31 January 2015
பதஞ்சலி யோகபீடம் நாட்டுக்கு மிகப்பெரிய சேவையாற்றி வருகிறது;
ஹரியானா முதல்வர் 'திடீர்' புகழாரம் யோகாகுரு பாபா ராம்தேவ் அண்மையில் ஹரியானா மாநிலத்திற்கான பிராண்ட் அம்பாஸிட்டராக அறிவிக்கப்பட்டார். யோகா மற்றும் ஆயுர்வேதத்தை பரப்புவதில் ஹரியானா அரசுக்கு அவருடைய பதஞ்சலி யோகபீடம்
உதவி புரிவதாக உறுதியளித்தது.
இந்நிலையில், திடீரென அம்மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார் பதஞ்சலி யோக பீடத்துக்கு புகழாரம் சூட்டினார். அவை பின்வருமாறு:-
இந்தியாவின் கலாச்சார தூண்களாக இருக்கும் யோகா மற்றும் ஆயுர்வேதத்தை உலகம் முழுவதும்
கொண்டு சேர்த்து வரும் பதஞ்சலி யோக பீடம் நாட்டுக்கு மிகப்பெரிய சேவையாற்றி வருகிறது. ஹரியானா மக்களிடம் யோகாவை இணைப்பதன் மூலம் அவர்களது வாழ்க்கையை வளமானதாகவும், நலமானதாகவும் மாற்ற முடியும்.
யோகாவும், ஆயுர்வேதமும் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.
இவ்வாறு கத்தார் தெரிவித்தார்.
ஏற்கனவே, ஹரியானா மாநிலத்தில் யோகாவை பள்ளிகளில் பாடமாக வடிவமைக்கவும், அங்கு யோகசாலைகளை ஏற்படுத்தவும் முதல்வர் கத்தார் யோகா குரு பாபா ராம்தேவ்-வை சந்தித்திருந்தது குறிப்பி்டத்தக்கது.
சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி;துவங்குகிறது
லெபனான், இலங்கை, நேபால், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஆர்மேனியா, ரஷ்யா, பெலாரஸ், கிரிஸிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஜியார்ஜியா, தஜகிஸ்தான், குவைத், கத்தார், தாய்லாந்து, உகாண்டா, சிரியா உள்ளிட்ட 18 நாடுகள் பங்குபெறும் 29-வது சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சி, ஹரியானாவின் சுராஜ்கந்த்-ல் நாளை கோலாகலமாக துவங்குகிறது.
நாளை முதல் வரும் பிப்ரவரி 15-ந்தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த மேளா நடக்கிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த அழகிய நளின கைவினைப் பொருட்கள் இடம் பெறுகிறது. அதுமட்டுமல்ல, சத்தீஸ்கரின் பாரம்பரிய நடனமான பாந்தி, ராவத் நச்சா பந்த்வானி, சைத்ரா, சைலா, சூவா உள்ளிட்ட நடனங்களும் இடம்பெறுகின்றன.
டிக்கெட்டுகளை புக் செய்வதற்காக ஸ்மார்ட்போன்களில் 'Surajkund Mela' என்ற ஆப்ளிகேஷனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 22 டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன.
அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தங்களால் ஆயுதப் போட்டி உருவாகும்:
பாகிஸ்தான் கவலை ஒபாமாவின் இந்தியப் பயணத்தின்போது, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்தான ஒப்பந்தங்களால் தெற்காசியாவில் ஆயுதப் போட்டி உருவாகும் என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் அச்சம் தெரிவித்துள்ளார். ஒபாமாவின் இந்தியப் பயணம் தொடர்பாக,
இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு சர்தாஜ் அஜீஸ் பேசியதாவது..
. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தங்களால் உருவாகக்கூடிய ஏற்றத்தாழ்வுகளையும், அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளையும் பாகிஸ்தான் ஆய்வு செய்து வருகிறது. தெற்காசியாவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நிலைத்தன்மையே பாகிஸ்தானின் முக்கியமான கவலையாகும்.
இந்த நோக்கத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஆதரவளிக்க வேண்டும். ஒபாமாவின் இரண்டாவது இந்திய வருகைக்கு முன்னதாக, அமெரிக்காவிடம் பாகிஸ்தான்
இதை வற்புறுத்தி தெரிவித்தபோதிலும், அமெரிக்கா அலட்சியப்படுத்தியது. தெற்காசியாவின் பிராந்திய நிலைத்தன்மையை பாதிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அமெரிக்கா, ரஷியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதன் மூலம் இந்தியா தனது ராணுவக் கட்டமைப்பை பலப்படுத்த முயற்சிக்கிறது. இதனால் தெற்காசியாவில் ஏற்கெனவே
இருக்கும் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும்.
இந்திய-பாகிஸ்தான் பதற்றங்கள் அதிகரித்து, சர்வதேச எல்லைக்கோட்டில் போர் நிறுத்த மீறல்கள் நிகழ்ந்த சூழலில், ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பது கவலைக்குரியதாக உள்ளது என்று சர்தாஜ் அஜீஸ் பேசினார். முன்னதாக, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்ற்கையில், தேசிய நலன்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது பற்றி ஆலோசனை;
தமிழகத்தில் உள்ள சுமார் 1 லட்சம் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
1 லட்சம் அகதிகள்
இலங்கையில், கடந்த 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் மற்றும் படுகொலைகள் தீவிரமடைந்த போது, அங்கிருந்து சுமார் 3 லட்சம் பேர் அகதிகளாக தமிழகத்துக்கு வந்தனர்.
இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் தலையீட்டினால், இதுவரை சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்.
தற்போது சுமார் 1 லட்சத்து 2 ஆயிரம் அகதிகள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களில் 64 ஆயிரத்து 924 பேர் தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இலங்கை மந்திரி
இந்த நிலையில் 3 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 19-ந் தேதி டெல்லி வந்த இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களுடைய சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து இரு நாட்டு உயர் அதிகாரிகளும் 30-ந் தேதி டெல்லியில் சந்தித்து பேசுவது என்றும் அப்போது தீர்மானிக்கப்பட்டது.
தமிழக அரசு எதிர்ப்பு
ஆனால் இந்த கூட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது
இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்- அமைச்சர் பன்னீர் செல்வம் கடந்த புதன்கிழமை ஒரு கடிதம் எழுதினார். அதில், இலங்கை அரசால் உறுதியான நம்பத்தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னரே, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும், எனவே தற்போதைய நிலையில் இந்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டு இருந்தார்.
டெல்லியில் கூட்டம்
என்றாலும் திட்டமிட்டபடி, டெல்லியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இலங்கை விவகாரங்களுக்கான பொறுப்பை கவனிக்கும் மத்திய இணைச் செயலாளர் சுசித்ரா துரைசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரிகளும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை தூதரகத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.
திருப்பி அனுப்புவது பற்றி ஆலோசனை
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களுடைய தாயகத்துக்கு திருப்பி அனுப்புவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், இதற்காக இரு தரப்பிலும் மேற்கொள்ள வேண்டிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் மற்றும் அகதிகளை இலங்கையில் சுமுகமான வகையில் மறுகுடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மேலும் சில ஆலோசனை கூட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
30 January 2015
இந்து மதத்திற்கு 100 பழங்குடி கிறிஸ்தவர்கள் மீண்டும் மாற்றம்
மேற்கு வங்காள மாநிலம் பிர்பூம் மாவட்டம் ராம்புர்கத் பகுதியில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய 100க்கும் மேற்பட்ட பழங்குடியினரை விஸ்வ இந்து பரிஷத்தினர் மீண்டும் இந்து மதததிற்கு மாற்றினர்.இந்த மறுமதமாற்ற நிகழ்ச்சியில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் ஜுகல் கிஷோர் கலந்து கொண்டார்,
இந்த மதமாற்றம் குறித்து கேட்ட போது விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா கூறியதாவது:-
சிலர் இந்து மதத்திற்கு மாற வேண்டும் என விரும்பினால் நாம் அதை எப்படி தடுத்து நிறுத்த முடியும். நாங்கள் பலவேறு உதவிகளை அறிவித்து வருகிறோம். ஓவ்வொரு இந்து குடும்பங்களுக்கும் வேலை வாய்ப்பு மற்றும் குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகிறோம்.
என்று கூறினார்.
பேரணியில் உரையாற்றிய தொகாடியா கூறும் போது வங்காளதேசத்தில் இருந்து முஸ்லீம்கள் சட்டவிரோதமாக இங்கு குடியேறுகின்றனர் இதற்கு மாநில அரசு ஒரு கால வரையறையற்ற திட்டத்தை தீட்ட வேண்டும். இல்லையென்றால் விரைவில் மேற்குவங்காளம் வங்காள தேசமாக மாறி விடும்.என்று கூறினார்.
பழங்குடி கிறிஸ்தவர்கள் மீண்டும் இந்துவாக மதம் மற்றம் செய்யபட்டது குறித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இந்த மத மாற்றம் வலுக்கட்டாயமாக நடந்தது என்றால் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என கூறி உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் டெரக் ஒ’பிரன் தனது டுவிட்டரில் கூறி உள்ளதாவது:-
வற்புறுத்தி இந்த மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்றால், இந்த பிரச்சினை வலுவான முறையில் தீர்க்கப்படும் சாத்தியம் உள்ளது. என கூறி உள்ளார்.
வெளியுறவுத் துறை செயலர் சுஜாதாசிங் அதிரடியாக நீக்கம்!!
இந்திய டெல்லி: நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் சுஜாதாசிங் அதிரடியாக நீக்கப்பட்டு ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2013ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டவர் சுஜாதாசிங். அப்போதே பிரதமராக இருந்த மன்மோகன்சிங்,
ஜெய்சங்கரைத்தான் வெளியுறவுத் துறை செயலராக நியமிக்க விரும்பினார் என்றும் ஆனால் சோனியாதான் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சுஜாதாசிங்கை நியமிக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த போது பல்வேறு அமைச்சக செயலாளர்கள் மாற்றப்பட்டனர். சுஜாதாசிங்கும் மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் சுஜாதாசிங் பதவியில் தொடர்ந்தார்.
பின்னர் இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர் நிலையான பேச்சுவார்த்தை திடீரென ரத்தான போதும் சுஜாதாசிங்குக்கு நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் சுஜாதாசிங் பதவியில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பி விண்ணப்பித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது யு.பி.எஸ்.சி. தலைவர் பதவியை ஏற்குமாறு மத்திய அரசு தரப்பில் சுஜாதாசிங்கிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதனை சுஜாதாசிங் நிராகரித்திருக்கிறார். இதனால் மத்திய அரசு அவர் மீது அதிருப்தியடைந்தது.
இதனைத் தொடர்ந்தே சுஜாதாசிங் பணிக் காலத்துக்கு முன்பே அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது சுஜாதாசிங் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதராக நியமிக்கப்படலாம் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையால் சுஜாதாசிங் மாற்றம் சற்றே ஒத்திபோடப்பட்டிருந்தது. தற்போது ஒபாமா இந்திய பயணத்தை முடித்துவிட்டு புறப்பட்ட மறுநாளே அவர் தூக்கியடிக்கப்பட்டுள்ளார்..
மேலும் பிரதமர் மோடி, ஜெய்சங்கருக்கு முக்கிய பணி வழங்குவது குறித்து கடந்த சில மாதங்களாக ஆலோசித்தும்
வந்ததாக தெரிகிறது. பிரதமர் மோடிக்கான வெளியுறவுக் கொள்கை ஆலோசகராக அதாவது பிரதமருக்கு மட்டுமேயான வெளியுறவுத் துறை ஆலோசகராக ஜெய்சங்கரை நியமிக்க ஆலோசிக்கப்பட்டதாம்..
அப்படி செய்தால் பிரதமர் அலுவலகத்தில்
வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இடையே கருத்து வேறுபாடு எழும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதன் பின்னர்தான் வெளியுறவுத் துறை செயலாளராக்குவது என்று முடிவு செய்யப்பட்டதாம்.
அதனைத் தொடர்ந்தே சுஜாதாசிங் அதிரடியாக நீக்கப்பட்டு தற்போது ஜெய்சங்கரை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள்.
இதனிடையே சுஜாதா சிங்கை நீக்கிவிட்டு, ஜெய்சங்கரை வௌியுறவுத்துறை செயலராக நியமித்ததை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி விதிமுறைகளை மீறி தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
கடந்த 1987ஆம் ஆண்டு ஏ.பி.வெங்கடேஸ்வரனை பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி அதிரடியாக வெளியுறவுத் துறை செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்றியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது 28 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அதே போன்ற சர்ச்சை வெடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
29 January 2015
பணத்தை பெற்றுக்கொண்டு ஆதாரத்தை சேகரியுங்கள்:
எதிர்கட்சிகளிடம் இருந்து டெல்லியில் உள்ள எதிர்கட்சிகள் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், எதிர்கட்சிகள் வழங்கும் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள். இருப்பினும் இந்த செயலை ஸ்டிங் ஆபரசேன்கள் மூலம் பதிவு செய்து எதிர்கட்சிகளின் செயலை அம்பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று
அரவிந்த் கெஜ்ரிவால் கூறுவது இது முதல் முறையல்ல. கடந்த சில தினங்களுக்கு முன், டெல்லி வாக்காளர்கள் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில்
ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியது பெரும் சர்ச்சையானது. தொடர்ந்து இதுபோன்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறி வந்ததால், கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்து இருந்தது .
இதையடுத்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் கமிஷனையும் நாட்டின் சட்டங்களை மதிப்பதாகவும்,இந்த கருத்து தேவையற்றது என கருதினால் இது போன்ற பேச்சை தாம் நிறுத்திவிடுவதாகவும் கூறி இருந்த நிலையில், தற்போது தொண்டர்களை பணம் வாங்குமாறு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவில் அணுசக்தி உடன்பாட்டில் ஏற்பட்ட திருப்புமுனை என்ன???
6 ஆண்டு முட்டுக்கட்டை நீங்கும் வகையில் சிவில் அணுசக்தி உடன்பாட்டில் ஏற்பட்ட திருப்புமுனை என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க கோரி பாராளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
6 ஆண்டு இழுபறி
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சிவில் அணுசக்தி உடன்பாடு, 2005–ம் ஆண்டு, ஜூலை 18–ந் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யு புஷ்சுக்கும் இடையே வாஷிங்டனில் கையெழுத்தானது.
கடைசியாக இதை அமல்படுத்துவது தொடர்பாக, வாஷிங்டனில் 2008–ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 10–ந் தேதி அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜிக்கும், அமெரிக்க வெளியுறவு மந்திரியாக இருந்த கண்டலிசா ரைசுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும் சிவில் அணுசக்தி உடன்பாடு அமலுக்கு வராமல் 6 ஆண்டுகளாக இழுபறியில் இருந்து வந்தது.
நீங்கியது முட்டுக்கட்டை
இந்த நிலையில், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் இதுகுறித்து கடந்த 25–ந் தேதி, டெல்லி ஐதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து, ‘சிவில் அணுசக்தி உடன்பாட்டை அமல்படுத்துவதில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது; 6 ஆண்டு காலமாக இருந்து வந்த முட்டுக்கட்டை நீங்கியது’ என தகவல்கள் வெளியாகின. இதை இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களிடம் உறுதி செய்தனர். ஆனால் இது குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
காங்கிரஸ் முடிவு
இந்த நிலையில், பாராளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடருக்காக அடுத்த மாதம் 23–ந் தேதி கூடுகிறது. அப்போது, இந்த சிவில் அணுசக்தி உடன்பாடு விவகாரத்தை கையில் எடுக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இது பற்றி அந்த கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மேல்–சபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆனந்த் சர்மா கூறியதாவது:–
சிவில் அணுசக்தி உடன்பாட்டை வணிகரீதியில் அமல்படுத்துவதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட உடன்பாடு குறித்து பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். (விபத்து ஏற்படும்பட்சத்தில்) பொறுப்பு ஏற்பது குறித்தும், நிதி இழப்பீடு வழங்குதல் பற்றியும் கூறப்பட வேண்டும். உடன்பாட்டின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்த முழுவிவரம் இன்னும் கிடைக்கவில்லை.
பகிர்ந்து கொள்ள வேண்டும்
இதுவரை அதை அவர்கள் (மத்திய அரசு) தெளிவற்றதாக வைத்துள்ளனர். அரசு அதுகுறித்த விவரங்களை பகிர்ந்துகொள்ளவில்லை. அவற்றை பாராளுமன்றத்தின் முன் கண்டிப்பாக வைக்க வேண்டும்.
சிவில் அணுசக்தி என்பது உடன்பாடு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டமாக இருக்கிற வரையில், எங்கள் கட்சி எதிர்க்காது.இவ்வாறு அவர் கூறினார்.
இரு சபைகளிலும்...
இந்த விவகாரத்தை காங்கிரஸ், பாராளுமன்றத்தில் இரு சபைகளிலும் எழுப்பும் என பெயர் குறிப்பிட விரும்பாத அந்த கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘‘இந்த விவகாரம், பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையின்மீது பிப்ரவரி 24, 25 தேதிகளில் நடக்கிற விவாதத்தின்போது எழுப்பப்படும்’’ என்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், ‘‘மோடி அரசு அளித்துள்ள வாக்குறுதிகள், ஏற்கனவே கையெழுத்தான சிவில் அணுசக்தி உடன்பாட்டில் திருத்தங்கள் செய்ய வைக்குமா, நமது நிலைப்பாட்டுக்கு
ஏற்றவகையில் அமைந்துள்ளனவா என்பது குறித்து பரிசீலிப்போம். ஒபாமா வருகை பற்றி பாராளுமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை தாக்கல் செய்வது பிரதமர் நரேந்திர மோடியா, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜா என்று பார்ப்போம். என்ன திருப்புமுனை ஏற்பட்டுள்ளது என்பதை அறிய முற்படுவோம் என கூறினார்.
28 January 2015
போர் விமானம் விழுந்து நொறுங்கியது விமானி உயிர் தப்பினார்!!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து மிக்–27 ரக போர் விமானம், உத்தர்லை படை தளத்திற்கு புறப்பட்டது. வழியில் இந்த விமானம், என்ஜின் கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக விமானி பாராசூட் உதவியுடன் குதித்து உயிர் தப்பினார்.
பாகிஸ்தான் எல்லை அருகே நேற்று மாலை 3.10 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது. விமானத்தின் ஒரு பாகம் தீப்பிடித்து எரிந்த நிலையில் மகாபர் கிராமம் அருகே சாலையில் சென்ற மோட்டார்சைக்கிள் மீது விழுந்தது. அதில் சென்ற லூன்சிங் என்பவர் காயம் அடந்தார். மோட்டார்சைக்கிளும் சேதம் அடைந்தது. லூன்சிங் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்பட்டார்.
தகவல் கிடைத்ததும் விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்றது. காயம் அடைந்த விமானி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாக இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
தெரிவித்தார்.
ஜோடிக்கப்பட்டது ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதத்தை நிறைவு செய்தார்
சொத்து குவிப்பு வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பு மூத்த வக்கீல் குமார் இறுதி வாதத்தில் எடுத்துரைத்தார். இத்துடன் ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் வாதம் நிறைவடைந்தது.
மேல்முறையீட்டு மனு
சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தண்டனை வழங்கி பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை கடந்த 5–ந்தேதி தொடங்கி தினமும் நடைபெற்று வருகிறது.
முதல் 5 நாட்கள் ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் குமார் ஆஜராகி வாதிட்டார். அதன் பிறகு ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் நாகேஸ்வரராவ் தொடர்ந்து 8 நாட்கள் ஆஜராகி பல்வேறு முக்கியமான விஷயங்களை எடுத்து வைத்து வாதிட்டார். ஜெயலலிதாவுக்கு வந்த வருமானங்கள் குறித்த முழு விவரங்களையும் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 23–ந்தேதியுடன் தனது வாதத்தை நிறைவு செய்தார். அத்துடன் ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவடைந்ததாக கூறப்பட்டது.
நீதிபதி அனுமதி வழங்கினார்
இந்த நிலையில் 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் 14–வது நாள் விசாரணை நேற்று மீண்டும் தொடங்கியபோது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் குமார், நிறுவனங்கள் சம்பந்தமாக சில அம்சங்கள் விடுபட்டு இருப்பதாகவும், அதை கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுவர அவகாசம் தருமாறும் கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குமாரசாமி தொடர்ந்து வாதிட அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து குமார் வாதிட்டபோது நமது எம்.ஜி.ஆர். நிறுவனத்துக்கு வந்த வருமானம், திராட்சை தோட்டத்தில் கிடைத்த வருமானம் மற்றும் வருமான வரித்துறை கூறிய கருத்துக்களை எடுத்து வைத்தார்.
மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டாம்
அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி, ‘‘நீங்கள் சொல்லும் இந்த விவரங்களை வக்கீல் நாகேஸ்வரராவ் விரிவாக எடுத்து வைத்து வாதிட்டுவிட்டார். இதுவரை இங்கு சொல்லப்படாத விஷயங்கள் இருந்தால் அதை எடுத்து சொல்லுங்கள். சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டாம்’’ என்றார்.
அதைத்தொடர்ந்து குமார் தனது வாதத்தை தொடர்ந்தார். அவர் வாதிடுகையில் கூறியதாவது:
ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் ஆகிய 2 நிறுவனங்களில் மட்டுமே ஜெயலலிதா பங்குதாரராக இருக்கிறார். மற்ற நிறுவனங்களுக்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த நிறுவனங்களில் ஜெயலலிதா முதலீடு எதுவும் செய்யவில்லை. ஜெயலலிதா வீட்டில் சசிகலாவும், இளவரசியும் தங்கி இருந்தனர் என்ற ஒரே காரணத்துக்காக ஊழல் தடுப்பு போலீசார் இதை மாற்றி மற்ற நிறுவனங்களிலும் ஜெயலலிதாவுக்கு பங்கு இருப்பதாகவும், அவர் முதலீடு செய்து இருப்பதாகவும் கூறி சொத்து குவிப்பு வழக்கை ஜோடித்துவிட்டனர்.
விடுதலை செய்ய வேண்டும்
இது முற்றிலும் தவறானது. ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு வந்த மாத வாடகை மற்றும் முன்பணம், காலி நிலத்துக்கு வந்த வாடகை ஆகியவற்றை ஊழல் தடுப்புத்துறை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இதில் கிடைத்த வருமானத்தை சொத்து குவிப்பு வழக்கில் சேர்த்துவிட்டனர். இது தவறானது.இதை நாங்கள் எடுத்துக் கூறியும் கீழ்கோர்ட்டு இதை ஏற்கவில்லை. இதை ஏற்று இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும்.’’இவ்வாறு வக்கீல் குமார் வாதிட்டார்.
சன் டி.வி. அதிகாரி கைது ஆணையத்தில் புகார்
கைது செய்யப்பட்ட தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் செயலாளர் மற்றும் சன் டி.வி. அதிகாரி சார்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.
சி.பி.ஐ. கைது
சட்டவிரோதமாக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்பு மந்திரி தயாநிதி மாறனின் கூடுதல் தனிச்செயலாளராக இருந்த வி.கவுதமன், தலைமை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரீஷியன் கே.எஸ்.ரவி ஆகியோர், கடந்த 21–ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மூவரையும் அடுத்த மாதம் (பிப்ரவரி) 14–ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி மூவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்
இந்த நிலையில் எஸ்.கண்ணன் மனைவி நபிசா மற்றும் வி.கவுதமன் மனைவி மணிமேகலை ஆகியோர் தரப்பில் நேற்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் தனித் தனியாக புகார் மனு அளிக்கப்பட்டது.
எஸ்.கண்ணன் சார்பாக அவருடைய மனைவி நபிசா அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–
ஒத்துழைப்பு அளித்தார்
தற்போது சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள எனது கணவர் கண்ணனை எந்த வித முகாந்திரமும் இன்றி முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறனுக்கு எதிரான விசாரணையில் சாட்சியம் அளிக்க சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது.
அவர்கள் அழைத்த போதெல்லாம் எனது கணவர் ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளித்தார். இந்த விசாரணைகளின்போது தயாநிதி மாறனுக்கு எதிராக சாட்சியம் அளிக்குமாறு, அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதாக எனது கணவர் பலமுறை என்னிடம் கூறியுள்ளார்.
விசாரணை என்ற பெயரில் பலமுறை அழைத்து கடுமையான மன உளைச்சலுக்கு அவரை ஆளாக்கி இருக்கிறார்கள்.
மனித உரிமை மீறல்
எனது கணவருக்கு இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று உள்ளது. அவருக்கு அளிக்கப்படும் மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தல் மிகவும் அச்சம் அளிக்கிறது. அவருக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை அவர் தாங்குவாரா என்பது தெரியவில்லை.
அவருடைய உடல்நிலை பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் இப்படி அவரை கைது செய்து துன்புறுத்துவது மனித உரிமை மீறலாகும். இதனால் அவருடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும் என்றும் அச்சப்படுகிறேன். எனவே மனித உரிமை ஆணையம் இதில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நேரில் தாக்கல்
வி.கவுதமன் மனைவி மணிமேகலை அளித்துள்ள புகாரிலும் மருத்துவ ரீதியான பிரச்சினை தவிர ஏறத்தாழ இதேபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன.
மேற்கண்ட இருவரின் புகார் மனுக்களையும் அவர்களின் சார்பில் வக்கீல் ஜெகதீஸ்வரன் நேற்று டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி தாக்கல் செய்தார்.
சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி மறுப்பு
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரையும், 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.ஐ. அதிகாரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை சி.பி.ஐ. சிறப்பு செசன்சு கோர்ட்டு நீதிபதி கிருஷ்ணமூர்த்தி விசாரித்து நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை (இன்று) பிறப்பிக்கிறார்.
27 January 2015
இந்தியாவின் தார்மீக கடப்பாடு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தர வேண்டியது! -
விக்னேஸ்வரன் வலியுறுத்தல் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் தார்மீக கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 66 ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வுகள் யாழ். நகர விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய குடியரசு தினத்தில் என்னை அழைத்தமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் புதியதொரு அரசியல் சூழலில் பதவியேற்று வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ள துணைத்தூதுவர் நடராஜ் அவர்களினால் இந்தியாவுக்கும் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான உறவு மேலும் வலுவடையும் என்று நம்புகின்றேன்.
இன்று புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளது. எனினும் ஏமாற்றுபவர்கள் அதற்கான தண்டனையினை அடைந்தே தீருவார்கள். தாமே ஏமாற்றத்திற்கு உள்ளாவார்கள். சிலரை என்னாளும் ஏமாற்றலாம் பலரை சிலதருணங்களில் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லாக் காலங்களிலும் ஏமாற்றலாம் எண்ணுவது பழமை. எது எவ்வாறு இருப்பினும் எமது நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளனர். அந்த சூழலை இன மத பாகுபாடு இன்றி மக்கள் யாவரும் சேர்ந்து உருவாக்கியமை எமது நாட்டின் புதிய அத்தியாயத்திற்கு இடமளித்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
தமிழர்களுடன் இணைந்து தான் நாம் எதிர்வரும் காலங்களில் செயற்படுவோம் என்று சிங்கள சகோதர சகோதரிகள் கூறுவது தென்பூட்டுவதாய் அமைந்துள்ளது. அரசியல் தலைவர்கள் எவ்வாறான இருந்தாலும் மக்கள் இடையில் ஒரு விழிப்புணர்வு தோன்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இன்று வடக்கு, கிழக்கு மாகாண மக்களும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஆளப்பட்டு வருகின்றார்கள்.
இந்த திருத்தச் சட்டமானது இந்திய இலங்கை உடன்பாட்டில் ஏற்படுத்தப்பட்டது
ஆனால் உடன்பாட்டில் இடம்பெற்ற திருகுதாளங்கள் குறித்து எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 13ஐ பொறுத்த வரையில் வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களுக்காகவே இந்தியா 1987 ஆம் ஆண்டு இந்த உடன்பாட்டில் ஈடுபட்டது. இதற்கு ஏற்பட்ட தடங்கல் என்ன என்று பார்த்தால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தினால் எதுவும் கொடுக்கவில்லை என்று சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்காக அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா முழு இலங்கைக்கும் மாகாண சபை முறைமையினைக் கொண்டுவந்தார்.
இதனால் வடக்கு , கிழக்கு மக்கள் சார்பாக மத்திய அரசின் கடப்பாடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அத்துடன் ஏனைய மாகாணங்கள் கேட்காத காணி, பொலிஸ் அதிகாரங்களை ஏன் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கேட்கிறீர்கள் என்றும் கேள்வி கேட்கின்றனர். இது தான் அன்று இருந்த அரசினாலும் கடந்த 8 ஆம் திகதி வரை இருந்த அரசினாலும் கேட்கப்பட்டு வந்தது. இனிமேல் எவ்வாறு இருக்குமோ தெரியவில்லை. அதிகாரங்களை பகிர்ந்து தரவேண்டிய கடப்பாடு மத்திய அரசுக்கு இருந்தது.
எனினும் ஏனைய மாகாணங்களை விட இன, மொழி, மதம் ஆகியவற்றால் வேறுபட்டு சிங்கள மொழி தோன்ற முன்பே நாங்கள்
குறிப்பிட்ட இடங்களில் வாழ்ந்தமையினால் எமக்குத் தான் குறித்த அதிகாரங்களைப் பெறுவதற்கான தேவை இருந்தது. இதனால் 13ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்த குறைப்பாடுகள் எம்மை வெகுவாகப் பாதித்தது. பாதிப்பு தொடர்பில் தீர்க்க தரிசனத்துடன் அறிந்து கொண்ட அன்றைய தலைவர்களான சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் மற்றும் இன்றைய தலைவரான சம்பந்தன் போன்றவர்கள் அன்றே உணர்ந்து தாம் கைச்சாத்திட்டதை அன்றைய இந்திய பிரதமர் ரஜீவ்காந்தியிடம் தெரிவித்திருந்தார்கள்.
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் மாகாண சபைகள் சட்ட மசோதா பற்றியும் அவர்கள் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள். 13ஆவது திருத்தச் சட்ட ஏற்பாடுகள் தமிழர்களுடைய அரசியல் ஆசைகளையும் , அபிலாசைகளையும் எந்த விதத்திலும் திருப்திப்படுத்தவில்லை என்பதை அவர்கள் அன்றே கூறியிருந்தார்கள். எனினும் இந்திய அரசின் அனுமதியின்றி இலங்கையில் மாகாண சபைகள் முறைமை ஆரம்பிக்கப்பட்டது. அதனையும் அவர்கள் மன்னித்திருந்தார்கள். மேலும் வடக்கு கிழக்கை ஒன்றாக இணைப்பது குறித்த மக்களின் எதிர்பார்ப்பு புறக்கணிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் தற்துணிவுடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. எனினும் காலப்போக்கில் உயர் நீதிமன்றமும் இணைக்க முடியாது
என்று அறிவித்தது. கிழக்கு மாகாணம் இன்று பெரும்பான்மையினரின் உள்ளீடுகளுக்கு பாரியளவில் முகம் கொடுத்து வருகின்றது. அதேபோல
மாகாணத்தை சிறுப்பித்தமையால் தமிழ் மக்களின் பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் தெற்கில் இருந்து சிங்கள மக்களைக் கொண்டு வந்து குடியேற்றும் நோக்கத்தில் மாவட்டங்களில் இருக்கும் பெரும்பான்மையின அரச அதிபர்களால் இராணுவ உதவியுடன் இக் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனாலேயே வடக்கில் உள்ள 5மாவட்டங்களிலும் தமிழர்கள் அரச அதிபர்களாக வரவேண்டும் என்ற வடக்கு மாகாணசபையின் கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. சட்டப்படி வழங்க வேண்டிய அதிகாரங்கள் இந்திய சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதேஅளவிற்கு இங்கும் வழங்கப்பட வேண்டும் என்று பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு எட்டப்பட்டது. எனினும் அவற்றை செயற்படுத்தாது அவற்றை மாற்றி தம்வசம்
வைத்திருப்பதுபோல மத்திய அரசாங்கம் திருத்தங்களைக் கொண்டது. அத்துடன் ஆளுநர் ஜனாதிபதியின் கட்டுப்பாடுகளுக்குள் செயற்பட வேண்டிய இருந்தது.
இதனையே நாம் கடந்த காலங்களில் அனுபவித்து வந்துள்ளோம். இவ்வாறான நிலை ஏற்படும் என்று அன்றைய தலைவர்கள் நன்கு அறிந்திருந்தனர். எனினும் எமக்கு தரப்பட்டுள்ள அதிகாரங்கள் இந்திய சட்டத்தில் கூறப்பட்டதுடன் ஒட்டியிருக்க வேண்டும் என்று கூறப்பட்டாலும் அவை வெகுவாக குறைந்திருந்தன.13ஆவது திருத்தச் சட்டத்தில் இருக்கும் அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கையினையே மேற்கொண்டனர். அத்துடன் எல்லா வழிகளிலும் நசுக்கப்பட்டும், அச்சத்திற்கு மத்தியிலுமே வாழ்ந்தனர்.
இதனால் வடக்கு கிழக்கு மக்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தவும் பலகாலம் நிலைத்து நிற்கக் கூடிய நீதியான அதிகார பலம்மிக்க தீர்வைப் பெறவும் இன்னமும் இந்தியாவையே நம்பி இருக்கின்றனர் என்பதை குடியரசு தினத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதனைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீக கடப்பாடு உங்களுக்கு உண்டு என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். ஒரு வருட காலமாக மாகாண சபையில் இருந்து வருவதால் அதில் உள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களைக் கண்டு வருகின்றோம்.
அத்துடன் எமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் குறைவானவை . எனினும் அவற்றில் மத்திய அரசு தனக்கு பங்கு போட்டும் கொள்கின்றது. இதற்கு உதாரணமாக திவிநெகுமவைக் கூற முடியும். எமது அதிகாரங்களைத் தூக்கி மத்திய அரசாங்க அலுவலர்களுக்கு வழங்கும் சட்டமாகவே காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து எமது அமைச்சர்கள் இந்திய பிரதமரைச் சந்திக்க ஆவலாக இருக்கின்றார்கள். எமது விடயங்களை அவருக்கு எடுத்துக் கூறி இந்திய, இலங்கை, வடக்கு மாகாண பிரதிநிதிகளின் கலந்துரையாடல் மூலம் உரிய வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பராக் ஒபாமாவும் ஆசியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்த வரை இந்தியாவுடன் அமெரிக்கா , ஆபிரிக்கா , ஐரோப்பா ஆகியன ஒன்றிணைந்து செயற்பட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்றும் நம்புகின்றோம். வடக்கு ,கிழக்கு மாகாண மக்கள் இன்னமும் இந்தியாவிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஒபாமா அறிவிப்பு ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு!!
இந்தியாவில், ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறினார்.
தொழில் அதிபர்கள் மாநாடு
டெல்லியில் தாஜ் பேலஸ் ஓட்டலில், இந்தோ–அமெரிக்க முதன்மை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. அதில், இந்திய தரப்பில், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சுனில் மிட்டல், அதானி குழும தலைவர் கவுதம் அதானி, எஸ்ஸார் குழும தலைவர் சசி ரூயா, மகிந்திரா அன்ட் மகிந்திரா தலைவர் ஆனந்த் மகிந்த்ரா உள்பட 17 தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்க தரப்பில், பெப்சிகோ நிறுவனத்தைச் சேர்ந்த இந்திரா நூயி உள்பட 30 பேர் கலந்து கொண்டனர்.
இந்திய தொழில் அதிபர்கள், அமெரிக்காவின் விசா நிபந்தனைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசினர்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா
இந்த கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டனர். அவர்களும் பேசினர்.
ஒபாமா பேசுகையில் கூறியதாவது:–
புலம் பெயர்ந்த இந்தியர்கள் வியத்தகு நிறுவனங்களை உருவாக்கி உள்ளனர். அவர்களுக்கு வியாபார திறமை உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையான கூட்டணி கொண்ட நாடுகள். இரு நாட்டு மக்களும் பலன் அளிக்கும் வகையில், இன்னும் நிறைய வர்த்தகத்தையும், முதலீட்டையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இரு நாட்டு வர்த்தகம், கடந்த சில ஆண்டுகளில் 60 சதவீதம் உயர்ந்துள்ளது.
இவ்வாறு ஒபாமா கூறினார்.
மோடி பேச்சு
இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:–
எல்லா பெரிய திட்டங்களையும், நானே நேரடியாக கண்காணிப்பேன். இந்தியாவில் மின் கொள்முதலை ஊக்கப்படுத்த, பொருளாதாரத்தை மேம்படுத்துவது அவசியம். அதற்கு உள்கட்டமைப்பு மற்றும் வேளாண்மை துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.
எல்லா பிரச்சினைகளுக்கும் நல்லாட்சியும், மக்களுக்கு சாதகமான அணுகுமுறையுமே தீர்வாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.24 ஆயிரம் கோடி
பின்னர் நடைபெற்ற இந்திய–அமெரிக்க வர்த்தக மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பேசியதாவது:–
இந்தியாவுடனான வர்த்தகத்தை பெருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவில் அமெரிக்க அமைப்புகள் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடுகளை செய்யும். இதில் ரூ.6 ஆயிரம் கோடி சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடனாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் மோடி பேசுகையில், ‘இந்திய அரசு, அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழ்நிலையை அளிக்கும். அத்துடன், அவர்களின் திட்டங்களில் அவர்களுக்கு வழி காட்டும். உங்களுடைய அறிவுசார் சொத்துரிமை பாதுகாக்கப்படும்’ என்று கூறினார்.
குடியரசு தின விழாவில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு??
டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளை பார்வையிட வந்த பொதுமக்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அணிவகுப்புக்கு மாவோஸ்டுகள் இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்று கருதியதால் பொதுமக்கள் கொண்டு வந்த கருப்பு தொப்பி, ‘மப்ளர்’ உள்ளிட்ட தலைகவசப் பொருட்களை நுழைவு வாயிலில் பாதுகாப்பு படைவீரர்கள் அனுமதிக்கவில்லை.
மேலும், அணிவகுப்பு நிகழ்ச்சிகள் தொடங்கியதும் ராஜபாதை பகுதியில் வெளியே செல்லும் பாதைகள் மூடப்பட்டன. விழா முடிந்த பின்பு அந்த பாதைகள் திறக்கப்பட்டன..
26 January 2015
பத்மஸ்ரீ விருது பி.வி.சிந்து உள்பட 5 பேருக்கு !!
மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகளுக்கு விளையாட்டுத்துறையைச் சேர்ந்த 6 பேரும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
உலக பேட்மிண்டன் போட்டியில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்ற ஒரே இந்தியரான வீராங்கனை பி.வி.சிந்து,
இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங், ஆக்கி வீராங்கனை சபா அஞ்சும், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், முன்னாள் கைப்பந்து வீராங்கனையும், தற்போது மலையேற்ற சாகசத்தில் ஈடுபட்டு வருபவருமான அருனிமா சின்ஹா ஆகியோர்
பத்ம ஸ்ரீ விருதை பெறுகிறார்கள்.
இதில் அருனிமா சின்ஹா, 2011–ம் ஆண்டு ரெயில் பயணத்தின் போது கொள்ளை கும்பலால் தூக்கி வீசப்பட்டதில்
இடதுகாலை இழந்தவர். அதன் பிறகு மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்ட அருனிமா, செயற்கை காலுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்.
முன்னாள் மல்யுத்த வீரரும் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில்குமாரின் பயிற்சியாளருமான சத்பால் சிங் பத்மபூஷண் விருதை பெறுகிறார்.
அதே சமயம் மல்யுத்த வீரர் சுஷில்குமாரின் பெயர் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் தனது பெயரை விடுவித்தது ஏன் என்று பேட்மிண்டன் மங்கை சாய்னா நேவால் போர்க்கொடி தூக்கினார். பிறகு தாமதமாக அவரது பெயரும் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. ஆனால் இருவரது பெயர்களும் விருது பட்டியலில் இடம் பெறவில்லை.
எதிர்ப்பு தெரிவித்து ரயில் தண்டவாளம் தகர்ப்பு!!!
அமெரிக்க அதிபர் ஒபாமா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசாவில் ரயில் தண்டவாளம் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. முனிகோடா ரயில் நிலையம் அருகே முனிகோல் என்ற இடத்தில் நேற்று தண்டவாளத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் அங்கிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் காயமடைந்தார். குண்டு வெடிப்பில் தண்ட வாளம் சேதம் அடைந்தது. தகவலறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள்
சென்று சோதனை நடத்தினர். அப்போது வெடித்தது சக்தி வாய்ந்த குண்டு என்பது தெரியவந்தது
ஒரு மீட்டர் அளவுக்கு தண்டவாளம் சேதம் அடைந்திருந்தது.அருகில் கிடந்த பேனரில், வன்சத்ரா- நாகபாலி மற்றும் குமுசார் பகுதியில் உள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தினர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்பதாகவும், அமெரிக்க அதிபர் ஒபாமா வருகைக்கு
எதிர்ப்பு தெரிவித்து இது நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தண்டவாளம் தகர்ந்ததால் விசாகபட்டினர் - ராய்பூர் இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த
ரயில்கள் அருகில் உள்ள கேசிங்கா, முனிகுடா மற்றும் ராயகடா ரயில் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டன. ரூ. 1 கோடி பணம், 150 துப்பாக்கிகள், 3000 குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை தங்களுக்கு அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தண்டவாளங்களை தகர்ப்போம் என பீகாரில் மாவோயிஸ்டுகள் ரயில்வே துறைக்கு இரு தினங்களுக்கு மிரட்டல் விடுத்திருந்தனர்.
25 January 2015
நிச்சயதார்த்தத்தில் கலந்துக்கொண்ட பிரபலங்கள்!
த்ரிஷா நிச்சயதார்த்தத்தில் கலந்துக்கொண்ட பிரபலங்கள் யார் யார் நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் சென்னை யில் நேற்று நடந்தது. நடிகர்கள் கமல், சரத்குமார், பிரபு உட்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் இதில் கலந்துகொண்டனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடித்து வரும் த்ரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், விஜய், விக்ரம், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, விஷால் ஆகியோருடன் நடித்துவிட்டார்.
தமிழைத்தவிர தெலுங்கிலும், இந்தியிலும் நடித்துள்ளார். விரைவில் அஜித்துடன் அவர் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படம் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் த்ரிஷாவுக்கும், திரைப்படத் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சென்னையில் நேற்று திருமண நிச்சய தார்த்தம் நடைபெற்றது. ஆழ்வார் பேட்டையில் உள்ள
வருண் மணியன் வீட்டில் பாரம்பரிய முறைப்படி நிச்சயதார்த்தம் நடை பெற்றது. த்ரிஷா மும்பை பேஷன் டிசைனர்களால் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட பட்டுச் சேலை அணிந்து இருந்தார். வருண் மணியன் வேஷ்டி சட்டை அணிந்திருந்தார். பின்பு இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில்
நடிகர்கள் கமல், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ‘ஜெயம்’ ரவி, சித் தார்த், இயக்குநர்கள் மணி ரத்னம், ஏ.எல்.விஜய், நடிகைகள் ராதிகா, அமலா பால், கெளதமி, சுகாசினி, ரம்யா கிருஷ்ணன் உட்பட ஏராள மான திரையுலக பிரமுகர்கள் பங்கேற்றனர். இன்று திரையுலகை சேர்ந்த நண்பர்களுக்கு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் த்ரிஷாவும், வருண்மணியனும் சேர்ந்து விருந்து கொடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானித்தானுக்கு உதவ அமெரிக்கா இந்தியா முடிவு ??
அடுத்த தலைமுறைக்கு மாசற்ற உலகம் -குடியரசு தின விழாவில் பங்கேற்றதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலக அமைதி, வளத்துக்கு அமெரிக்க ஒத்துழைப்பு அவசியம் என்றும் மோடி பேசினார். வர்த்தக ரீதியிலான ஒத்துழைப்புக்கு இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மோடி கூறினார். ராணுவத்துக்கு தேவையான நவீன கருவிகளை தயாரிக்க கொள்ளை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இருதரப்பு பேச்சுவார்தை குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் சமூக பாதுகாப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மோடி தெரிவித்தார். இந்தியா-அமெரிக்கா இடையே புதிய ரீதியிலான உறவு தொடங்க உள்ளதாகவும் மோடி தெரிவித்தார். தனக்கும் ஒபாமாவுக்கும் நேரடி தொலைபேசி வசதி ஏற்படுத்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். வர்த்தக ரீரியிலான அணுசக்தி ஒப்பந்தம் குறித்தும் மோடி விளக்கமளித்தார்.
ஆப்கானித்தானுக்கு உதவ அமெரிக்கா,
இந்தியா முடிவு செய்துள்ளதாக பராக் ஒபாமா கூறினார். அணுசக்தித்துறையில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு பற்றி ஒபாமா விளக்கமளித்தார். பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக ஒபாமா தெரிவித்தார். சூரிய ஒளி மின்சார உற்பத்தித் துறையில் இந்தியாவை அமெரிக்கா ஆதரிக்கும் என்றும் ஒபாமா நம்பிக்கை தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். இதில் அவர் உரக வெப்பமயமாதல் காரணமாக அனைத்து நாடுகளுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார். ஒபாமாவுக்கும், தமக்கும் வெளிப்படையாக பேச்சு நடைபெற்றதாகவும் மோடி தெரிவித்தார். மோடிக்கும் தமக்கும் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக ஒபாமா கூறினார். அடுத்த தலைமுறைக்கு மாசற்ற உலகத்தை உருவாக்க இந்தியா விரும்புகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
நிவாரண நிதியாக ரூ.7800 கோடி கோரி வாலிபர் கைது!!!
பீகாரில் ஒபாமாவிற்கு கடிதம் எழுத முயற்சி செய்ததாக பீகார் கயா பகுதியை சேர்ந்த இனாம் ராஜா வயது 40 என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பீகார் மாநிலம் போதி கயாவில் உள்ள இணையதள மையத்திற்கு இனாம் ராஜா (வயது 40) என்ற வாலிபர் வந்தார்.
அங்கு வந்த இனாம் ராஜா ஒபாமாவிற்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்று கடையின் உரிமையாளரிடம் கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு டெலிபோனில் தொடர்புகொண்டு தெரிவித்தார்.
போலீசார் வருவதற்குள் இனாம் ராஜா ஒபாமாவிற்கு உருது மொழியில் கடிதம் எழுதி வைத்திருந்தார்.அக்கடித்தில் தேசிய நிதியாக 130 டாலர் (இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.7800 கோடி ) அனுப்ப வேண்டும் என்று அக்கடித்தில் குறிப்பிட்டு இருந்தார்.
போலீசார் விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கபட்டவர் என்பது தெரியவந்தது.
இவ்விககாரத்தின் தன்மை கருதி மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு இனாம் ராஜவை பற்றிய தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளாதா? என போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
24 January 2015
தயாராகிறார் பிளஸ்டூ தேர்வுக்கு லட்சுமி மேனன்""
கடந்த வருடம் தமிழில் மூன்றும் மற்றும் மலையாளத்தில் வெளியான 'அவதாரம்' உட்பட மொத்தம் நான்கு படங்களில் நடித்த லட்சுமி மேனன் இந்த வருடத்தில் புதிய படங்கள் எதுவுமே ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது அவர் கார்த்தியுடன் நடித்துள்ள 'கொம்பன்' படம் கூட போன வருடமே ஒப்பந்தமானதுதான். அதுமட்டுமல்லாமல், கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்த 'சிப்பாய்' வெளிவருமா, வராதா என தெரியாமல்
கிடப்பில் கிடக்கிறது.
இந்த நிலையில் லட்சுமி மேனன் புதிய படங்களை ஒப்புக்கொள்ளாததற்கு காரணம் அவர் இந்த வருடம் பிளஸ்-டூ தேர்வு எழுதுவதற்காக தயாராகிக் கொண்டிருப்பதுதான். இப்போது
அதற்கான மாதிரி தேர்வுகள் நடப்பதால் அதில் தனது கவனத்தை செலுத்தி வரும் லட்சுமி மேனன் தேர்வுகள் முடிந்ததும் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவார் என தெரிகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>வௌ்ளி உயர்ந்தது தங்கம் குறைந்தது –
தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்துள்ளது. அதேசமயம் வௌ்ளியின் விலை உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்–வௌ்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம்
ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,660–க்கும், சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.21,280–க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.60 குறைந்து ரூ.28,450–க்கும் விற்பனையாகிறது.
அதேசமயம் வௌ்ளியின் விலை உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வௌ்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.43.30–க்கும், பார்வௌ்ளி கிலோவுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.40,495–க்கும் விற்பனையாகிறது.
சிகிச்சைபலனின்றி பன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலி!!
சென்னையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மறைமலைநகரில் வசித்து வந்த சரஸ்வதி என்பவர் காய்ச்சல் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அப்போது, அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து சரஸ்வதிக்கு பன்றிக் காய்ச்சல் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சரஸ்வதி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து சரஸ்வதி குடும்பத்தினர் மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகளை சைதாப்பேட்டை சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கினார்.
ஆந்திராவில் பன்றிக் காய்ச்சலுக்கு பலர் பலியாகி வரும் நிலையில் சென்னையில் பன்றிக் காய்ச்சல் தாக்கி பெண் ஒருவர் பலியாகியிருப்பது பொதுமக்கள் இடையை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதிகள் உலாவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலாவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூறியுள்ளார். இந்திய பத்திரிக்கை ஒன்றுக்கு
பேட்டி அளித்துள்ள அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து போராடி வருகிறது. மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலாவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பயங்கரவாத ஒழிப்பில் இருநாடுகளும் கைகோர்க்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் நீதியின் முன்பு நிறுத்தப்பட
வேண்டும் என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 23 January 2015
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் புலனாய்வு துறை
மராட்டியம் உள்பட 4 மாநிலங்களில் வருகிற 28–ந்தேதிக்குள் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்று மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாத அமைப்புகள்
குடியரசு தினத்தை முன்னிட்டு மும்பையில் சிவாஜிபார்க் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் குடியரசு தினத்தை சீர்குலைக்கும் வகையில் வருகிற 28–ந்தேதிக்குள் மராட்டியம் உள்பட 4 மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெறக்கூடும் என மத்திய புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை தொடர்பாக புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், லஸ்கர்–இ–தொய்பா, ஜெய்ஷ்–இ–முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட சில அமைப்புகள் தீவிரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
4 மாநிலங்கள்
இந்த தீவிரவாத அமைப்புகளின் சார்பில் தாக்குதல் நடத்த அப்துல்லா அல் குரோசி, நாசீர் அலி, ஜாவேத் இக்பால், மொபித் ஜேமன், சம்சேர் ஆகிய தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி உள்ளதாக நம்பகத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மராட்டியம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களை அவர்கள் குறி வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மும்பையில் முக்கிய வழிபாட்டு தலங்கள், ரெயில் நிலையங்கள், தூதரகங்கள், தங்கும் விடுதிகள், பஸ் நிலையம் உள்பட பல இடங்களில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் சித்தி விநாயகர் கோவில் உள்பட மும்பையில் உள்ள முக்கிய வழிபாட்டுத்தலங்களில் ஆயுதம் ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
போலீசாரின் விடுமுறை ரத்து
புலனாய்வுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து தீவிரவாத தடுப்பு படையின் உயர் அதிகாரிகள், மும்பை போலீஸ் கமிஷனர் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு பணியை பலப்படுத்துவது குறித்தும், தீவிரவாத தாக்குதல்களை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு பின் துணை போலீஸ் கமிஷனர் தனஞ்செய் குல்கர்னி நிருபர்களிடம் கூறுகையில், ‘புலனாய்வு துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து மும்பையில் பணிபுரியும் அனைத்து போலீசாரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தினத்தில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்க பாதுகாப்பு வியூகங்களை வகுத்து வருகிறோம். சந்தேகப்படும் நபர்களை போலீஸ் வளையத்திற்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது’ என்று கூறினார்.
இஸ்லாமிய மக்கள்தொகை 24 சதவீதம் உயர்வு!!!
2001-2011ம் ஆண்டுகளில் இஸ்லாமிய மக்கள்தொகை 24 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்தநாட்டு மக்கள்தொகையில் இஸ்லாமிய மக்கள்தொகை எண்ணிக்கை 13.4 சதவீதத்தில் இருந்து 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மதவாரியாக நடத்தப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாநிலமாக ஜம்மு காஷ்மீர் முதலிடத்தில் (68.3 சதவீதம்), உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக அசாமும் (34.2 சதவீதம்), மேற்கு வங்காளமும் (27 சதவீதம்), உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாமிய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 29 சதவீதமாக இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பில் வளர்ச்சி விகிதம் 24 சதவீதமாக உள்ளது. இது தேசிய மக்கள்தொகை சராசரியை (18 சதவீதம்) விட அதிகமாக உள்ளது.
மொத்த மக்கள்தொகையில் இஸ்லாமியர்களின் பங்கு, மிகவிரைவான உயர்வை அசாம் கண்டுள்ளது. 2001-ம் ஆண்டைய கணக்கெடுப்பின் போது மாநிலத்தில் 30.9 சதவீதம் இஸ்லாமியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய கணக்கெடுப்பில் 34.2 சதவீதம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம், கடந்த 30 வருடங்களாக வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியோருபவர்களால் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த தகவல்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் ஜெனரலால் தற்போது தொகுக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது..
மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே 8.8. சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக குறைந்துள்ளது. வங்காளதேசத்தில் இருந்து
சட்டவிரோதமாக வருபவர்களால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மேற்கு வங்காளமும் காணப்படுகிறது. இந்த மாநிலத்திலும் இஸ்லாமிய மக்கள் தொகை எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் கடந்த 2001ம் ஆண்டு இஸ்லாமிய மக்கள்தொகை 25.2 சதவீதமாக இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பில் 27 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் வளர்ச்சி விகிதம் 1.8 சதவீதமாக உள்ளது. இது தேசிய இஸ்லாமிய மக்கள்தொகை (.8 சதவீதம்) சராசரியைவிட இருமடங்கு அதிகமானது.
