அப்பல்லோ வைத்தியசாலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட காணொளி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி
உயிரிழந்தார்.இவரது இறப்பில் பல மர்மம் இருப்பதாகவும்,
இது குறித்து விசாரணை நடத்தப்பட
வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாணைகள் நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், தற்போதும் அவர் வைத்தியசாலையில் இருக்கும் காணொளி
வெளியாகியுள்ளது.20 நொடிகள் உள்ள அந்த காட்சியில், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே ஜெயலலிதா பழச்சாறு அருந்திக்கொண்டிருக்கிறார்.இந்த காணொளி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் என்பவர் வெளியிட்டுள்ளார். ஆர்கே நகர் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு
நாளை(21) நடைபெறவுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment