உலக வங்கி கணிப்புஇந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் வருகிற 2017ம் ஆண்டில் 8 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டில் விரிவாக்கம் மற்றும் சாதகமான எண்ணெய் விலை ஆகியவை தெற்கு ஆசியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.
இந்தியாவில், நடப்பு 2015௧6 நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சி 2017௧8 நிதியாண்டில் 8 சதவீதமாக உயரும் என்றும் அதற்கு அடிப்படையாக 2016௧8 நிதியாண்டுகளில் முக்கியமாக முதலீட்டில் வளர்ச்சி என்பது 12 சதவீதமாக அதிகரித்து காணப்படும் என்றும் தனது அரை ஆண்டு அறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியா, நுகர்வோர் என்ற நிலையில் இருந்து முதலீட்டு அடிப்படையிலான வளர்ச்சியை நோக்கி செல்லும் நிலையில், சீனா மாற்று பாதையில் செல்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பு 2015ம் ஆண்டில் உள்ள 7 சதவீத வளர்ச்சி, வருகிற 2017ம் ஆண்டில் 7.6 சதவீதமாக நிலையான வளர்ச்சியை அடைந்து விடும் என்றும் அதிகமான நுகர்வு மற்றும் முதலீடு அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்
இது இருக்கும் என்றும் வங்கியின் தெற்கு ஆசிய பொருளாதார கண்ணோட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
நாட்டில் வர்த்தக அடிப்படையிலான சீர்திருத்தங்கள் மற்றும் முன்னேற்றம் கண்டு வரும் முதலீட்டில் ஆர்வம் ஆகியவற்றால் இந்தியாவின் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி ஆனது மண்டல மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எண்ணெய் விலையில் சரிவானது, நாட்டின் பல்வேறு இடங்களிலும் எண்ணெய் பொருட்களின் உள்நாட்டு விலையில் பிரதிபலித்துள்ளது. பாகிஸ்தானில் பெரும்பாலான எண்ணெய் பொருட்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இந்நிலை காணப்படுகிறது.
ஆனால் வங்காளதேசத்தில் மாற்றம் எதுவும் இல்லை என அறிக்கை தெரிவிக்கின்றது. நாட்டின் உட்கட்டமைப்பு, அடிப்படை சேவைகள் மற்றும் ஏழைகளுக்கு ஆதரவளிக்கும் இலக்கு ஆகிய முக்கிய விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில் மானியங்களை குறைப்பதால் கிடைக்கும் சேமிப்புகளை பயன்படுத்த கூடும் என்றும் உலக வங்கியின் தெற்காசிய துணை தலைவர் ஆனெட் டிக்சன் கூறியுள்ளார்.
எண்ணெய் விலை குறைவால், வீடுகளில் குடியிருப்போர் நிலையான லாபம் அடைவார்கள் என்றும், குறைவான ஆற்றல் செலவு என்ற நேரடி முறையிலும் மற்றும் விரைவான வளர்ச்சி என்ற மறைமுக முறையிலும் அது இருக்கும் என அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் மண்ணெண்ணெய் தவிர்த்து, வசதி படைத்தோர் எண்ணெய் பொருட்களில் அதிக செலவு செய்து நிலையான லாபத்தை அதிகமாக அடைவர் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment