அமெரிக்காவின் ஹானலூலு அருங்காட்சியகத்தில் உள்ள கற்சிலைகள் உள்பட சில கலைப்பொருட்கள் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவை சாமி சிலைகள் உள்பட புராதன கலைப்பொருட்களை திருடி கள்ளத்தனமாக விற்பனை செய்த சுபாஷ்கபூர் மூலம் இங்கு வந்துள்ளது என்று தெரியவந்தது. இவை 1991 – 2003ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் திருட்டுப் பொருட்கள் என்பது தெரியாமல் அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஹானலூலு அருங்காட்சியகம் 7 பழம்பெரும் கலைப்பொருட்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. விசாரணையில் அவை இந்தியாவில் கோவில்கள் மற்றும் பழமையான புத்தமடங்களில் திருடப்பட்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு வந்திருக்கலாம் என தெரிந்தது. எனவே இவைகளை அமெரிக்க அரசு இந்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment