் சுப்ரீம் கோர்ட்டு எந்த வகையான நிபந்தனையும் விதிக்காததால் பெரிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவி என்ற முறையில் தமிழக மக்களின் நலனுக்காக அல்லது ஏதாவது ஒருநலத்திட்டம் தொடர்பாகவோ நிதி ஒதுக்கீடு தொடர்பாகவோ ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் அல்லது மத்திய அமைச்சர்களையோ சந்திக்க எந்தவகையான தடையும் இல்லை.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் கட்சித்தலைவி என்ற முறையில் கட்சித் தலைமையகத்தில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்த முடியும். கட்சித்தலைவி என்ற முறையில் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் கீழ் உள்ள ஆணையங்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் எந்தவகையான தடையும் இல்லை.
ஆனால் அரசாங்க விஷயத்தில் எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது. எந்த வகையான அதிகாரத்தையும் செலுத்த முடியாது. மேலும் சுப்ரீம் கோர்ட்டு எந்த வகையான நிபந்தனையும் விதிக்காததால் பெரிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவி என்ற முறையில் தமிழக மக்களின் நலனுக்காக அல்லது ஏதாவது ஒருநலத்திட்டம் தொடர்பாகவோ நிதி ஒதுக்கீடு தொடர்பாகவோ ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் அல்லது மத்திய அமைச்சர்களையோ சந்திக்க எந்தவகையான தடையும் இல்லை.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் கட்சித்தலைவி என்ற முறையில் கட்சித் தலைமையகத்தில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்த முடியும். கட்சித்தலைவி என்ற முறையில் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் கீழ் உள்ள ஆணையங்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் எந்தவகையான தடையும் இல்லை.
17 October 2014
கொட்டும் மழையில் அதிமுகவினர் கொண்டாட்டம்.
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால், சென்னையில் கொட்டும் மழையில் அதிமுகவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர். அதிமுக 43வது தொடக்கவிழா கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி, அமைச்சர்கள், நிர்வாகிகள் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். எனினும், ஜெயலலிதா சிறையில் இருந்ததால் உற்சாகமில்லாமல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இன்று மதியம் உச்சநீதிமன்றம்
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. அப்போது சென்னையில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது என்ற தகவல் வெளியானதும், அதிமுக நிர்வாகிகள் கொட்டும் மழையில் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அதிமுக தொண்டர் ஒருவர் கட்சி அலுவலகத்தில் இருந்த எம்ஜிஆர் சிலைக்கு சாக்லெட் அபிஷேகம் செய்தார்.
விழாவிற்கு கறுப்புசட்டை அணிந்து வந்த தொண்டர்கள் சட்டையை கழற்றி வீசினர். இதற்கிடையில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கோகுல இந்திரா, தங்கமணி, மோகன் உள்ளிட்டோர் தலைமை அலுவலகம் வந்தனர். இன்று பிற்பகல் அனைத்து அமைச்சர்களும், தலைமை கழக நிர்வாகிகளும் பெங்களூர் புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.பெங்களூர் சிறை அருகேகொண்டாட்டம்சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு இன்று எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், அவர் அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை பகுதியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்திருந்தனர். ஜெ.வுக்கு ஜாமீன் கிடைத்த தகவல் அறிந்ததும் அவர்கள் உற்சாகம் அடைந்தனர்.
சிவகங்கை சட்டபேரவை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.முருகானந்தம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள், திருச்சி மாவட்ட வக்கீல் பிரிவு நிர்வாகி ஜெயராமன், மதுரை மாவட்ட வக்கீல் பிரிவு நிர்வாகி சுந்தரபாண்டியன், கர்நாடக மாநில அதிமுக வக்கீல் பிரிவு செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் அதிமுக வக்கீல்கள் சிறை முகப்பு வாயிலில் ஜெயலலிதா வாழ்க என்று முழக்கம் எழுப்பினர். பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். பரப்பனஅக்ரஹார பகுதி முழுவதும் அதிமுக தொண்டர்களால் நிரம்பி வழிந்தது.
இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்கள் மீது கல்வீசி தாக்குதல்!..
நடுக்கடலில் மீன்பிடித்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 15ம் திகதி 535 விசைபடகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கம் போல் மீன்வளம் நிறைந்த இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு 6 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து, மீன்பிடிக்க விடாமல் விரட்டியதாக தமிழக ஊடகமான தினமலர் செய்தி வௌியிட்டுள்ளது.
பின் திடீரென, கப்பலில் வைத்திருந்த கற்களை கொண்டு மீனவர்கள் மீது இலங்கை வீரர்கள் சரமாரியாக வீசியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், இராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த செல்வம், பொக்கிஷம், சேவியர் ஆகியோருக்கு சொந்தமான படகின் சாரதி அறை கண்ணாடி உடைந்தது.
மீனவர்கள் படகினுள் மறைந்து கொண்டதால், காயமின்றி தப்பினர். மேலும் 20 க்கும் மேலான படகின் மீனவர்கள், கடலில் இழுபட்டு வந்த வலையை வெட்டி கடலில் மூழ்கடித்து வெறும் படகுடன் இராமேஸ்வரம் கரைக்கு திரும்பினர்.
16 October 2014
தமிழக சிறைக்குஜெயலலிதாவை மாற்றுமாறு கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில்??
சொத்துக் குவிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டு, பார்ப்பன அக்ரஹார சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா ஜெயராமை தமிழக சிறைக்கு மாற்றுமாறு கோரி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த வராகி என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தமிழக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
4 ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா ஜெயராம் கர்நாடக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால், இரு மாநிலங்களினதும் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் போராட்டங்கள், கடையடைப்பு, பகிஷ்கரிப்பு என்பன இடம்பெறுவதாகவும், இரு மாநிலங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணை நியாயமாக நடைபெற வேண்டுமென்ற காரணத்தால் வழக்கு தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டதாகவும், தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளதால் குற்றவாளியை கர்நாடகாவில் தடுத்துவைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதிகள் மாற்றல் சட்டத்திற்கு அமைவாக ஜெயலலிதா ஜெயராமை தமிழக சிறைக்கு மாற்ற முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களின் அமைதி, மக்களின் நலன் என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சொத்துக் குவிப்பு வழக்கில் அறிவித்தல் விடுத்தால், நாளை இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவதாக அரச சிறப்பு சட்டத்தரணி பவானி சிங் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை நாளை இடம்பெறவுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ள போதிலும், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தமக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவ்வாறு அறிவித்தல் கிடைக்கும் பட்சத்தில் பிணை மனு மீதான விசாரணைக்கு நாளை ஆஜராவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களுர் விசேட நீதிமன்றத்திலும், கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும் அரச தரப்பு சட்டத்தரணியாக பவானி சிங் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிணை மனு மீதான வழக்கு விசாரணையில் ஜெயலலிதா சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பாலி எஸ் நாரிமன் ஆஜராகவுள்ளதாகவும் இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
15 October 2014
பெண்ணிடம் சில்மிஷம்- இந்திய வாலிபருக்கு சிறை தண்டனை…!!
சிங்கப்பூரில் உள்ள செரங்கூன் ரெயில் நிலையத்தில் கடந்த 7-3-2014 அன்று ரெயிலை விட்டிறங்கிய ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண், சாலை பகுதிக்கு செல்வதற்காக அங்கிருந்த மின்னுயர்த்தியில் (லிப்ட்) ஏறினார். லிப்ட்டின் கதவு மூடப்போகும் நேரத்தில் வேகமாக ஓடி வந்து லிப்ட்டுக்குள் நுழைந்துக் கொண்ட ஒரு வாலிபர், லிப்ட் மேலே போகும் அந்த இடைவெளி நேரத்தில் கிடைத்த தனிமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து, முத்தமிட முயன்றார். பதறிப்போன அந்தப் பெண், அவரிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டதோடு மட்டும் இருந்து விடாமல், சாலை பகுதியைஅ அடைந்ததும் லிப்ட்டின் கதவு திறக்கும் நேரத்தில் தன்னிடம் வரம்பு மீற முயன்ற வாலிபரின் சட்டையை கொத்தாக பிடித்து, வாசலில் நின்றிருந்த போலீசாரிடம் ஒப்படைத்து,
நடந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்தியாவை சேர்ந்த அந்த வாலிபர், பிழைப்பு தேடி சிங்கப்பூருக்கு வந்து, இங்கு எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருவது தெரியவந்தது. அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது உண்மை தான் என்று வாக்குமூலம் அளித்த கந்தசாமி கிருஷ்ணன்(27) என்னும் அந்நபரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார்
அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பாக கடந்த 6 மாத காலமாக கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றத்தை கந்தசாமி கிருஷ்ணன் ஒப்புக் கொண்டதால் அவருக்கு 4 வார சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
14 October 2014
போலீசார் போல் நடித்து நகைக்கடையில் 8 கிலோ தங்க நகை கொள்ளை
இவ்வகையில், ஆர்டரின் பேரில் செய்யப்பட்ட 8 கிலோ தங்க நகைகளைப் பெற்றுக் கொண்ட மும்பை நகைக்கடையின் பணியாளர்களான ஜித்தேன் பிரசாத், தேவேந்திரா ஆகியோர் ஐதராபத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று, அங்கிருந்து மும்பைக்கு செல்லும் திட்டத்தில் லக்காடி கா புல் பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
பெங்களூர் செல்லும் பஸ்சில் ஏற முயன்றபோது, அவர்களை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. தாங்கள் கிரைம் பிராஞ்ச் போலீசார் என்று கூறிய அந்த கும்பல அவர்கள் கையில் இருந்த சூட்கேஸை சோதனையிட வேண்டும் என்று கூறியது.
இதற்கு அவர்கள் மறுக்கவே, சற்றும் எதிர்பாராத வகையில் அந்த சூட்கேஸை பறித்துக் கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அந்த நால்வரும் பஸ் நிலையத்தை விட்டு தப்பியோடினர்.
சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ தங்க நகையை சில நொடிகளுக்குள் பறிகொடுத்த மும்பை நகைக்கடை ஊழியர்கள், இச்சம்பவம் தொடர்பாக அளித்த புகாரையடுத்து, வழக்குப்பதிவு செய்துள்ள சைபாபாத் போலீசார், இந்த கொள்ளைக்கு காரணமான குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
12 October 2014
கனடா தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமனம்
இந்தியாவுக்கான கனடா நாட்டுத் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடிர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகமும், வர்த்தக மேம்பாட்டுத் துறையும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவுக்கான கனடா தூதராக நாடிர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். தனது அனுபவத்தைப் பயன்படுத்தி, கனடா – இந்தியா நாடுகளிடையேயான உறவை அவர் மேலும் பலப்படுத்துவார்.இருதரப்பு வர்த்தகம், சர்வதேசப் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிக்க அவரது நியமனம் உறுதுணையாக இருக்கும்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பேர்ட், சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் எட் ஃபாஸ்ட் ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இருதரப்பு வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அவர்களுடன் நாடிர் படேலும் பேச்சுவார்த்தியில் கலந்துகொள்வார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா பாணி
அண்மையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக அந்நாடு வாழ் இந்தியரான ரிச்சர்ட் வெர்மாவை ஒபாமா நியமித்திருந்தார். தற்போது அமெரிக்கா பாணியில் கனடாவும் இந்தியாவுக்கான தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடிர் படேலை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது
சீமான் பேட்டி ஜெயலலிதா வெளியே வருவார்
சீமான் பேட்டி ஜெயலலிதா வெளியே வருவார்
வயது மற்றும் அவர் வகித்த பதவியைக்கருதி அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கும் என்று நம்புவதாக சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சி
கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் அந்த கட்சியில் புதிதாக இணையும் தொண்டர்கள் அறிமுக கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் இளைஞர் பாசறை மாநில செயலாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம், அறிவுச்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:–
ஜாமீன் கிடைக்கும்
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வயது மற்றும் அவர் வகித்த பதவியை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று நம்புகிறேன். அவரைப் பற்றி விமர்சிக்க விஜயகாந்துக்கு அருகதை இல்லை. ஜெயலலிதாவின் தயவால் ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்ற அவர், தனது எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து விட்டு விமர்சிக்கட்டும். ஜெயலலிதாவின் வழக்கை தமிழ்நாட்டுக்கு மாற்றும் முயற்சி காலம் கடந்த முயற்சியாகும்.
மத்திய அரசு முன்வரவேண்டும்
தமிழக மீனவர் மற்றும் இலங்கை தமிழர் பிரச்சினையில் கடந்த கால காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைபாட்டினைத்தான் தற்போதைய பா.ஜனதா அரசும் எடுத்து வருகிறது. இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. என்.எல்.சி.தொழிலாளர்களின் உணர்வை மதித்து அவர்களுடைய பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)