Search This Blog n

03 January 2018

இரண்டு மணி நேரத்தில் 06 பேரை அடித்துக் கொன்ற நபர் கைது!

வட இந்தியாவின் ஹரியானா மாநிலம் பால்வால் நகரில் மர்ம நபர் இரும்பு கம்பியால் பலரை கொலை செய்துள்ளார். இதை சிசிடிவி மூலம் கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர். அவர் குறித்து 
நடத்திய விசாரணையில் கொலையாளி முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்தது. அவர் சிறிது
 மனநலம் பாதிக்கப்பட்டவர்.நேற்று அதிகாலையில், இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது. 2 மணி நேரத்திற்குள் மூன்று வாட்ச்மேன்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேரை அவர் அடித்துக் கொன்றுள்ளார்.
 கொலைக்காக காரணம் இன்னும் கண்டறியப்பட வில்லை. கைது செய்ய முயன்ற போது நரேசுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நரேஷ் படுகாயமடைந்தார்.ஈவு 
இரக்கமின்றி 6 பேர் இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது பொலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

Post a Comment