.கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில் ஏராளமான வன்முறைகளும், முறைகேடுகளும் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. மாற்றுக்கட்சி வாக்காளர்களை
பயமுறுத்துவதற்காக, ஆறு இடங்களில் குண்டுகள் வீசப்பட்டன. குண்டு வீச்சில், 3 காங்கிரஸ் தொண்டர்கள் காயம் அடைந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவரை நோக்கி துப்பாக்கி சூடு நடந்தது. அதில் ஒரு போலீஸ் அதிகாரி காயம் அடைந்தார்.
இதுதவிர, பல இடங்களில் ஓட்டுச்சாவடி
கைப்பற்றுவதும், கம்யூனிஸ்டு கட்சி முகவர்களை தாக்கி வெளியேற்றுவதும் நடந்ததாக கம்யூனிஸ்டு கட்சியும், பா.ஜனதாவும் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், இதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. ஓட்டுப்பதிவு முடிவடையும் நேரத்தில், முதல்–மந்திரி மம்தா பானர்ஜி ஓட்டுபோட்டார். வெளியே காத்திருந்த பத்திரிகையாளர்களுக்கு வெற்றிச்சின்னத்தை
காண்பித்தபடி அவர் சென்றார்.
0 கருத்துகள்:
Post a Comment