இந்தியர்களுக்கு அமெரிக்காவில் இ.எப்.ஐ. என்ற நிறுவனம், பாஸ்டர் சிட்டியிலிருந்து பிரிமாண்ட் என்ற இடத்துக்கு இடம் பெயர்ந்தது. அப்போது, அந்த நிறுவனத்துக்கு கம்ப்யூட்டர் இணைப்புகள் வழங்குவது தொடர்பான பணியை 8 இந்திய பணியாளர்கள் செய்து கொடுத்தனர். அவர்களை வாரத்துக்கு 122 மணி நேரம் வரை வேலை செய்ய வைத்த நிறுவனம்,
அவர்களுக்கு மிகக்குறைந்த ஊதியமாக மணிக்கு 1.21 டாலர் (சுமார் ரூ.72) மட்டுமே வழங்கியது.
இது தொடர்பான ரகசிய தகவல், அமெரிக்க தொழிலாளர் நலத்துறைக்கு சென்றது.
அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய தொழிலாளர்கள் 8 பேருக்கு ஊதியமாக மேலும் 40 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.24 லட்சம்) வழங்க தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டது.
மேலும் இந்திய பணியாளர்களுக்கு குறைவான சம்பளம் தந்த குற்றத்துக்காக அந்த நிறுவனத்துக்கு 3 ஆயிரத்து 500 டாலர் (சுமார் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம்) அபராதமும் விதிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
Post a Comment