சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் மகன் சசிகுமார் (24). டிப்ளமோ முடித்து விட்டு மேட்டூர் தெர்மல் பிளான்ட்டில் வேலை செய்து வருகிறார். இதேபோன்று சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த நாகராஜன் மகள் ஸ்ரீதேவி (22). பி.சி.ஏ. முடித்துவிட்டு சேலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பேஸ்புக் மூலம் காதல் மலர்ந்தது. இவர்கள் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஸ்ரீதேவி வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம் பிடித்தார்.
நேற்று மேட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இருந்தும் இரு வீட்டாரின் எதிர்ப்புக்கு பயந்து மக்கள் தேசம் கட்சியின் மண்டல தலைவர் தலைமையில் ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். ஓமலூர் காவல் ஆய்வாளர் செந்தில் குமார் இருவரிடம் விசாரித்து இருவரும் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதன் பேரில் இருவரும் சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு சென்று உள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment