உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் இருந்து பைசாபாத்துக்கு பஸ் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. இதில் 42 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் அமேதி மாவட்டம் பிபார்பூர் என்ற பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது பஸ் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
அதிர்ச்சி அடைந்த பயணிகள் சிலர் பஸ்சின் ஜன்னல்களை உடைத்து வெளியே குதித்தனர். இருந்த போதிலும் இந்த விபத்தில் 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஸ் தீப்பிடித்த போது வெடிச்சத்தம் கேட்டதாக ஒருவர் தெரிவித்தார். இதனால் பஸ்சில் ஏற்றப்பட்ட சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.
இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்துக்கு தீயணைப்பு படையினர் 2 மணி நேரம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் 2 தீயணைப்பு வாகனங்களை சூறையாடினர். இருந்த போதிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு
மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் இந்த விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.
0 கருத்துகள்:
Post a Comment