நாங்கள் எப்போதும் நண்பர்கள்’ என சீனாவும், பாகிஸ்தானும் ஒன்றையொன்று அறிவித்துக்கொண்டு, பரஸ்பரம் நட்புறவு பாராட்டி வருகின்றன. மேலும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்குவதில் சீனா முதலிடத்தில் விளங்குவதாக சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனமும் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் சீனாவிடம் இருந்து 8 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. ரூ.31 ஆயிரம் கோடி வரையிலான இந்த திட்டத்துக்கு இரு நாடுகளும் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அரசு அதிகாரி முகமது சலீம், இது தொடர்பாக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என பாகிஸ்தானின் ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. சமீபகாலமாக டீசல் மற்றும் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை தயாரிக்கும் திறனை சீனா பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் வாங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் எத்தகையது என உறுதியாக தெரியவில்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
எனினும் இந்த திட்டம் குறித்து சீனா அல்லது பாகிஸ்தான் அதிகாரிகள் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
Post a Comment