ஜார்கண்ட் மாநிலத்தில் 2001 ஆம் ஆண்டு 21 கிராம மக்கள மாவோயிஸ்டு தீவிரவாதிகள் படுகொலை செய்யதனர். நள்ளிரவில் ஒரு கலாச்சார நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போது தீவிரவாதிகள் இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த சமபவத்த்கில் முன்னாள்
முதல்வர் பாபு லால் மராண்டி இளைய மகன் உட்பட 21 பேரை கொலை செய்யபட்டனர். இது குறித்து சினிமா ஒன்று எடுக்கபட்டு வருகிறது. இந்த படத்தை டைரக்டர் அலிகான் இயக்குகிறார். இந்த படத்திற்கு ’சில்காரி ஏக் டர்ட்’ என பெயரிடபட்டு உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தான் பாத் என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் அந்த மாவட்டத்தில் துணை வளர்ச்சி அதிகாரி (ஐஏஎஸ் ரேங்க் அதிகாரி) தினேஷ் பிரசாத் கிரித் கலந்து கொண்டார். அப்போது அங்கு இருந்த நடிகர்களுடன் சேர்ந்து அவர் நடன மாடினார்
இது குறித்த படங்கள வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மாநில அரசு அவரை இடம் மாற்றம் செய்து உள்ளது. மாநில தலைமையகத்தில் ஊழியர்கள் துறைக்கு அவர் மாற்றபட்டு உள்ளார்.
இது குறித்து அதிகாரி தினேஷ் பிரசாத் கிரித் கூறும் போது நான் எனது வேலை நேரத்திற்கு பிறகே இந்த படத்தில் நடிக்க சென்றேன். நான் நடன காட்சியில் கலந்து கொண்டது தவறு இல்லை என கூறினார்..
இந்த படபிடிப்புக்கு தற்போது தடைவிதிக்க கோரபட்டு வருகிறது குறிப்பாக படுகொலை சம்பவத்தில் இருந்து தப்பித்த பாபுலால் மிராண்டியின் சகோதரர் நானு மிராண்டியும் இது குறித்து கோரிக்கை விடுத்து வருகிறார்.இது குறித்து அவர் கூறும் போது ஆபாச நடனம்
காட்சி மற்றும் படுகொலையில் உயிர்களை இழந்த 21 பேர் குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகள் கொடுமையான நகைச்சுவையாக சித்தரிக்கப்டுகிறது என நானு மிராண்டி கூறி உள்ளார்.இந்த படத்தின் சூட்டிங்கை தடை செய்வதில் மாநில அரசு தோல்வி அடைந்து விட்டது. நாங்கள் கோர்ட் மூலம் இதற்கு தடை பெறுவோம் என ஜார்கண்ட் விகாஷ் மோர்ச்சா கட்சி தெரிவித்து உள்ளது
0 கருத்துகள்:
Post a Comment