சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அடுத்த வாரம் மத்திய அரசு சமர்ப்பிக்க உள்ளது. முதற்கட்டமாக சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து 136 பேரின் விவரங்களை மத்திய அரசு சமர்ப்பிக்கிறது. பிரதமர் மோடி, மத்திய நிதி மந்திரி மற்றும் பா.ஜ.க. தலைவர் அருண் ஜெட்லி ஆகியோருக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கருப்பு பணம் பதுக்கிய 800 பேர் பற்றிய விவரங்களை ஐரோப்பிய அரசுகள் அளித்துள்ள நிலையில் முதலில் 136 பேரின் பட்டியலை மட்டும் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அரசின் இம்முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மத்திய அரசு பணம் பதுக்கியவர்கள் பற்றிய ஒட்டுமொத்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. வரும் திங்களன்று இந்த விவரங்கள் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுடன், மறுநாள் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
சர்வதேச நிதி நேர்மை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பின் படி சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுவும் 1948 லிருந்து 2008 ஆம் ஆண்டு வரை பதுக்கிய கறுப்பு பணம் பற்றிய விவரம் தான்.
சுவிஸ் வங்கியில் கடந்த 2012 ஆம் ஆண்டு 9514 கோடி ரூபாய் கருப்பு பணம் பதுக்கப்பட்ட நிலையில் ஒரு வருடத்தில் (அதாவது 2013) 40 சதவிகித அளவுக்கு கருப்பு பண பதுக்கல் அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு 14000 கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
Post a Comment