கருப்பு பண விவகார வழக்கில், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 இந்தியர்களின் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதில் இடம்பெற்றுள்ள மும்பை நகரை சேர்ந்த 90 நபர்களில் கணக்கில் குற்றம் எதுவும் நடைபெற்றுள்ளதாக என்பதை அறிய விசாரணை நடத்த முதல்கட்ட நடவடிக்கையை மும்பை வருமானவரித்துறை விரைவில் தொடங்க உள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 இந்தியர்களில், 235 பேர் மும்பை சிட்டியை சேர்ந்தவர்கள் மும்பை வருமான வரி(புலனாய்வு) இயக்குநரக தகவல்கள் தெரிவித்துள்ளது.
"90 நபர்கள் வங்கி கணக்கு தொடர்பாக சுவிஸ் அதிகாரிகளிடம் இருந்து நமக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, வங்கி கணக்கில் குற்றம் நடந்துள்ளதா என்பதை நிர்ணயிக்கும் பணி விரைவில் தொடங்கும்." என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. வெளிநாடுகளில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களை கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் என்று வகைப்படுத்த முடியாது. நாங்கள் அனைத்து அம்சங்களையும் சரிபார்ப்போம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அளித்த பட்டியலில், அரசியல்வாதிகள், ரியஸ் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், பெரிய வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு துறையினை சேர்ந்த மக்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
கருப்பு பண விவகார வழக்கில், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 627 இந்தியர்களின் பெயர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது. மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்த மூடி முத்திரையிடப்பட்ட அந்த 3 உறைகளையும் பெற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அவற்றை பிரிக்கவில்லை. இந்த 3 உறைகளையும் சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் மட்டுமே திறப்பார்கள் என்று கூறியது. சிறப்பு புலனாய்வு குழு அடுத்த மாத (நவம்பர்) இறுதிக்குள் விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment