சர்வதேச கடல்பரப்பில் புயல் காற்றில் சிக்கிய நிலையில் கச்சதீவுக்கு அண்மையில் கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை (07/10/2014) அன்று மாலைதத்தளித்து கொண்டிருந்த நான்கு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக நெடுந்தீவு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நான்கு மீனவர்களும் இந்தியா இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள்ஆவார்கள் .
கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் சிங்கள கடற்படையினர் வலுக்கட்டாயமாக சிறைபுடித்து நெடுந்தீவு காவல்துறை சரகத்தில் ஒப்படைத்துவிட்டார்கள் இந்த நிலையில் இராமநாதபுரம் பகுதியில் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்ப்பட்டுள்ளது .
மேலாதிக்கமாக இந்த சம்பவத்தை தமிழக முதலமைச்சர் அவரிடம் முறையீடு செய்யபோவதாக அம்மாவட்ட மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்
0 கருத்துகள்:
Post a Comment