Search This Blog n

19 October 2014

சுவரில் கார் மோதி தாய்–மகன் உள்பட 4 பேர் பலி…!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடையை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 35). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று நள்ளிரவு முருகானந்தம் , அவரது மனைவி ஆனந்தி , தாய் வசந்தா(60) மற்றும் உறவினர்கள் 14 பேர் ஒரு காரில் புறப்பட்டனர். காரை முருகானந்தம் ஓட்டினார். இன்று காலை 5
மணிக்கு கார் தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாற்று ஓடை ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் நிலைதடுமாறி ரவுண்டானா சுவரில் பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த முருகானந்தம், அவரது மனைவி ஆனந்தி, தாய் வசந்தா, உறவினர் பூமிநாதன் மகள் சிவசங்கரி (3) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து
 சென்றனர். பின்னர் காயமடைந்து உயிருக்கு போராடிய 10பேரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்குதீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்கள் விவரம் வருமாறு:– ஒத்தக்கடையை சேர்ந்த மீனா (30), வைஷ்ணவி(5), அழகுசுந்தரம் (25), பிரகாஷ்(7), முத்துலட்சுமி (30), ஸ்ரீராம்(12), வெள்ளையப்பன்(50), தமிழரசன் (40),அசோதை (50), ஈஸ்வரி (47). இதில்
ஈஸ்வரியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்த காரில் 8 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால் அந்த காரில் 14 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி முத்தையாபுரம் வளைவு அருகே செல்லும் போது அப்பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் முருகானந்தம் அங்குள்ள வளைவை கவனிக்காமல் நேராக ரவுண்டானாவில் மோதிவிட்டார். இதனால்தான் விபத்து நிகழ்ந்துள்ளது. -
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment