Search This Blog n

27 January 2018

மகாபலிபுரம் சாலையில் கார் ஓட்டுநரின் தற்கொலை முயற்சி

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சீட் பெல்ட் அணியவில்லை என்று பொலிஸார் அடித்ததால் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 65 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கார் ஓட்டுநரின் உடல்நிலை கவலைக்கிடமானதாக இருக்கிறது.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் ஹாலிடே இன் விடுதிக்கு அருகில் கார் ஓட்டுநர் ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். அவர் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டவில்லை என்று போலீசார் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் தனக்குத் தானே உடலுக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் ஓட்டுநர் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஓட்டுநரின் தற்கொலை முயற்சிச் சம்பவத்திற்கு பொலிஸாரே காரணம் எனக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர். நடுரோட்டில் பொலிஸாரை கண்டித்து கார் ஓட்டுநர் 
தீக்குளித்த சம்பவம் அந்தப் பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தீக்குளித்த கார் ஓட்டுநர் திருநெல்வேலியைச் சேர்ந்த மணிகண்டன் என்றும், தாம்பரத்தில் தங்கி வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் தெரிய
 வந்துள்ளது. 
சென்னை தாம்பரம் எஸ்ஆர்பி டூல்ஸ் அருகே இன்று காரில் வந்த போது சீட் பெல்ட் அணியவில்லை என்று போக்குவரத்து காவலர்கள் 4 பேர் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் காரை சர்வீஸ் சாலையில் நிறுத்திவிட்டு, தனது வாகனத்தில் இருந்த
 பெட்ரோலை ஒரு வாட்டர் பாட்டிலில் நிரப்பி எடுத்து வந்து தன் உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனையடுத்து போக்குவரத்து 
போலீசார் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர்.
 சீட் பெல்ட் அணியவில்லை என்று கால் முறியும் அளவு பொலிஸார் அடித்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக மீட்கப்பட்ட போது மணிகண்டன்
 தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

Post a Comment