தமிழகத்தில் பாஜக பலமாக உள்ளது 2016-ஆம் ஆண்டில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான செயல்திட்டம் வகுக்கப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.முரளிதர்ராவ் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
தமிழகத்தில் பாஜக பலமாக உள்ளது. 
அம்மாநிலத்தில் வலிமையான தலைவரை உருவாக்குவது பெரியவிஷயமல்ல. அதற்கான பணிகள் நடந்துவருகின்றன. 2016-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான செயல்திட்டம் வகுக்கப்படும். தமிழகத்தில் உறுப்பினர்சேர்க்கை திருப்திகரமாக உள்ளது.
 இதுவரை தமிழகத்தில் 35 லட்சம் பேர், கேரளத்தில் 20 லட்சம்பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இவ்வாறு கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 








 
 
 
 
 
 
 
 
 
 
0 கருத்துகள்:
Post a Comment