நடுக்கடலில் மீன்பிடித்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 15ம் திகதி 535 விசைபடகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கம் போல் மீன்வளம் நிறைந்த இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு 6 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து, மீன்பிடிக்க விடாமல் விரட்டியதாக தமிழக ஊடகமான தினமலர் செய்தி வௌியிட்டுள்ளது.
பின் திடீரென, கப்பலில் வைத்திருந்த கற்களை கொண்டு மீனவர்கள் மீது இலங்கை வீரர்கள் சரமாரியாக வீசியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், இராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த செல்வம், பொக்கிஷம், சேவியர் ஆகியோருக்கு சொந்தமான படகின் சாரதி அறை கண்ணாடி உடைந்தது.
மீனவர்கள் படகினுள் மறைந்து கொண்டதால், காயமின்றி தப்பினர். மேலும் 20 க்கும் மேலான படகின் மீனவர்கள், கடலில் இழுபட்டு வந்த வலையை வெட்டி கடலில் மூழ்கடித்து வெறும் படகுடன் இராமேஸ்வரம் கரைக்கு திரும்பினர்.
0 கருத்துகள்:
Post a Comment