ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான ஆக்கியில் வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானுக்கு அதிர்ச்சி அளித்து வெண்கலத்தை தனதாக்கியது. இந்திய அணியில் ஜஸ்பிரீத் கவுர் (23-வது நிமிடம்), வந்தனா கட்டாரியா (42-வது நிமிடம்) கோல் அடித்தனர். ஜப்பான் தரப்பில் 41-வது நிமிடத்தில் அகானே ஷிபடா கோல் போட்டார். 2010-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் இதே ஜப்பானுக்கு எதிராகத்தான் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் தோற்று வெண்கலத்தை தவற விட்டது. இதற்கு இப்போது பழிதீர்த்துக் கொண்டது.
0 கருத்துகள்:
Post a Comment