சபாநாயகரின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை உத்தரவை தமிழக சட்டசபைக்கு அனுப்பி வைத்துள்ளது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம். சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என்று கடந்த மாதம் 27ம்தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை மட்டுமின்றி ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தையும் இழந்தார். இருப்பினும் தீர்ப்பு நகலை பரிசீலித்து, அதை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி, ஜெயலலிதாவின் சட்டசபை உறுப்பினர் பதவியை பறிக்குமாறு சிபாரிசு செய்ய வேண்டிய கடமை தமிழக சபாநாயகருக்கு உள்ளது. இதுவரை அதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதனிடையே சபாநாயகர் தனபால் சார்பில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், ஜெயலலிதா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நகலை சட்டசபைக்கு வழங்குமாறு கேட்கப்பட்டிருந்தது. இன்று விரைவு தபால் மூலமாக, தீர்ப்பு நகலை தமிழக சட்டசபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment