கனரக செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறனை இந்தியா அடைந்துள்ளதை அடுத்து, 2016-ஆம் ஆண்டு இறுதியில், அதிக எடை கொண்ட முதலாவது செயற்கைக்கோள் ஏவப்படும் எதிர்ப்பார்க்கப்படுவதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், மக்களவையில் கூறியதாவது:
திரவ பிராண வாயு, ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் கிரையோஜெனிக் என்ஜின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோவால் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த என்ஜினின் சோதனை, வெற்றி அடைந்துள்ளது.
இதன் மூலம் 4,000 கிலோ (4 டன்) எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறனை இந்தியா பெற்றுள்ளது.
இதையடுத்து அடுத்த ஆண்டு இறுதியில் முதல் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியா எந்த முன்னணி நாட்டுக்கும் சளைத்தது அல்ல. செவ்வாய் கிரகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள "மங்கள்யான்' விண்கலம், இதுவரை 400 படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்த வகையில் நாம் முன்னிலை வகிக்கிறோம்.
இந்த வெற்றியானது, இந்தியாவுக்கு நல்ல பலன்களையும், மேன்மையையும் அளிப்பதோடு, மற்ற கிரகங்களில் ஆய்வு மேற்கொள்வதற்கான வழியை வகுக்கும். தொலைத்தொடர்பு கல்விக்கு, விண்வெளி தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாக உள்ளது. இதற்காக 83 தொகுப்புகளை இஸ்ரோ ஏற்படுத்தி இருக்கிறது என்றார்
ஜிதேந்திர சிங்.
0 கருத்துகள்:
Post a Comment