தனியார் செய்திசேனல் செய்தியாளர்களிடம் “உங்களுக்கு காம்லியை பற்றி தெரியாது. நான் இதுவரையில் சுமார் 20 குழந்தைகளை விற்று உள்ளேன்” என்று உதார்விட்ட குழைந்தைகளை விற்பனை செய்யும் காம்லியை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் சில ஆயிரங்களுக்கு பெண் குழந்தைகள் விற்கப்படும் அவலநிலையை ஆங்கில செய்தி சேனல் என்.டி.டி.வி. தோலுறித்து காட்டியது. இதனையடுத்து செயல்பட்டு உள்ள தெலுங்கானா போலீஸ் பிரபல குழந்தை விற்பனைகாரி காம்லியை கைது செய்து உள்ளனர். 18-மாத குழந்தையை விற்பனை செய்த
காம்லியை போலீசார் கைது செய்து உள்ளனர். குழந்தையை வாங்கிய தம்பதியினரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். முன்னாள் துணை பஞ்சாயத்து தலைவியாக இருந்த காம்லி தற்போது குழந்தைகளை வாங்கி விற்கும் தொழிலை செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் பணியாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காம்லி ஆந்திர பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினருக்கு ரூ.10 ஆயிரத்திற்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்றை விற்றுஉள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக காம்லியை போலீசார் கைது செய்து உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட டி.எஸ்.பி., பேசுகையில் “காம்லி ரூ. 10 ஆயிரத்திற்கு பெண் குழந்தையை விற்று உள்ளார். முன்னதாக பல பெண் குழந்தைகளை விற்பனை செய்ததிலும் காம்லி குற்றவாளி ஆவார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வைத்து காம்லியிடம் விற்பனை செய்வோம்,” என்று கூறினார். மாநில அரசு நிர்வாகம் செய்துவரும் மையத்தில் இருந்து குழந்தை விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக இவ்விவகாரம் தொடர்பாக ஆங்கில சேனல் வெளியிட்டு இருந்த செய்தியில், நல்கொண்டா சென்று இருந்த காம்லி என்ற பெண்ணிடம் இருந்து செய்தியாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, அப்போது பேசியபெண் ரூ. 30 ஆயிரத்திற்கு பெண் குழந்தையை
வழங்குவதாக கூறினார். காம்லி பேசுகையில் “என்னுடைய பெயர் காம்லி பாய். இரண்டு முறை துணை பஞ்சாயத்து தலைவராக இருந்து உள்ளேன். இது 23 நாட்கள் ஆன குழந்தை. மிகவும் அழகான குழந்தை, நான் ரூ. 30 ஆயிரம் விலை நிர்ணயம் செய்து
உள்ளேன். நான் உங்களுக்காக முன்பணம் ரூ. 5 ஆயிரம் வழங்கி உள்ளேன். நீங்கள் எப்போது வருவீர்கள்?” என்று கூறினார்.
செய்தியாளர்கள் காம்லியை சந்திக்கையில், காம்லி ரூ.50 ஆயிரம் கேட்டு வலியுறுத்தி உள்ளார். நான் பலருக்கு பணம் கொடுக்க வேண்டியது உள்ளது என்று காம்லி கூறிஉள்ளார். இதுதொடர்பாக யாரும் கேள்வி எழுப்பினாலோ, குழந்தையின் பெற்றோர்கள் திருப்பி கேட்டாலும் என்ன நடக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டு உள்ளனர். இதற்கு பதில் அளித்து உள்ள காம்லி “உங்களுக்கு காம்லியை பற்றி தெரியாது.
நான் இதுவரையில் சுமார் 20 குழந்தைகளை வழங்கி உள்ளேன். இதுபோன்று ஒன்றும் நடந்தது கிடையாது,” என்று உறுதியாக தெரிவித்து உள்ளார். அப்போது காம்லியின் சகோதரி இம்லி பேசுகையில் “அனைத்து நடைமுறைகளையும் என்னுடைய சகோதரி பார்த்துக் கொள்வார். நாங்கள் எங்களுடையை சகோதரரின் மூன்று குழந்தைகளையும் கொடுத்து உள்ளோம்,” என்று தெரிவித்து உள்ளார்.
பின்னர் காம்லி செய்தியாளர்களை தனியாக அழைத்து சென்று உள்ளார். குழந்தை பவானி மற்றும் அவருடைய தாய் ஆட்டோ ரிச்சாவில் அங்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். அப்போது செய்தியாளர்கள் சில துணிகள் மற்றும் பரிசு பொருட்களை குழந்தையிடம் கொடுத்து உள்ளனர். எப்போதும் பிறந்த குழந்தைகளுக்கு கொடுப்பது போன்று
வழங்கி உள்ளனர். உடனடியாக காம்லி பணம் விவகாரம் தொடர்பாக குழந்தையின் தாய் முன்னர் எதுவும் பேசக்கூடாது என்று செய்தியாளர்களிடம் கண்டிப்பாக கூறிஉள்ளார். பின்னர் செய்தியாளர்கள் நாங்கள் ஒரு நல்ல நாளில் திரும்பி வருகிறோம். குழந்தையை பெற்றுக் கொள்கிறோம். அப்போது பணத்தை பெற்றுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment