டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர் ப்ரியாவின் மாமனார் தனது ஓரினச்சேர்க்கையாளர் மகனுக்கு ஆதரவாக பேட்டியளித்துள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த ப்ரியா வேதி (31) என்ற மருத்துவர் தனது ஓரினச்சேர்க்கையாளர் கணவரின் கொடுமையை தாங்க முடியாமல் கடந்த 18ம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்யும் முன் தனது கணவர் கமல் வேதி செய்த கொடுமைகள் பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து கமலை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தற்போது அவர் நீதிமன்ற உத்தரவுப்படி 14 நாட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கமல் வேதியின் தந்தை பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், என் மகன் ஓரினச்சேர்க்கையாளர் என்பது மருமகள் புகார் தெரிவித்த பிறகே எனக்கு தெரியும்.
ஓரினச்சேர்க்கை எல்லாம் இந்த காலத்தில் சர்வ சாதாரணமான விடயம். இதற்கு போய் என் மருமகள் ஏன் வருத்தப்பட்டார் என தெரியவில்லை.
மேலும், கமலுக்கு ப்ரியாவை பார்த்து பிடித்துப் போன பிறகே திருமணம் செய்து வைத்தோம் என்றும், திருமண பந்தத்தை முறையாக செயல்பட வைத்திருக்க வேண்டியது பாரம்பரிய இந்திய பெண்ணான ப்ரியாவின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment