வடக்கில் காலநிலை மோசமடைந்துள்ள நிலையில் கடுமையான காற்றில் சிக்கிய நிலையில் கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வர் கைதாகியுள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக நெடுந்தீவு காவல்துறையினர் தெரிவிததுள்ளனர்.
கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மேற்படி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தங்களிடம் ஒப்படைத்ததாகவும் கைதான மீனவர்கள் தமிழ்நாடு, இராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் நெடுந்தீவு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment