ஒருதலைக்காதலால் பெங்களூரில் புறநகர்ப் பகுதியான ஒயிட் பீல்டு அருகே காடு கோடி என்ற இடத்தில் தனியார் நடத்தும் பிரகதி பி.யூ.சி. கல்லூரி உள்ளது. இங்கு கர்நாடக மாநிலம் தும்கூரைச் சேர்ந்த கவுதமி என்ற 18 வயது மாணவி பி.யூ.சி. 2-ம் ஆண்டு (பிளஸ்2) படித்து வந்தார்.
இவர் கல்லூரி விடுதியில் சக மாணவிகளுடன் தங்கி இருந்தார்.நேற்று இரவு 10.30 மணி அளவில் விடுதி வாசலில் மாணவி கவுதமி தோழியுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அதே கல்லூரியில் பியூனாக வேலை பார்க்கும் மகேஷ் (30) என்பவர் அங்கு வந்தார்.
திடீர் என்று அவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாகியை எடுத்து மாணவி கவுதமியை நோக்கி சுட்டார். இதில் மாணவி உடலில் குண்டு பாந்தது. அலறித்துடித்தப ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பலியானார்.
இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத கவுதமியின் தோழி ஸ்ரீஷா தடுக்க முயன்றார். இதனால் அவரையும் சுட்டார். அவருக்கும் குண்டு காயம் ஏற்பட்டது.
உடனே மகேஷ் அங்கி ருந்து தப்பி ஓடி விட்டான். சத்தம் கேட்டு கல்லூரி ஊழியர்கள் ஓடி வந்து காயம் அடைந்த ஸ்ரீஷாவை ஆஸ்த்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கபபட்டது.
போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கல்லூரி ஊழியர் மகேசுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்று ஆச்சரியமாக உள்ளது.
இந்த விடுதியில் 3-வது மாடியில் மாணவி கவுதமி தங்கி இருந்தார். மகேஷ் அலுவல ஊழியர் என்பதால் தரை தளத்தில் உள்ள அறையில் தங்கி இருந்தார். ஒரு தலையாக அவர் மாணவியை காதலித்து வந்துள்ளார். காதலை மாணவி ஏற்றுக் கொள்ள வில்லை.
இதனால் நேற்று இரவு மாணவி ஊருக்கு புறபபட தயாரானார். தரை தளத்துக்கு வந்த போது அவரை சுட்டுக் கொன்று பழி தீர்த்து விட்டது. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தப்பி ஓடிய மகேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
0 கருத்துகள்:
Post a Comment