சீமான் பேட்டி ஜெயலலிதா வெளியே வருவார்
வயது மற்றும் அவர் வகித்த பதவியைக்கருதி அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கும் என்று நம்புவதாக சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சி
கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் அந்த கட்சியில் புதிதாக இணையும் தொண்டர்கள் அறிமுக கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் இளைஞர் பாசறை மாநில செயலாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம், அறிவுச்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:–
ஜாமீன் கிடைக்கும்
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வயது மற்றும் அவர் வகித்த பதவியை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று நம்புகிறேன். அவரைப் பற்றி விமர்சிக்க விஜயகாந்துக்கு அருகதை இல்லை. ஜெயலலிதாவின் தயவால் ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்ற அவர், தனது எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து விட்டு விமர்சிக்கட்டும். ஜெயலலிதாவின் வழக்கை தமிழ்நாட்டுக்கு மாற்றும் முயற்சி காலம் கடந்த முயற்சியாகும்.
மத்திய அரசு முன்வரவேண்டும்
தமிழக மீனவர் மற்றும் இலங்கை தமிழர் பிரச்சினையில் கடந்த கால காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைபாட்டினைத்தான் தற்போதைய பா.ஜனதா அரசும் எடுத்து வருகிறது. இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. என்.எல்.சி.தொழிலாளர்களின் உணர்வை மதித்து அவர்களுடைய பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment