30 April 2015
அதிக எடை செயற்கைக்கோள்களை"அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியா ஏவும்'
கனரக செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறனை இந்தியா அடைந்துள்ளதை அடுத்து, 2016-ஆம் ஆண்டு இறுதியில், அதிக எடை கொண்ட முதலாவது செயற்கைக்கோள் ஏவப்படும் எதிர்ப்பார்க்கப்படுவதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், மக்களவையில் கூறியதாவது:
திரவ பிராண வாயு, ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் கிரையோஜெனிக் என்ஜின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவால் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த என்ஜினின் சோதனை, வெற்றி அடைந்துள்ளது.
இதன் மூலம் 4,000 கிலோ (4 டன்) எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறனை இந்தியா பெற்றுள்ளது.
இதையடுத்து அடுத்த ஆண்டு இறுதியில் முதல் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியா எந்த முன்னணி நாட்டுக்கும் சளைத்தது அல்ல. செவ்வாய் கிரகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள "மங்கள்யான்' விண்கலம், இதுவரை 400 படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த வகையில் நாம் முன்னிலை வகிக்கிறோம்.
இந்த வெற்றியானது, இந்தியாவுக்கு நல்ல பலன்களையும், மேன்மையையும் அளிப்பதோடு, மற்ற கிரகங்களில் ஆய்வு மேற்கொள்வதற்கான வழியை வகுக்கும். தொலைத்தொடர்பு கல்விக்கு, விண்வெளி தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாக உள்ளது. இதற்காக 83 தொகுப்புகளை இஸ்ரோ ஏற்படுத்தி இருக்கிறது என்றார்
ஜிதேந்திர சிங்.
நாடகமாடும் விஜயகாந்த்: அன்புமணி ராமதாஸ்
தேர்தலுக்காகதில்லியில் மத்திய அமைச்சர் உமா பாரதியை அவரது இல்லத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேசும் பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
"தமிழகத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாடகமாடியுள்ளார்' என்று தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தில்லியில் மத்திய நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதியை புதன்கிழமை இரவு அவரது இல்லத்தில் அன்புமணி சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கர்நாடகம் தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பதைத் தடுக்க வலியுறுத்தி
அவர் கோரிக்கை மனுவை அளித்தார். இச்சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை மதிக்காமல், மேக்கேதாட்டு பகுதியில் தடுப்பணை கட்ட கர்நாடகம் செய்து வரும் முயற்சியைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என உமா பாரதியிடம் கேட்டுக் கொண்டேன்.
இந்த விவகாரத்தில் இனியும் தாமதம்
செய்யாமல் மூத்த வழக்குரைஞரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு நிலுவையில் உள்ள தமிழக அரசின் வழக்குகளில் தீர்வு கிடைக்க மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்னை. இதில் அரசியல் பார்க்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டி விவாதிக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
விஜயகாந்த் மீது சாடல்: ஆனால், தமிழக எதிர்க்கட்சித் தலைவராக மாநிலத்தில் தனது கடமையைச் சரிவர ஆற்றாத விஜயகாந்த், எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து சில அரசியல் கட்சிகளின் தலைவர்களை தில்லிக்கு அழைத்துக் கொண்டு பிரதமர், மத்திய அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து விட்டுச் சென்றுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட வேண்டிய விஜயகாந்த், அப்பொறுப்பின் மூலம் இதுவரை தமிழ்நாட்டுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை. தமிழக மக்களைப் பற்றி அவருக்கு உண்மையில் அக்கறையும் கிடையாது.
சட்டப்பேரவைக்கு செல்வதும் இல்லை; பேசுவதும் இல்லை. மகனின் திரைப்பட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்கிறேன் என்றும் இரண்டு மாதமாக நாளிதழ்களைப் படிக்கவில்லை என்றும் கூறும் அவர் கேள்வி கேட்கும் செய்தியாளர்களை மிரட்டுவதுமாக உள்ளார்.
பிரதமருடனான சந்திப்பு தொடர்பாக விஜய்காந்த் தரப்பில் இருந்து எனக்கு நேரடியாக எந்த அழைப்பும் முறைப்படி வரவில்லை. விஜயகாந்த்தை நம்பி அவரது பின்னால் போகும் அளவுக்கு திமுகவின் நிலைமை இவ்வளவு மோசமாக தரம் தாழ்ந்து விட்டதே என எண்ணும் போது வருத்தமாக உள்ளது என்றார் அன்புமணி ராமதாஸ்.
பரிசீலிக்கப்படும்: உமா பாரதி
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கை தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில அரசுகளும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளன.
நதிகள் இணைப்பு நடவடிக்கையில் சில மாநிலங்கள் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன. அந்த வகையில், முதல் கட்டமாக ஆர்வமுள்ள மாநிலங்களில் அத்திட்டத்தைச் செயல்படுத்தும் வாய்ப்புகளைத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்' என்றார் உமா பாரதி.
29 April 2015
உயிருடன் 50 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட பெண்
நேபாளத்தில் நிலநடுக்கத்திற்கு பின் 50 மணி நேரத்திற்கு பிறகு கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து பெண் ஒருவர் இந்திய மீட்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சுனிதா சிதௌலா என்ற அந்த பெண் நேபாளத்தின் மகராஜ்கஞ்ச் பசுந்தாராவில் 5 மாடி கட்டிடம் தரைமட்டமானதில் கட்டிட குவியலுக்குள் சிக்கிக் கொண்டார்.
அவரை 50 மணி நேரத்திற்கு பிறகு இந்திய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் பத்திரமாக உயிருடன் மீட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு, சற்று இயல்பு நிலைக்கு வந்த அவர் மறுபிறவி எடுத்தது போல் இருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.
நேபாளத்தில் தாணு மருத்துவமனை, பலஜூத்ரா, பால்கு, குட்பால், பிரிஜேஸ்வரி, சவ்மாதி, காங்காபு பகவதி பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்திய மீட்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
28 April 2015
மூன்றாவதாக புதிய நிலநடுக்கம்..ரிக்டரில் 5.1 ஆக பதிவு:
மேற்குவங்கத்தில் பாதிப்பு... நேபாளில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக USGS தெரிவித்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளம் மற்றும் இந்திய எல்லையில் மேற்குவங்கத்தில் அமைந்துள்ள Mirik என்ற நகரில் சற்று முன்னர் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பூடான்வரை உணரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிதாக ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் விளைவாக எந்த உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் தற்போது வரை வெளியாக வில்லை.
26 April 2015
ஜெய்ராம் ரமேஷ் ,,நில மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம்???
டெல்லி மேல்–சபையில் நில மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என்று முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
5 திருத்தங்கள்
சில குறிப்பிட்ட பெரு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் திருத்தங்களை செய்துள்ளது. பா.ஜனதா அரசு 5 முக்கியமான திருத்தங்களை செய்துள்ளது. இதன் மூலம் நிலம் கையகப்படுத்த விவசாயிகளின் ஒப்புதல் தேவை இல்லை. நிறுவனங்களின் சமூக பொறுப்பு சம்பந்தமான பிரிவும் நீக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் எடுத்த நிலத்தை
பயன்படுத்தாவிட்டால் மீண்டும் அதை விவசாயிகளிடமே ஒப்படைக்கும் பிரிவையும் நீக்கிவிட்டனர். மத்திய அரசின் திருத்தம் நில கொள்ளையர்களுக்கு மட்டுமே உதவும். ஆனால் இவற்றை எல்லாம் கூறாமல் பிரதமர் நரேந்திரமோடியும், மத்திய மந்திரி நிதின் கட்காரியும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
அனுமதிக்க மாட்டோம்
இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டனர். இந்த மசோதாவை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. எக்காரணம் கொண்டும் பா.ஜனதா அரசின் நில மசோதாவை டெல்லி மேல்–சபையில் நிறைவேற்ற விட மாட்டோம். இந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லும் பணியை காங்கிரஸ் செய்யும்.
24 April 2015
கண் பார்வை இழந்த வழக்கில் மருத்துவர்களுக்கு சிறைத் தண்டனை!!!
இந்தியாவில் முதல்முறையாக திருச்சி மாவட்ட நீதிமன்றம், சிகிச்சை குறைபாட்டினால் மருத்துவர்களுக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கடுவனூர் அரசு உயர்நிலை பள்ளியில், கடந்த 2008ம் ஆண்டு, யூலை மாதம் 28ம் திகதி, பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனையும், விழுப்புரம் பார்வை தடுப்பு சங்கமும் இணைந்து இலவச கண்மருத்துவ சிகி்ச்சை முகாம் நடத்தியது.
இதில் கண்ணில் குறைபாடு உள்ள 66 பேரை தேர்ந்தெடுத்து, கண்புரை அறுவை சிகிச்சை செய்ய பெரம்பலூர் ஜோசப் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு, கண்ணில் சீழ் வடிய ஆரம்பித்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சென்று முறையிட்டதால், அவர்களை திருச்சி மருத்துவமனைக்கு மாற்றி மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனாலும் அந்த 66 பேருக்கும் அடுத்தடுத்து பார்வை பறிபோனது.
கடந்த 8 வருடங்களுக்கு முன் தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவத்தை மருத்துவ கல்வி இயக்குநரே நேரில் விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில், இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் முறையாக
அனுமதி பெறவில்லை என்றும், அறுவை சிகிச்சைக்கு முன்பாக நோயாளிகளுக்கு செய்யப்பட வேண்டிய முறையான பரிசோதனைகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் தெரியவந்தது.
மேலும், இந்த 66 பேருக்கும் கண்ணில் ”சூடோமோனோ” என்ற நோய்த் தொற்று ஏற்பட்டதால் தான், அவர்களுக்கு நிரந்தரமாக பார்வை பறிபோக காரணம் எனத் தெரியவந்தது.
இதையடுத்து கண் பார்வை பாதித்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட்டது.
திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் கடந்த 10ம் திகதி விசாரணை நிறைவடைந்தது.
இதையடுத்து திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் வழங்கிய தீர்ப்பில், ஜோசப் கண் மருத்துவமனை
இயக்குனர் மருத்துவர் நெல்சன் ஜேசுதாசன், மருத்துவமனை நிர்வாகி கிறிஸ்டோபர் தாமஸ், மருத்துவர் அசோக் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட்து.
மருத்துவர்கள் சௌஜன்யா, தென்றல், அவ்வை மற்றும் ஆன்ட்ரூஸ் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர்கள் சௌஜன்யா, தென்றல் ஆகியோர் மீது இந்திய மருத்துவ கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கவனக்குறைவாக சிகிச்சையளித்த மருத்துவர்கள் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றிருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
23 April 2015
பெண் மருத்துவரின் ஓரினச்சேர்க்கை பற்றிய பேட்டி (காணொளி இணைப்பு)
டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர் ப்ரியாவின் மாமனார் தனது ஓரினச்சேர்க்கையாளர் மகனுக்கு ஆதரவாக பேட்டியளித்துள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த ப்ரியா வேதி (31) என்ற மருத்துவர் தனது ஓரினச்சேர்க்கையாளர் கணவரின் கொடுமையை தாங்க முடியாமல் கடந்த 18ம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்யும் முன் தனது கணவர் கமல் வேதி செய்த கொடுமைகள் பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து கமலை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தற்போது அவர் நீதிமன்ற உத்தரவுப்படி 14 நாட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கமல் வேதியின் தந்தை பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், என் மகன் ஓரினச்சேர்க்கையாளர் என்பது மருமகள் புகார் தெரிவித்த பிறகே எனக்கு தெரியும்.
ஓரினச்சேர்க்கை எல்லாம் இந்த காலத்தில் சர்வ சாதாரணமான விடயம். இதற்கு போய் என் மருமகள் ஏன் வருத்தப்பட்டார் என தெரியவில்லை.
மேலும், கமலுக்கு ப்ரியாவை பார்த்து பிடித்துப் போன பிறகே திருமணம் செய்து வைத்தோம் என்றும், திருமண பந்தத்தை முறையாக செயல்பட வைத்திருக்க வேண்டியது பாரம்பரிய இந்திய பெண்ணான ப்ரியாவின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
22 April 2015
குழந்தைகளை விற்பனை செய்தவரை போலீஸ் சாரா ல் கைது
தனியார் செய்திசேனல் செய்தியாளர்களிடம் “உங்களுக்கு காம்லியை பற்றி தெரியாது. நான் இதுவரையில் சுமார் 20 குழந்தைகளை விற்று உள்ளேன்” என்று உதார்விட்ட குழைந்தைகளை விற்பனை செய்யும் காம்லியை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் சில ஆயிரங்களுக்கு பெண் குழந்தைகள் விற்கப்படும் அவலநிலையை ஆங்கில செய்தி சேனல் என்.டி.டி.வி. தோலுறித்து காட்டியது. இதனையடுத்து செயல்பட்டு உள்ள தெலுங்கானா போலீஸ் பிரபல குழந்தை விற்பனைகாரி காம்லியை கைது செய்து உள்ளனர். 18-மாத குழந்தையை விற்பனை செய்த
காம்லியை போலீசார் கைது செய்து உள்ளனர். குழந்தையை வாங்கிய தம்பதியினரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். முன்னாள் துணை பஞ்சாயத்து தலைவியாக இருந்த காம்லி தற்போது குழந்தைகளை வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் பணியாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காம்லி ஆந்திர பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினருக்கு ரூ.10 ஆயிரத்திற்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்றை விற்றுஉள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக காம்லியை போலீசார் கைது செய்து உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட டி.எஸ்.பி., பேசுகையில் “காம்லி ரூ. 10 ஆயிரத்திற்கு பெண் குழந்தையை விற்று உள்ளார். முன்னதாக பல பெண் குழந்தைகளை விற்பனை செய்ததிலும் காம்லி குற்றவாளி ஆவார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வைத்து காம்லியிடம் விற்பனை செய்வோம்,” என்று கூறினார். மாநில அரசு நிர்வாகம் செய்துவரும் மையத்தில் இருந்து குழந்தை விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக ஆங்கில சேனல் வெளியிட்டு இருந்த செய்தியில், நல்கொண்டா சென்று இருந்த காம்லி என்ற பெண்ணிடம் இருந்து செய்தியாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, அப்போது பேசியபெண் ரூ. 30 ஆயிரத்திற்கு பெண் குழந்தையை
வழங்குவதாக கூறினார். காம்லி பேசுகையில் “என்னுடைய பெயர் காம்லி பாய். இரண்டு முறை துணை பஞ்சாயத்து தலைவராக இருந்து உள்ளேன். இது 23 நாட்கள் ஆன குழந்தை. மிகவும் அழகான குழந்தை, நான் ரூ. 30 ஆயிரம் விலை நிர்ணயம் செய்து
உள்ளேன். நான் உங்களுக்காக முன்பணம் ரூ. 5 ஆயிரம் வழங்கி உள்ளேன். நீங்கள் எப்போது வருவீர்கள்?” என்று கூறினார்.
செய்தியாளர்கள் காம்லியை சந்திக்கையில், காம்லி ரூ.50 ஆயிரம் கேட்டு வலியுறுத்தி உள்ளார். நான் பலருக்கு பணம் கொடுக்க வேண்டியது உள்ளது என்று காம்லி கூறிஉள்ளார். இதுதொடர்பாக யாரும் கேள்வி எழுப்பினாலோ, குழந்தையின் பெற்றோர்கள் திருப்பி கேட்டாலும் என்ன நடக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டு உள்ளனர். இதற்கு பதில் அளித்து உள்ள காம்லி “உங்களுக்கு காம்லியை பற்றி தெரியாது.
நான் இதுவரையில் சுமார் 20 குழந்தைகளை வழங்கி உள்ளேன். இதுபோன்று ஒன்றும் நடந்தது கிடையாது,” என்று உறுதியாக தெரிவித்து உள்ளார். அப்போது காம்லியின் சகோதரி இம்லி பேசுகையில் “அனைத்து நடைமுறைகளையும் என்னுடைய சகோதரி பார்த்துக் கொள்வார். நாங்கள் எங்களுடையை சகோதரரின் மூன்று குழந்தைகளையும் கொடுத்து உள்ளோம்,” என்று தெரிவித்து உள்ளார்.
பின்னர் காம்லி செய்தியாளர்களை தனியாக அழைத்து சென்று உள்ளார். குழந்தை பவானி மற்றும் அவருடைய தாய் ஆட்டோ ரிச்சாவில் அங்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். அப்போது செய்தியாளர்கள் சில துணிகள் மற்றும் பரிசு பொருட்களை குழந்தையிடம் கொடுத்து உள்ளனர். எப்போதும் பிறந்த குழந்தைகளுக்கு கொடுப்பது போன்று
வழங்கி உள்ளனர். உடனடியாக காம்லி பணம் விவகாரம் தொடர்பாக குழந்தையின் தாய் முன்னர் எதுவும் பேசக்கூடாது என்று செய்தியாளர்களிடம் கண்டிப்பாக கூறிஉள்ளார். பின்னர் செய்தியாளர்கள் நாங்கள் ஒரு நல்ல நாளில் திரும்பி வருகிறோம். குழந்தையை பெற்றுக் கொள்கிறோம். அப்போது பணத்தை பெற்றுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
பஸ் தீப்பிடித்து உத்தரபிரதேசத்தில் 9 பேர் பலி!!¨
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் இருந்து பைசாபாத்துக்கு பஸ் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. இதில் 42 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் அமேதி மாவட்டம் பிபார்பூர் என்ற பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது பஸ் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
அதிர்ச்சி அடைந்த பயணிகள் சிலர் பஸ்சின் ஜன்னல்களை உடைத்து வெளியே குதித்தனர். இருந்த போதிலும் இந்த விபத்தில் 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஸ் தீப்பிடித்த போது வெடிச்சத்தம் கேட்டதாக ஒருவர் தெரிவித்தார். இதனால் பஸ்சில் ஏற்றப்பட்ட சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.
இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்துக்கு தீயணைப்பு படையினர் 2 மணி நேரம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் 2 தீயணைப்பு வாகனங்களை சூறையாடினர். இருந்த போதிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு
மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் இந்த விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
டோலிவுட் மற்றம் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வரும்
தமன்னா, நகை வடிவமைப்பிலும் கலக்குபவர் என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.
அந்த வகையில் சமீபத்தில்வையிட் அன்ட் கோல்ட் என்ற பெயரில் நகைகளை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் இந்தியாவின் முன்னணி டிசைனர்கள் மட்டுமின்றி, தமன்னாவும் நகைகளை வடிவமைத்தார்.
இந்த நகைகளை விற்பனை செய்வதற்காகwww.witengold.com என்ற புதிய இணையதளத்தை தமன்னா தொடங்கியுள்ளார். இன்றைய அட்சய திருதியை விழாவை முன்னிட்டு நேற்றே தமன்னாவின் இணையதளம் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.
தனது தந்தை சந்தோஷ் பாட்டியாவுடன் சேர்ந்து இந்த இணையதளத்தை தொடங்கியுள்ள தமன்னா கூறுகையில், எனது தந்தை நகை வியாபாரத்தில் இருப்பதால் சிறு வயதில் இருந்தே நகை வடிவமைப்பதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. முதலில் நான் வடிவமைத்த நகைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் எனது தன்னம்பிக்கை அதிகரித்தது.
எனவே வடிவமைக்கும் பணியை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். இன்றைய பெண் தலைமுறையினருக்கு ஏற்றவாறு எனது வடிவமைப்புகள் இருக்கும். நான் வடிவமைக்கும் நகைகள் அழகாகவும், சமகாலத்திற்கு ஏற்றதாகவும், அனைத்து விழாக்களின் போது அணிந்து கொள்ளும் வகையிலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
21 April 2015
வெளியானது !¨அன்னை தெரசாவின் இளம் வயது புகைப்படம் !
இந்தியாவில் தொழு நோய் மற்றும் காச நோயால் பாதுக்கபட்டவர்களுக்கும் மற்றும் ஆதரவற்ற மற்றும் பாதிக்கபட்டவர்களுக்காக 1950 ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்க அமைப்பு கருணை இல்லம் (மிஷினர் ஒப் சேரிடிஸ்) ஒன்றை உருவாக்கியது. இந்த அமைப்பு தற்போது 4500 சகோதரிகளுடன் 133 நாடுகளில் இயங்கி வருகிறது.
அன்னை தெரசா கொல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடு தொண்டாற்றினார். தொண்டின் மறு உருவம் தெரசாவுக்கு 1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.அன்னை தெரசா என உலகம் முழுவதும் உள்ள மக்களால் பாசத்துடன் அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர் எக்னஸ் கோஞ்சா பொயாஜியூ.
யுகோஸ்லோவியாவின் ஒரு பகுதியாக இருந்த மாசிலோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்ஜே நகரில் 1910-ஆம் ஆண்டு அன்னை தெரசா பிறந்தார். ஓகஸ்டு 26-ஆம் நாள் தெரசா பிறந்ததாகச் சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தமது பிறந்த நாள் ஓகஸ்டு 27-ஆம் நாள் தான் என்பதைத் தெரசாவே உறுதிபடுத்தியுள்ளார்.
இந்தியாவின் கொல்கத்தா நகரில் யுகோஸ்லோவியக் கிறித்துவ மிஷினர்கள் தொண்டாற்றுவதைக் கேள்விப்பட்டுத் தானும் பணியாற்ற விரும்புவதாகக் கூறினார். 1929-ஆம் ஆண்டு தெரசா இந்தியாவுக்கு வந்தார்.
தொடக்கத்தில் அவர் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1946-ஆம் ஆண்டு டார்ஜிலிங்கிற்குத் சென்று கொண்டிருந்த போது, சேரியில் அல்லல்படும் வறியவர்களுக்குத் தொண்டாற்ற வருமாறு தனது கனவில் கடவுள் அழைப்பதாக குறிப்பிடும் தெரசா, இந்தக் கடமையை நிறைவேற்றப் பள்ளியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதற்குக் கத்தோலிக்க மதத் தலைவர் போப் பாண்டவரிடம் இருந்து அனுமதி கிடைத்தது. உடனடியாக முதல் உதவி மருத்துவத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டு சேரி மக்களுக்குத் தன் தொண்டைத் தொடங்கினார்.
தெரசாவின் தொண்டு உள்ளத்தைக் கண்ட சகோதரிகள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவராக அவருடன் பணியாற்ற இணைந்ததால் என்னும் சமூகத் தொண்டு அமைப்பை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து ஆதரவற்றவர்களுக்கு அன்னையாகத் தெரசா திகழ்ந்தார். இத்தகைய தொண்டு உள்ளம் கொண்ட அன்னை தெராசவின் 18 வயது இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது
கனமழை: மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி
சிவகங்கை அருகே கனமழை கொட்டியதில் மின்னல் தாக்கி ஸ்கூட்டியில் சென்ற கர்ப்பிணிப் பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகம் முழுவதும் கோடை மழை
கொட்டிவருகிறது. சிவகங்கை, காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று பிற்பகல் முதல் மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது.
கோடை மழை என்பதால் இடியும், மின்னலுமாய் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஏராளமானோர் மழைக்கு அஞ்சி ஒதுங்கி நின்றனர். எனினும் சிவகங்கையை அடுத்த கீழக்குவானி
பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி மற்றும் ராஜகுமாரி என்ற இரு பெண்கள் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை மின்னல் தாக்கியது. இருவரும் உடல் கருகி இறந்தனர்.
இருவரும் அக்கா தங்கைகள் ஆவர். இதில் மகேஸ்வரிக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணமாகி அவர் தற்போது
கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கை ராஜகுமாரி ஸ்கூட்டியில் சென்றபோது அவருக்கு பின்னால் மகேஸ்வரி உட்கார்ந்து சென்றுள்ளார். மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு தீ வைத்த 51 பேர் கைது
ஒடிசா மாநிலம் தெலாங் ரெயில் நிலையத்தில் பார்பில்–பூரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற ஒரு
சிறுவன் உயிர் இழந்தான். அங்கு அந்த எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு நிறுத்தம் இல்லாததே சிறுவன் உயிர் இழப்பிற்கு காரணம் என கூறி ஒரு வன்முறை கும்பல் ரெயிலுக்கு
தீ வைத்தது. இதில் 2 பெட்டிகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் ரெயிலுக்கு தீ வைத்ததாக பூரி மாவட்டம் குவாலிப்பாரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த 51 பேரை போலீசார்கைது செய்தனர்.
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு !!!
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. வேணுகோபால் வலியுறுத்தினார்.
20 தமிழர்கள் கொலை
பாராளுமன்றத்தில் நேற்று அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் பி.வேணுகோபால் (திருவள்ளூர் தொகுதி) பேசியதாவது:–
கடந்த 7–ந்தேதி தமிழ்நாட்டை சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் பழங்குடியினர். செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு என்ற பெயரில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சேஷாச்சலம் வனப்பகுதியில் என்கவுன்டர் நடத்தி தமிழகத்தை சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 100 கடத்தல்காரர்களால் தாங்கள் வன்முறைத் தாக்குதலுக்கு ஆளானதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் எஞ்சிய 80 பேர் எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் அனைவரும் மரங்களை வெட்டிக் கொண்டிருந்ததாகவும் மரக்கட்டைகளை சுமந்து சென்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் அங்கு பழைய கட்டைகள் போடப்பட்டிருந்தன. அவை திட்டமிட்டு அந்த உடல்களின் அருகில் வைக்கப்பட்டது போலத்தான் காட்சியளித்தன. மிகவும் ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால் இந்த சம்பவத்தில் எந்த போலீஸ்காரருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
தீக்காயங்கள்
7 தொழிலாளர்கள் முகங்களிலும் முதுகிலும் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்தது. சில உடல்களில் தீக்காயங்களும் அவர்களின் தோல் உரிந்தும் காணப்பட்டது. இதனால் அவர்கள் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. மிகவும் பிரபலமான தடயவியல் நிபுணர்களும் ஆந்திர போலீசாரின் கூற்றின் மீது மிகவும் வலுவான சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்
தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட காட்டுத்தனமான தாக்குதல்கள் மற்றும் இரக்கமற்ற கொலைகள் குறித்து சமூக ஊடகங்களிலும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. அது இந்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
மத்திய அரசு தலையிட
இந்த செயலை ஆந்திரா போலீஸ் கமிஷனர் மிகவும் பாராட்டத்தக்க விஷயம் என்று கூறியிருந்தாலும், தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தமிழக அரசு இந்த சம்பவம் குறித்த உண்மை தொடர்பாக தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு வற்புறுத்தியுள்ளன. ஆந்திர உயர்நீதிமன்றமும் இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற இருமாநில பிரச்சினை சார்ந்த விஷயத்தில் ஆந்திர அரசாங்கம் ஏன் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளது?
இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்களை கைது செய்யாமல், இந்த கடத்தலுக்கு காரணமானவர்களை ஏன் அந்த அரசு கண்டுகொள்ளவில்லை? உண்மைகளை ஏன் வெளிச்சத்துக்குக் கொண்டுவர முயற்சிக்கவில்லை? இந்த துயர சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளதால் மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
20 April 2015
தற்கொலை செய்யும் முன்பு டாக்டர் ப்ரியா எழுதிய பகீர் பேஸ்புக் பதிவு!
கமல் நீ ஒரு பேய்: ஓரினச்சேர்க்கையாளர் கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் ப்ரியா வேதி தனது கணவரை பேய் என்று ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் டாக்டர் ப்ரியா வேதி(31). அவருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் கமல் வேதிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தனது ஓரினச்சேர்க்கையாளர் கணவரின் கொடுமையை தாங்க முடியாமல் ப்ரியா தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்யும் முன்பு ஃபேஸ்புக்கில் தனது கணவர் பற்றி கூறியிருப்பதாவது,
நம் சமூகத்திற்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். எனக்கும் டாக்டர் கமல் வேதிக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. வழக்கமாக திருமணங்களில் நடந்திருக்க வேண்டிய உடல் உறவு எங்களுக்குள் இதுவரை இல்லை.
கமல் ஏன் என்னுடன் உறவு வைக்காமல் இருக்கிறார் என்று திருமணமான 6 மாதங்கள் கழித்து ஆய்வு செய்தேன். அப்போது தான் அவருடைய லேப்டாப்பில் போலி ஜிமெயில் ஐடி மூலம் அவர் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் சேட் செய்தது, ஓரினச்சேர்க்கை ஆபாச படங்கள், புகைப்படங்கள் ஆகியவை இருந்ததை கண்டுபிடித்தேன். இது எல்லாம் திருமணத்திற்கு முன்பு நடந்தவை. அவரிடம் கேட்டதற்கு யாரோ என் இமெயில் கணக்கை ஹேக் செய்துவிட்டனர் என்றார்.
கமல் தெரிவித்த பதிலை ஏதோ சந்தேகத்துடன் ஏற்றுக் கொண்டேன். அவர் இதுவரை 8 முதல் 10 முறை என்னுடன் உறவு கொள்ள முயன்றார் ஆனால் அவரால் முடியவில்லை. நான் அவரை காதலித்ததால் இது குறித்து நான் யாரிடமும் தெரிவித்தது இல்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன்.
அவர் என்னையும், என் குடும்பத்தையும் குறை கூற ஆரம்பித்தார். இந்த 5 ஆண்டுகளில் அவர் என்னை மனரீதியாக கொடுமைபடுத்தினார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளராக இருக்கலாம் என்று கூறினார். அவருக்கு என்னுடன் இருக்கையில் பாலுணர்வு ஏற்பட்டது இல்லை. ஆனால் அவர் காஷ்மீரைச் சேர்ந்த ஹமாஸ் உள்ளிட்ட ஆண்களுடன் உறவு கொண்டார்.
கமலின் போலி ஐடியில் டாக்டர் சாகர் துக்ரலின் ஐடியும் இருந்தது. கமலுக்கு சங்கத், சௌரப் ஆகிய ஓரினச்சேர்க்கையாளர்களுடன் தொடர்பு உண்டு. இது தெரிந்தும் ஒரு மனைவியாக அவருடன் இருக்க விரும்பினேன். அவர் நேற்று இரவு என்னை மனரீதியாக ஓவராக கொடுமைபடுத்தினார். அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,
Hello everyone I want to remind something to our society . I am married since 5 years , with Dr kamal vedi . we don’t…
டாக்டர் கமல் வேதி நான் உங்களை அதிகம் காதலிக்கிறேன். நீங்கள் என் மகிழ்ச்சியை எல்லாம் எடுத்துக் கொண்டீர்கள். நீங்கள் மனிதனே இல்லை பேய். என் வாழ்க்கையை என்னிடம் இருந்து எடுத்துக் கொண்ட பேய்.
கமல் போன்று யாராவது இருந்தால் தயவு செய்து எந்த பெண்ணையும் திருமணம் செய்யாதீர்கள். அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் ஒரு பெண் மற்றும் அவரது குடும்பத்தாரின் உணர்வுகளோடு விளையாடுகிறீர்கள். நான் இதுவரை உறவு கொண்டதே இல்லை என்பதை நிரூபிக்க மருத்துவ பரிசோதனை செய்ய தயார்.
டாக்டர் கமல் வேதி, உங்களிடம் இருந்து நான் எப்பொழுதுமே எதையும் எதிர்பார்த்தது இல்லை. உங்களிடம் இருந்து செக்ஸ் உறவை எதிர்பார்த்தேன் என நினைத்தால் அது தவறு. நான் உங்களை காதலித்ததால் உங்களுடன் இருக்க விரும்பினேன். இதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியாது. நீங்கள் ஒரு குற்றவாளி. டாக்டர் கமலின் குடும்பத்தார் அப்பாவி. ஆனால் கமல் நீங்கள் ஒரு பேய் என்று ப்ரியா தெரிவித்துள்ளார்.
திட்டங்களை மக்களிடம் சொல்லுங்கள்; பிரதமர் மோடி
ஏழைகளுக்காக பாடுபடுகிற மத்திய அரசின் திட்டங்களை, மக்களிடம் போய்ச் சொல்லுங்கள் என்று பாரதீய ஜனதா எம்.பி.க்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
எம்.பி.க்கள் கூட்டம்
பாராளுமன்ற மக்களவை, பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக்காக இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. இதையொட்டி டெல்லியில் நேற்று நடந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நீங்கள் அனைவரும் தலை நிமிர்ந்து நில்லுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். மக்களுக்காக நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர்களுக்கு சொல்லுங்கள். அவர்கள் உங்களை புகழ்வார்கள்.
நான் எடுக்கிற எல்லா முடிவுகளும், ஏழைகளின் நலனுக்கானவை.
ஏழைகளுக்காக
சிலருக்கு பாரதீய ஜனதாவை குறைகூறுவதே வேலையாகப் போய்விட்டது. அவர்களுக்கு குறைகூறுகிற உரிமை உண்டு. ஆனால், அப்படி குறை கூறுகிறபோது- தங்களை நடுநிலையாளர்கள் என்று சொல்கிற உரிமை அவர்களுக்கு கிடையாது.
சின்னச் சின்ன விஷயங்களை தொடர்ந்து பெரிதுபடுத்துகிறார்கள். நல்ல பணிகளை பாராட்டுவதற்கு அவர்களிடம் ஏதுமில்லை.
நான் எப்போதுமே ஏழைகளைப் பற்றித்தான் பேசுகிறேன். அவர்களுக்காகத்தான் நாம் உழைக்கிறோம். செய்தியில் வரவேண்டும் என்பதற்காக நாம் உழைக்கவில்லை. நாம் அப்படி அவர்களுக்காக உழைக்காவிட்டால், நாம் நிம்மதியாக தூங்க முடியாது என்பதால் ஏழைகளுக்காக உழைக்கிறோம். நாம் ஏழைகளுக்காகவே வாழ்கிறோம். நாம் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு பொது வாழ்க்கையில் ஈடுபடவில்லை. ஏழை மக்களின் நலனுக்காகத்தான் ஈடுபடுகிறோம்.
அதிகமாக செயலில் இறங்குங்கள்
சிலர் நல்லது எதையும் கேட்பதில்லை என்று தீர்மானித்து விட்டார்கள். நல்லது எதையும் சொல்வதில்லை என்று முடிவு செய்து விட்டார்கள். நாம் அவர்களுக்காக நேரத்தை வீணாக்க கூடாது. நாம் கூறுவதை கேட்க விரும்புகிறவர்கள் மீது கவனத்தை செலுத்த வேண்டும்.
நீங்கள் இன்னும் செயலில் அதிகமாக இறங்க வேண்டும். நாம் எல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மக்களிடம் போய்ச் சொல்லுங்கள். ஊடகங்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி யோசிக்காதீர்கள்.
ஏழைகளுக்கான அரசு
நமது அரசு ஏழைகளுக்கானது. பிரதம மந்திரி மக்கள் நிதி திட்டம், நேரடி மானிய திட்டம் போன்றவற்றை அமல்படுத்தி உள்ளோம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புறுதி திட்டத்தில் தவறுகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள முயற்சி எடுக்கிறோம்.
இதையெல்லாம் மக்களிடம் போய் பிரசாரம் செய்யுங்கள். முந்தைய அரசுகள் செய்ததையும், நமது அரசு செய்வதையும் ஒப்பிட்டு சொல்லுங்கள். தேசிய ஊரக வேலை வாய்ப்புறுதி திட்டத்தை அமல்படுத்துவதில் நாட்டில் எங்கேனும் முறைகேடுகள் காணப்பட்டால், எனக்கு கடிதம் எழுதுங்கள்.
இழப்பீடு
நமது நோக்கம் எல்லாம், ஏழைகள் பலன் அடைவதாகத்தான் இருக்க வேண்டும். கிராம மக்கள் வாங்கும் திறனைப் பெற்றால், நமது கிராமங்களும், நகரங்களும் முன்னேறுவதற்கு உதவியாக இருக்கும்.
முந்தைய காலத்திலும் ஆலங்கட்டி மழை பெய்து, விவசாயிகளுக்கு பயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இப்போது எடுத்தது போன்ற முடிவுகள் முன் ஒருபோதும் எடுக்கப்பட்டதில்லை. முன்பு குறைந்த பட்சம் 50 சதவீதம் பயிர்ச்சேதம் கண்டிருந்தால்தான் இழப்பீடு. இப்போதோ 33 சதவீத அளவுக்கு பயிர்ச்சேதம் இருந்தாலும், இழப்பீடு என்று துணிச்சலான முடிவு எடுத்துள்ளோம். இழப்பீட்டின் அளவும் ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிவேக வளர்ச்சி
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மட்டுமல்ல, உலக வங்கியின் தலைவர், சர்வதேச நிதியத்தின் தலைவர் என அனைவருமே, உலகளவில் பொருளாதாரத்தில் இந்தியா அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நாடு என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
எனது 3 நாடுகள் பயணம் முழுமையாக முன்னிலைப்படுத்தப்படவில்லை. 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு பிரான்சுடன் ஒப்பந்தம் என்கிற அளவில்தான் மக்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.
சாமானிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக எனது அரசு, ஓய்வு ஒழிச்சலின்றி பாடுபடுகிறது. எல்லோருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்துக்காக பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். இதில் பலன்பெறப்போவது பணக்காரர்களா? சில டி.வி. சேனல்களின் அதிபர்களா? முகேஷ் அம்பானிக்காக ஒரு வீடு கட்டுகிறோமா? இவர்களில் யாருக்கு வீடு இல்லை?
குடும்பத்துக்கு ஒரு வீடு இல்லை, இதற்கு
முந்தைய அரசுகள்தான் காரணம் என்று கூறினால் அது குற்றமா? சுதந்திரத்துக்கு பின்னர் வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி வந்திருக்கிறது என்று கூறுவதில் உண்மை இல்லையா? ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் ஒரு வீடு கிடைக்க வேண்டும் என எண்ணுவது கெட்ட கனவா?
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
இந்தியர் 2 கப்பல்களில் 475 பேர் கொச்சி வந்தனர்!!
ஏமன் நாட்டில் போர் நடந்து வருவதால் அங்கு வேலைக்காக சென்ற இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வந்தது. விமானங்கள் மூலம் 4,700 இந்தியர்களும், வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரம் பேரும் மீட்கப்பட்டனர். அதேபோல கப்பல்கள்மூலம் 1,670 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
நேற்று 2 கப்பல்கள் மூலம் 475 பேர் கேரள மாநிலம்
கொச்சி துறைமுகத்தில் வந்து இறங்கினர். இதில் 337 பேர் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள். 65 பேர் ஏமனில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளியினர். இந்திய கப்பற்படை கப்பல்கள் பாதுகாப்புடன்
அவர்கள் கொச்சி அழைத்துவரப்பட்டனர். அங்கிருந்து இந்தியர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதான் ஏமனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்படும் இறுதி நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
19 April 2015
பிரபாகரனும் இந்தியப் படைகளும் மறைக்கப்பட்ட உண்மைகள்
இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பியது தவறானதொரு முடிவு என்ற கருத்து, இந்தியாவின் அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்தவர்களால் அவ்வப்போது சுட்டிக்காட்டப்பட்டு வந்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங் எழுதியிருந்த சுயசரிதையிலும், அது தொடர்பாக இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்த பேட்டி ஒன்றிலும் இதுகுறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இந்தியப் படைகளை அனுப்பும் முடிவை கொழும்பில் வைத்தே ராஜீவ் காந்தி எடுத்தார் என்றும், அதுகுறித்து அமைச்சரவையிடமோ அல்லது வேறு எவரிடமோ கலந்துரையாடவோ அனுமதி பெறவோ இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நட்வர் சிங் வெளியிட்ட இந்த தகவல்கள் புதுடில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
அதற்குப் பின்னர், இப்போது இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போது வெளிவிவகார இணை அமைச்சராக இருப்பவருமான ஜெனரல் வி.கே.சிங் மீண்டும் இந்த விவகாரத்தைக் கிளம்பியிருக்கிறார்.
இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்ப எடுத்த முடிவை கொள்கை ரீதியான ஒரு தவறு என்றும், அது இராணுவ மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல, இரு நாட்டு அரசாங்கங்களும் எடுத்த முடிவு என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ராய்ப்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் அவர் தெரிவித்திருந்த இந்தக் கருத்துகளில் ஒன்றும் புதிய விடயம் உள்ளடங்கியிருக்கவில்லை.
அதாவது, இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்பியதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறத்தக்க நிலையில் இப்போது இந்தியாவில் யாருமில்லை என்றே கூற வேண்டும்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட அதேநிலையில் தான் இருக்கின்றனர்.
எனவே, ஜெனரல் வி.கே.சிங் இவ்வாறு கூறியிருப்பது ஆச்சரியமானதல்ல.
எனினும், அவர் கூறியுள்ள இரண்டு விடயங்கள் முக்கியமானவை.
முதலாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை, இந்திய அமைதிப்படையினர் பலமுறை அழிக்கும் அளவுக்கு நெருங்கியிருந்தனர் என்றும், ஆனால், அவரை தப்பிச் செல்ல வழி விடுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இரண்டாவது, தாமே பயிற்சி அளித்தவர்களுடன் போரிடுகின்ற சங்கடமான நிலைக்கு உள்ளாகியதாகவும் ஜெனரல் வி.கே.சிங் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரண்டு விடயங்களும் தற்போதைய தருணத்திலும் சர்ச்சைக்குரியவையாகவே உள்ளன.
அதாவது, இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளின் தலைமையை அழிக்கும் இலக்குடன் செயற்படவில்லை என்ற கருத்து சரியானதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஏனென்றால், பிரபாகரனை பலமுறை அழிக்கும் அளவுக்கு நெருங்கிய போதும், அவரைத் தப்பிக்க விடுமாறு உத்தரவிடப்பட்டிருந்ததாக ஜெனரல் வி.கே.சிங் கூறியிருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் தலைமையை அழிக்கும் நோக்குடனேயே, இந்தியப் படையினர் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர் என்பதே உண்மை.
பிரபாகரன் அழிக்கப்பட்டு விட்டால், புலிகள் உள்ளிட்ட எல்லா இயக்கங்களையும், தனது வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்பது இந்தியா வின் கருத்தாக இருந்தது.
தமது உடன்பாட்டை பிரபாகரன் மட்டுமே ஏற்க மறுத்து வந்ததால், அவர் மீது இந்தியாவுக்கு கடுமையான கோபம் இருந்து வந்தது
இதனால், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடங்கிய தும், கொக்குவிலில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து, இந்திய இராணுவத்தின் பரா கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டனர்.
ஆனால், யாழ். மருத்துவ பீட மைதானத்தில் தரையிறக்கப்பட்ட இந்திய இராணுவ பரா கொமாண்டோக்களின் அணி, விடுதலைப் புலிகளால் நாசமாக்கப்பட்டது.
அதில் 29 பரா கொமாண்டோக்கள் கொல்லப்பட்டனர்.
இது இந்தியப் படைகள் தமது வரலாற்றில் சந்தித்த மோசமான தோல்விகளில் ஒன்றாக இன்றைக்கும் கருதப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருட னோ, சடலமாகவோ கைப்பற்றுவதற்கு, இந்தியப் படைகள் பெரும் தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர். வடக்கு மாகாணம் முழுவதிலும், பிரபாகரனைத் தேடி வேட்டைகள் நடத்தப்பட்டன.
இறுதியில் அவர் மணலாறு காட்டுக்குள் ஒளிந்திருப்பதான தகவல் கிடைத்த போது, அந்தப் பகுதியைச் சுற்றி வளைத் துக் கொண்ட, இந்தியப் படையினர், பலமுறை காடுகள் மீது தாக்குதல்
நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
பிரபாகரன் மணலாறுக் காட்டுக்குள் தான் மறைந்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், அந்தப் பகுதியை இறுக்கமான முற்றுகைக்குள் இந்தியப் படையினர் வைத்திருந்ததும், காடுகளுக்குள், 500 கிலோ எடை கொண்ட குண்டுகளை ஹெலிகொப்டர்களில் இருந்து வீசியதும் மறுக்க முடியாத விடயங்கள்.
இவையெல்லாம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கிற்கான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே தவிர, அவரைத் தப்பிக்க விட வேண்டும் என்ற கோணத்தில் மேற்கொள்ளப்பட்டவையல்ல.
ஒரு கட்டத்தில், பிரபாகரன் இறந்து விட்டார் என்று கூட இந்தியா செய்தி வெளியிட்டது.
விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் ஒரு உளவியல் உத்தியாகவே அந்த வதந்தியையும் இந்தியா பரப்பியது.
எனினும், விடுதலைப் புலிகளின் தலைவரை இந்தியப்படைகளால் எதுவும் செய்ய முடியாமல் போனது. அது இந்தியாவின் தோல்வியாகவே கருதப்படுகிறது.
ஜெனரல் வி.கே.சிங், இந்தியப் படைகளின் இலங்கை நடவடிக்கைகளை அரசியல் மட்டத்திலான கொள்கை ரீதியான தோல்வியாக வெளிப்படுத்த முனைகிறாரே தவிர, அதனை இந்திய இராணுவத்துக்கு ஏற்பட்ட தோல்வியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
விடுதலைப் புலிகளின் தலைமையை அழிக்கும்- அல்லது விடுதலைப் புலிகளை அழிக்கும் இலக்கினை நிறைவேற்ற முடியாத நிலையில் தான், இந்தியப்படைகள் 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் ஜெனரல் வி.கே.சிங் அதனை மறைக்கப் பார்க்கிறார்.
இந்தியப் படைகளால் முடியாத விடுதலைப் புலிகளின் தலைமையை அழிக்கும் காரியத்தை, இலங்கைப் படைகள் நிறைவேற்றியதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது.
அதனால் தான், பலமுறை பிரபாகரனை நெருங்கினோம், ஆனாலும் அவரைத் தப்பிக்க வழிவிடுமாறு உத்தரவிடப்பட்டிருந்தால், அவர் தப்பிச் சென்றார் என்று, தமது தயவில் தான் பிரபாகரன் உயிர்தப்பியது போலவும், கருத்து வெளியிட்டிருக்கிறார்.
எனினும், பிரபாகரனைத் தப்பிக்க வழி விடுமாறு உத்தரவிட்டிருந்தது யார் என்பதை, ஜெனரல் வி.கே.சிங் வெளிப்படுத்தவில்லை.
அதேவேளை, அவரது இந்தக் கருத்தை, இந்திய அமைதிப்படையின் புலனாய்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தவரான, கேணல் ரமணி ஹரிகரன் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.
தனக்குத் தெரிந்தவரையில், பிரபாகரனை ஒரு ஒருமுறை தான் இந்தியப் படையினர் நெருங்கியதாகவும், ஆனால் அப்போது அவர் தப்பிச் சென்று விட்டதாகவும், கேணல் ஹரிகரன் குறிப்பிட்டிருக்கிறார்.
கேணல் ஹரிகரனைப் பொறுத்தவரையில், இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சுதந்திரமாக இயக்கும் ஒருவராகவே இருக்கிறார்.
ஆனால் ஜெனரல் வி.கே.சிங் பா.ஜ.கவில் இணைந்து இணை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார்.
அவர், இந்த விவகாரத்தை வைத்து, காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது பழி போடுவதற்கே முயற்சித்திருப்பதாகத் தெரிகிறது.
இந்த விடயத்தில் மட்டுமன்றி, இன்னொரு விடயத்திலும் அதனை உணர முடிகிறது.
இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் போய் தாமே பயிற்சி அளித்தவர்களுடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஜெனரல் வி.கே.சிங் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், இப்போதைய நிலையில், தாம் விடுதலைப் புலிகளுக்கோ, அல்லது ஏனைய தமிழ் அமைப்புகளுக்கோ ஆயுதங்களை வழங்கியதையோ, பயிற்சி அளித்ததையோ ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இல்லை.
இருந்தாலும், ஒரு வெளிவிவகார இணை அமைச்சராக இருந்து கொண்டே, தாமே பயிற்சி அளித்தவர்களுடன் இந்திய இராணுவத்தினர் மோத வேண்டிய சங்கடமான நிலை இலங்கையில் ஏற்பட்டதாக, கூறியிருக்கிறார் ஜெனரல் வி.கே.சிங்.
இதுவும் கூட காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது பழிபோட்டு விடலாம் என்ற வகையில் தான் கூறப்பட்டிருக்கிறது.
இலங்கைக்கு இந்தியப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு 28 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆனாலும், அதனை அரசியலாக்கும் போக்கு, மட்டும் இன்னமும் மாறவில்லை.
இதனை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஜெனரல் வி.கே.சிங்.
அமைச்சகத்தின் ஆவணங்கள் திருட்டு வழக்கில் 13 பேர் மீது !!!
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக ஆவணங்கள் திருட்டு வழக்கில் 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஆவணங்கள் திருட்டு
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டு அவை சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்கப்பட்டன. இதன்மூலம் அந்த தனியார் நிறுவனங்கள் பலன் அடைந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் கடந்த பிப்ரவரி மாதம் 20–ந் தேதி 5 தனியார் நிறுவன அதிகாரிகளை கைது செய்தனர். ஆவணங்களை திருடிக்கொடுப்பதற்காகவே அவர்கள் சிலருக்கு மாதந்தோறும் பெரிய அளவில் பணம் கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். 2 தனித்தனி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
42 பேர் சாட்சிகள்
ஷைலேஷ் சக்சேனா (ஆர்.ஐ.எல். நிறுவனம்), வினய்குமார் (எஸ்ஸார்), கே.கே.நாயக் (கெய்ரன்ஸ் இந்தியா), சுபாஷ் சந்திரா (ஜுபிலன்ட் எனர்ஜி), ரிஷி ஆனந்த் (ரிலையன்ஸ் அடாக்) ஆகிய 5 பேர் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள்.
மற்ற 8 பேர் ஐஷ்வர்சிங், ஆஷாராம், ராஜ்குமார் சவுபே, லால்தா பிரசாத், ராகேஷ்குமார், விரேந்தர் குமார், எரிசக்தி ஆலோசகர் பிரயாஸ் ஜெயின், பத்திரிகையாளர் சாந்தனு சைகியா. இவர்கள் 13 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர். அவர்களிடம் இருந்து அமைச்சக ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் 42 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அறிக்கை தாக்கல்
பெட்ரோலியம் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் இந்த வழக்கில் குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் எத்தகையவை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த 10–ந் தேதி கோர்ட்டு உத்தரவிட்டது.
15–ந் தேதி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில், குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 8 ஆவணங்கள் இயற்கையாக வகைப்படுத்தப்பட்டவை என்று தெரிவித்தது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த வழக்கில் 13 பேர் மீது நேற்று மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு ஆகாஷ் ஜெயின் முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்கள் மீது 44 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 13 பேர் மீதும் ஆவணங்கள் கடத்துதல், திருட்டு, மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல், குற்ற சதித்திட்டம் தீட்டுதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு சஞ்சய் நேற்று விடுமுறை என்பதால் நாளை (திங்கட்கிழமை) அவர் இந்த குற்றப்பத்திரிகையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை தொடர்கிறது
குற்றவாளிகள் மீது இதுவரை கடுமையான அலுவலக ரகசியங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வழக்கில் இன்னும் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
மீனவர் விவகாரத்தில் கடற்படையின் வழியில் இலங்கை மீனவர்கள்
இலங்கை மீனவர்கள் மேற்கொண்ட தாக்குதலினால் இந்திய மீனவர்கள் எழுவர் காயமடைந்துள்ளனர்.
நடுக்கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீனவர்களை தாக்கியதோடு அவர்களது உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய மீனவர்கள் பயணித்த படகிற்குள் சென்று இலங்கை மீனவர்கள் இத்தாக்குதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை மீனவர்களின் தாக்குதல்களில் காயமடைந்த இந்திய மீனவர்கள் எழுவரும் கரைக்கு திரும்பியுள்ளதுடன்,
காயமடைந்தவர்கள் நாகை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி தேர்தலில் பயங்கர வன்முறை குண்டு வீச்சு, துப்பாக்கி சூடு
.கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில் ஏராளமான வன்முறைகளும், முறைகேடுகளும் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. மாற்றுக்கட்சி வாக்காளர்களை
பயமுறுத்துவதற்காக, ஆறு இடங்களில் குண்டுகள் வீசப்பட்டன. குண்டு வீச்சில், 3 காங்கிரஸ் தொண்டர்கள் காயம் அடைந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவரை நோக்கி துப்பாக்கி சூடு நடந்தது. அதில் ஒரு போலீஸ் அதிகாரி காயம் அடைந்தார்.
இதுதவிர, பல இடங்களில் ஓட்டுச்சாவடி
கைப்பற்றுவதும், கம்யூனிஸ்டு கட்சி முகவர்களை தாக்கி வெளியேற்றுவதும் நடந்ததாக கம்யூனிஸ்டு கட்சியும், பா.ஜனதாவும் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், இதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. ஓட்டுப்பதிவு முடிவடையும் நேரத்தில், முதல்–மந்திரி மம்தா பானர்ஜி ஓட்டுபோட்டார். வெளியே காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கு வெற்றிச்சின்னத்தை
காண்பித்தபடி அவர் சென்றார்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது தாமரைக் கோபுர நிர்மாணப் பணி??'
தெற்காசியாவினதும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று, இந்திய பாதுகாப்பு வல்லுனர்களால் எச்சரிக்கப்பட்ட, தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குள் தாமரைக் கோபுரம் அமைந்துள்ள நிலத்தின் உரிமை தொடர்பான சர்ச்சைக்கு முடிவு காண்பதாக இணக்கம் காணப்பட்டதையடுத்து, சிறிலங்காவின் தொலைத்தொடர்பு ஒழுக்கமைப்பு ஆணையம், சிறிலங்கா துறைமுக அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன, தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளைத் தொடர்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்படும், கொழும்பு-10 டி.ஆர்.விஜேவர்த்தன மாவத்தையிலுள்ள நிலம், துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமானது என்றும், அந்த நிலத்தை இந்த திட்டத்துக்குப் பயன்படுத்துவதற்கான எந்த அங்கீகார ஆவணங்களையும் பெற்றுக் கொள்ளாமலேயே நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருந்தார்.
எனினும், தாமரைக் கோபுர நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த நில உரிமைப் பிரச்சினையை, தீர்த்து வைக்குமாறு, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று அரச துறை நிறுவனங்களின் அதிகாரிகளும், குறிப்பிட்ட இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், மூன்று மாதங்களுக்குள் நில உரிமை குறித்த பிரச்சினையை தீர்ப்பதென்றும், நிர்மாணப் பணிகளைத் தொடர அனுமதிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தாமரைக் கோபுரம், சீனாவின் இலத்திரனியல் கண்காணிப்புக் கோபுரமாக அமையும் என்றும், இதனால் தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும், இந்தியப் பாதுகாப்பு ஆய்வாளரான, பாஸ்கர் ரோய், அண்மையில் எச்சரிக்கை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி!
தெற்காசியாவினதும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று, இந்திய பாதுகாப்பு வல்லுனர்களால் எச்சரிக்கப்பட்ட, தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளை தொடர்ந்துமேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் தாமரைக் கோபுரம் அமைந்துள்ள நிலத்தின் உரிமை தொடர்பான சர்ச்சைக்கு முடிவு காண்பதாக இணக்கம் காணப்பட்டதையடுத்து, சிறிலங்காவின்
தொலைத்தொடர்பு ஒழுக்கமைப்பு ஆணையம், சிறிலங்கா துறைமுக அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன, தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளைத் தொடர்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்படும், கொழும்பு-10 டி.ஆர்.விஜேவர்த்தன மாவத்தையிலுள்ள நிலம், துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமானது என்றும், அந்த நிலத்தை இந்த திட்டத்துக்குப் பயன்படுத்துவதற்கான எந்த
அங்கீகார ஆவணங்களையும் பெற்றுக் கொள்ளாமலேயே நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருந்தார். எனினும், தாமரைக் கோபுர நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நில உரிமைப்
பிரச்சினையை, தீர்த்து வைக்குமாறு, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று அரச துறை நிறுவனங்களின் அதிகாரிகளும், குறிப்பிட்ட இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், மூன்று மாதங்களுக்குள் நில உரிமை குறித்த பிரச்சினையை தீர்ப்பதென்றும், நிர்மாணப் பணிகளைத் தொடர அனுமதிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாமரைக் கோபுரம்,
சீனாவின் இலத்திரனியல் கண்காணிப்புக் கோபுரமாக அமையும் என்றும், இதனால் தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும், இந்தியப் பாதுகாப்பு ஆய்வாளரான, பாஸ்கர் ரோய், அண்மையில் எச்சரிக்கை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
18 April 2015
பயங்கர வன்முறை போலீஸ் துப்பாக்கி சூடு கண்ணீர் புகை வீச்சு
ஸ்ரீநகரில் பாகிஸ்தான் கொடியுடன் ஊர்வலம் நடத்திய விவகாரத்தில் காஷ்மீர் பிரிவினைவாதி மசரத் ஆலம் கைது செய்யப்பட்டார். அதையடுத்து, காஷ்மீரில் பயங்கர வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.
மசரத் ஆலம்
காஷ்மீர் பிரிவினைவாதியான மசரத் ஆலம் கடந்த 2010-ம் ஆண்டு மாநில அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன போராட்டங்கள் நடத்தினார். இதில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 120 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அங்கு சமீபத்தில் பதவியேற்ற மக்கள் ஜனநாயக கட்சி தலைமையிலான அரசு மசரத் ஆலமை கடந்த சில வாரங்களுக்கு முன் விடுவித்தது. இதற்கு கூட்டணி கட்சியான பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இது தொடர்பாக மத்திய அரசும் கண்டனம் தெரிவித்தது.
பாகிஸ்தான் கொடிகள்
இந்த நிலையில் டெல்லியில் தங்கியிருந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான சையத் அலி ஷா கிலானி, கடந்த 15-ந்தேதி ஸ்ரீநகர் திரும்பினார். விமான நிலையத்தில் அவரை வரவேற்ற ஆதரவாளர்கள், ஹைதர்போராவில் உள்ள வீட்டுக்கு ஊர்வலமாக
அழைத்து சென்றனர்.
மசரத் ஆலம் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் கலந்து கொண்ட ஏராளமானோர், பாகிஸ்தான் கொடிகளை ஏந்தியவாறு சென்றனர். மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பிய அவர்கள், பாதுகாப்பு படையினரின் வாகனங்களையும் கல்வீசி தாக்கினர்.
வீட்டுக்காவல்
இதைத்தொடர்ந்து மசரத் ஆலம், கிலானி மற்றும் சில பிரிவினைவாத தலைவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பிரிவினைவாதிகளின் இந்த செயல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்ரீநகர் பேரணி தொடர்பாக மாநில முதல்-மந்திரி முப்தி முகமது சயீத்தை தொடர்பு கொண்ட மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து உடனடி நடவடிக்கையாக மசரத் ஆலம் நேற்று முன்தினம் இரவு முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவரது வீடு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கைது
இந்நிலையில், அவர் நேற்று காலையில் திடீரென கைது செய்யப்பட்டார். ஸ்ரீநகர் பேரணியில், அவரே பாகிஸ்தான் கொடியை ஏந்தி, பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பியதுடன், பொதுமக்களையும் அப்படிச் செய்ய தூண்டி விட்டது, வீடியோ ஆதாரம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, அவர் கைது செய்யப்பட்டதாக காஷ்மீர் மாநில அரசு தெரிவித்தது. பின்னர், மசரத் ஆலம், சகீத்கஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வீட்டுக்காவல்
மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க சையத் அலி ஷா கிலானியையும் போலீசார் வீட்டுக்காவலில் வைத்தனர். ஹைதர்போராவில் உள்ள அவரது வீட்டை சுற்றி ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
முன்னதாக, காஷ்மீரில் கடந்த திங்கட்கிழமை நடந்த துப்பாக்கி சண்டையில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து, தெற்கு காஷ்மீரின் திரால் பகுதியில் கண்டன பேரணி ஒன்றை நேற்று நடத்த கிலானி அழைப்பு விடுத்திருந்தார்.
அவரை வீட்டுக்காவலில் வைத்ததை தொடர்ந்து இந்த பேரணிக்கும் போலீசார் தடை விதித்தனர்.
144 தடை உத்தரவு
மேலும், திரால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இதுபற்றி போலீஸ் வாகனங்களில் ‘மைக்’ மூலமாக அறிவித்தபடி போலீசார் சென்றனர். பொதுமக்கள், வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அவர்கள் கூறினர்.
திரால் நகருக்கு செல்லும் சாலைகள் அனைத்தையும் மூடி ‘சீல்’ வைத்தனர். ஆங்காங்கே சாலை தடுப்புகளையும் வைத்தனர்.
துப்பாக்கி சூடு
இதற்கிடையே, திரால் நகரில் நேற்று மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்தவுடன், வெளியே வந்த நூற்றுக் கணக்கானோர், திடீரென சாலைகளில் திரண்டனர். அரசுக்கு எதிராகவும், சுதந்திரம் கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
அங்கு வந்த போலீசாரை நோக்கி அவர்கள் கற்களை வீசினர்.
அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அதற்கு கூட்டம் கட்டுப்படாததால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
கும்பலின் கல்வீச்சில் போலீசார் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர்.
இதுபோல், ஸ்ரீநகரிலும், பிரிவினைவாத ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதில், 14 பேர் காயம் அடைந்தனர். குல்கம் மாவட்டம் குய்மோவிலும் மோதல் நடந்தது.
அதே சமயத்தில், இஸ்லாமி தன்சீம்-இ-ஆசாதி தலைவர் அப்துல் சமத் இன்குலாபி தலைமையில், திரால் நகரில் அமைதிப் பேரணி நடைபெற்றது. ராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்ட காலித் முசாபர் வானியின் வீட்டுடன் பேரணி முடிவடைந்தது.
மத்திய அரசு கண்காணிப்பு
காஷ்மீரில் நடைபெற்று வரும் சமீபத்திய நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலக ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘காஷ்மீர் நிலவரங்களை மத்திய அரசு தொடர்ந்து கவனித்து வருகிறது. அங்கு நடக்கும் நிகழ்வுகளை உள்துறை அமைச்சகமும் நேரத்துக்கு நேரம் கேட்டறிந்து, முக்கியமான வழிகாட்டுதல்களை மாநில அரசுக்கு வழங்கி வருகிறது’ என்றார்.
அவர் மேலும் கூறுகையில், ‘பா.ஜனதாவை
பொறுத்தவரை தேசியவாதம், நாட்டுப்பற்று தொடர்பாக மத்தியிலும், மாநிலங்களிலும் ஒரே சீரான கொள்கையையே பின்பற்றி வருகிறோம். பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது. எங்கள் கொள்கையில் சமரசத்துக்கே இடமில்லை. அங்கு (காஷ்மீர்) கூட்டணி அமைத்திருப்பது முழுக்க முழுக்க அரசு அமைப்பதற்காகவே’ என்றார்.
அதே சமயத்தில், தங்களது நிர்பந்தத்தால் மசரத் ஆலம் கைது செய்யப்பட்டதாக கூறப்படுவதை பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் மறுத்தார்.
Subscribe to:
Posts (Atom)