உத்தரபிரதேசம் மாநிலத்தில் பள்ளி முதல்வரால் கொடூரமாக தாக்கப்பட்ட 11 வயது சிறுவன், இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாராபாங்கி மாவட்டம் ராகேலாமு கிராமத்தை சேர்ந்தவர் ஷாவிராஜ். இவருடைய மகன் சிவா(வயது 11). சிவா பாராபாங்கியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். சிவாவின் வகுப்பில் மூன்று மாணவர்கள் தங்களது பென்சில் மற்றும் ரப்பரை காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் அளித்து உள்ளனர். இதனையடுத்து வகுப்பில் இருந்த மாணவர்களின் பேக் அனைத்து பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிவாவின் பேக்கில் பென்சில் மற்றும் ரப்பர் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து வகுப்பு ஆசிரியர், ராகேலாமு அகடாமியின் முதல்வர் லாலித் வர்மாவிடம் இதுதொடர்பாக தகவல் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து பள்ளி முதல்வர் சிறுவன் சிவாவை கொடூரமாக தாக்கிஉள்ளார். சிறுவன் மாலை வீட்டிற்கு சென்றதும் தனக்கு வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். சிறுவன் இரத்த வாந்தியும் எடுத்து உள்ளார். உடனடியாக சிவாவை அவனது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில் பள்ளி முதல்வர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்து உள்ளது. சாஜீவன் என்பவரது மகன் சுதீரை பள்ளி முதல்வர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சாஜீவன் பள்ளியில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. “பள்ளியின் முதல்வர் சிறிய தவறுக்கும் குழந்தைகளை கொடூரமாக தாக்கும் குணம் கொண்டு இருந்தார்,” என்று சாஜீவன் தெரிவித்து உள்ளார்.
மாணவர் சிவா உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டு உள்ளது. அறிக்கை வந்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர் தாக்கப்பட்டதில் உள்காயம் காரணமாக உயிரிழந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே வர்மா மாணவரை அடித்ததை ஒத்துக் கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment