நெடுந்தீவில் கரையொதுங்கிய இந்திய மீனவரின் சடலம் யாழ். வட்டுக்கோட்டையில் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
செப்ரெம்பர் மாதம் 6ஆம் திகதி இராமேஸ்வரத்தில் இருந்து படகில் மீன்பிடிக்க வந்த 4 இந்திய மீனவர்கள் படகு கவிழ்ந்தமையால் காணாமல் போயிருந்தனர். அவர்களை தேடும் பணியை இந்திய கடலோரக் காவற்படையினரும் இலங்கைக் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்டனர்.
எனினும் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். ஏனைய மூன்று பேரூம் காணாமல் போயிருந்தனர். பின்னர் ஒரு வாரத்தில் நெடுந்தீவு கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியிருந்தது.
குறித்த சடலத்தின் கைகளில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டதினை ஆதாரமாக கொண்டு சடலம் இந்திய துணைத்தூரகத்தினால் இராமேஸ்வர்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் ( வயது 53 ) என்று அடையாளம் காணப்பட்டது.
தொடர்ந்தும் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. தென் இந்திய திருச்சபையினை சேர்ந்தவர் என்பதால் குடும்பத்தினரின் அனுமதியுடன் கிறிஸ்தவ முறைப்படி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் இருவரது நிலை தொடர்பில் இன்னும் தெரியவரவில்லை. இருப்பினும் மன்னார் சவுத்பார் கடற்கரையில் அண்மையில் 2 சடலங்கள் கரையொதுங்கின . காணாமல் போன மற்றைய இருவருமாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளமை குறிப்பிடப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
Post a Comment