காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய விவகாரத்தை முன்வைத்து இன்று அம்மாநில சட்டசபையில் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளியை ஏற்படுத்திய பாரதீய ஜனதா உறுப்பினர்கள், பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். பள்ளத்தாக்கில் நேற்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை திரும்ப பெருவது பெரியது இல்லை என்று இந்தியாவிற்கு தீவிரவாதிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று பாரதீய ஜனதா உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
“தீவிரவாத நாடான பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஸ்பான்சர் செய்கிறது. காஷ்மீரில் ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழக்கும் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வாதாடுபவர்கள் கண் முன்னரே நேற்று தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளது,” என்று பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர் ரவிந்தர் ரெய்னா தெரிவித்து உள்ளார். பாகிஸ்தான் ஸ்பான்சர் செய்யும் தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை கொலை செய்து வருகின்றனர். பாகிஸ்தானின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவந்து அந்நாட்டு பதில் அளிக்கப்பட வேண்டும் என்று பாரதீய ஜனதா உறுப்பினர் காகான் பாகாத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய பாரதீய ஜனதா உறுப்பினர் ரவிந்தர் ரெய்னா, மாநிலத்தில் எந்த ஒரு பகுதியில் இருந்தும் ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை திரும்ப பெறுவதற்கான சூழ்நிலை நிலவவில்லை... பாகிஸ்தான் தொடர்ந்து நம்மை முதுகில் குத்தி வருகிறது. தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க, இந்தியா பாதுகாப்பு படையை
வலுப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. என்று கூறினார். மாநிலத்தில் அமைதி நிலவும் பகுதியில் ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் திரும்பப்பெறப்படும் என்று முதல்-மந்திரி முப்தி முகமது சயீது எழுத்துப்பூர்வமான பதில் அளித்தார். ஆனால் மாநிலத்தில் நேற்று தீவிரவாதிகளால் மூன்று போலீசார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே சட்டசபையில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் ஒருவர், மரடைப்பு ஏற்பட்டு துடித்தார். உடனடியாக அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
0 கருத்துகள்:
Post a Comment