சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்புப் பணம் குறித்து தகவல்களை வழங்க அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசியதாவது.. எச்எஸ்பிசி வங்கியிலும், வரிவிதிப்பு குறைவான லீக்டென்ஸ்டீன் நாட்டிலும் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்ள சுவிட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த விஷயத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது தவிர இந்தியர்கள் வெளிநாடுகளில் வைத்துள்ள வங்கிக் கணக்குகள் தொடர்பாக நமது புலனாய்வு அமைப்புகள் திரட்டியுள்ள தகவல்களின் உண்மைத்தன்மையை சுவிஸ் அரசு உறுதிப்படுத்தும். வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பான விவரங்களை பகிரங்கமாக வெளியிட முடியாமல் இருப்பதற்கு 1995இல் அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு, ஜெர்மனியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம்தான் காரணம் என்றார் அவர்.
0 கருத்துகள்:
Post a Comment