உத்தரகாண்ட் மாநிலத்திலும் இஸ்லாமிய மக்கள்தொகை 11.9 சதவீதத்தில் இருந்து, 13.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் 2001 முதல் 2011ம் ஆண்டு வரையில் இரண்டு சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.
2011ம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி மற்ற மாநிலங்களியிலும் இஸ்லாமிய மக்கள்தொகை குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளது. கேரளாவில் 24.7 சதவீதத்தில் இருந்து, 26.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கோவா மாநிலத்திலும் 6.8 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 67 சதவீதத்தில் இருந்து 68.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அரியானாவில் 5.8 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், டெல்லியில் 11.7 சதவீதத்தில் இருந்து 12.9 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
22 January 2015
பன்றி காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு மருத்துவக் குழு
நேரில் ஆய்வு தெலுங்கானாவில் பன்றி காய்ச்சலால் 21 பேர் பலியாகி உள்ளனர்.தற்போது 180-க்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு
சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
நேற்று 3 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் 2 பேர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் தெலுங்கானா முதல்-மந்திரி மத்திய அரசுக்கு பன்றி காய்ச்சலை தடுக்க மத்திய சிறப்பு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு 3 பேர் கொண்ட சிறப்பு குழுவை காந்தி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
இன்று வந்த மத்திய சிறப்பு மருத்துவ குழுவினர் ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களை கண்டு நலம் விசாரித்தனர்.மற்ற வார்டுகளுக்கு பன்றிகாய்ச்சல் பரவாமல் இருக்க போதிய மருத்துவ வசதிகள் செய்யும் மாறு மருத்துவ ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
மருத்துவமனையின் சுகாதரம் குறித்து நோயாளிகளிடம் மருத்துவ குழு விசாரித்தனர். அதற்கு அவர்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.அடிப்படை வசதிகளை செய்யுமாறு காந்தி அரசு மருத்துறை தலைவருக்கு உத்தரவிட்டனர்.மேலும் டாக்டர்கள் நோயளிகளிடம் அன்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.
இன்று அல்லது நாளை முதல்-மந்திரி சந்திரசேகர ராவை மருத்துவ குழுவினர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் மத்திய அரசு சார்பில் 10 ஆயிரம் தடுப்பு ஊசிகளும் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடவுளின் தவறு மக்களின் குறைகளை பூர்த்தி செய்யாதது??
கோவாவில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான திரைப்படவிழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதல்-மந்திரி லக்ஷிமிகாந்த் பர்சேகர் கூறியதாவது:
சில மனிதர்கள் இறைவனின் படைப்பில் ஊனமாகவும் குறை உள்ளவார்களாகவும் படைக்கின்றான் அது அவர்களின் குற்றம் அல்ல அது கடவுளின் குற்றமே கடவுளின் புறக்கணிப்பு என்று கூட கூறலாம்.
சமூகத்தில் குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளுக்கு சில விஷயங்களை கடவுள் கொடுக்க மறந்து விடுகிறார். அதனால் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் பாதிக்கபடுகின்றனர்.
கடவுள் செய்த தவறுக்காக சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூகத்தில் பிறந்த குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.
சில மாற்று திறனாளிகளுக்கு அதிக திறமைகள் காணப்படுகின்றன.அவர்கள் சாதரணவர்களை விட அதிக வலிமை உடையவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கொன்று நகை கொள்ளை: வாலிபருக்கு தூக்கு தண்டனை-
நகை வாங்குவது போல் நடித்து நகை கடை உரிமையாளரை கொன்று நகைகளை கொள்ளையடித்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பூராராம் (வயது 65). இவருடைய மகன்கள் கானாராம் (30), குணாராம் என்ற கணேஷ் (28). இவர்கள் கடந்த பல வருடங்களாக மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் சக்தி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.
அதே பகுதியில் உள்ள பட்டேல் சாலையில் இவர்கள் சொந்தமாக நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகின்றனர். கடந்த 14-4-2012 அன்று கடையில் கணேஷ் மட்டும் தனியாக இருந்தார். அண்ணன் கானாராம் வேலை காரணமாக வெளியே சென்று விட்டார். அன்று பிற்பகலில் கல்லூரி மாணவர் போல் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், நகைகள் வாங்க வேண்டும். புதிய மாடல்களை காட்டுங்கள் என்றார்.
தான் கொலை செய்யப்பட உள்ளோம் என்ற உண்மை தெரியாமல் கணேஷ், வந்தவரிடம் கடையில் இருந்த புதிய ரக தங்க நகைகளின் மாடல்களை எடுத்து காட்டினார். அவைகளில் திருப்தி அடையாத அந்த வாலிபர், “இந்த மாடல்கள் எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை. வேறு மாடல் இருந்தால் காட்டுங்கள்” என்றார்.
உடனே கணேஷ், வேறு மாடல் நகைகளை எடுத்து வர கடையில் உள்ள லாக்கர் அறைக்குள் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற அந்த வாலிபர், திடீரென கணேஷின் முதுகில் ஏறி அவரது வாயை பொத்திக்கொண்டார். தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து கணேஷின் கழுத்தின் பின் பகுதியில் வெட்டினார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கணேஷ், சத்தம் போடாமல் இருக்க மீண்டும் அவரது வாயை பொத்திக்கொண்டு கத்தியால் அவரது கழுத்தை தரதரவென்று அறுத்தார். பின்னர்
வயிற்றிலும் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கணேஷ், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அந்த வாலிபர், லாக்கரில் இருந்த 20 பவுன் நகைகளை கொள்ளையடித்தார். அவற்றை தான் கொண்டு வந்த பையில் வைத்துக்கொண்டு எதுவும் தெரியாததுபோல் சாவகாசமாக கடையில் இருந்து வெளியேறி சென்று விட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவங்கள் அனைத்தும் கடையில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.
சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த கானாராம், கடையில் கணேஷ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். எங்கும் அவரை காணவில்லை. பின்னர் கடைக்குள் உள்ள லாக்கர் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு தனது தம்பி கணேஷ், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மதுரவாயல் போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட கணேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளியை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 12-5-2012 அன்று
பள்ளிக்கரனை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், வாலிபர் ஒருவர் “நான் சென்னை மாநகராட்சி ஊழியர். பன்றி காய்ச்சலுக்கு மருந்து கொடுத்து விட்டு கணக்கெடுக்கும் பணிக்காக வந்து உள்ளேன்” என்று கூறி அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார்.
அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் கத்தி முனையில் மிரட்டிய வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, நெல்லிக்கடை வீதியை சேர்ந்த ராமஜெயம் (32) என்பதும், மதுரவாயலை அடுத்த நகைக்கடையில் புகுந்து உரிமையாளர் கணேஷை கொன்று நகையை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டவர் என்பதும் தெரிந்தது. ராமஜெயத்தை போலீசார் கைது செய்தனர்.
இலங்கையில் 6 மாதம் தங்கி ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் படிப்பு படித்த ராமஜெயம், 6 மாதம் கனடாவில் தங்கி வேலை செய்து வந்தார். ஆனால் படிப்புக்கு ஏற்ற சரியான வேலையும், சம்பளமும் கிடைக்கவில்லை. இதனால் குறுகிய காலத்தில் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் நகை கடை உரிமையாளர் கணேஷை கொலை செய்து
கொள்ளையடித்ததாக கூறினார்.
ஆனால் நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளில் பெரும்பாலும் கவரிங் நகைகள் என்பதால் மீண்டும் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது போலீசில் சிக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, ராமஜெயம் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிரூபிக்கப்பட்டதால் கொலையாளி ராமஜெயத்திற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் 30 சாட்சியங்கள், 22 ஆவணங்கள், 14 தடயங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அந்தமான்முருகன் ஆஜராகி வாதாடினார்
21 January 2015
சசி தரூரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீஸ் முடிவு!!
ஓரிரு நாட்களில் மனைவி சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி சசி தரூரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். ஓரிரு நாட்களில் விசாரணைக்காக அவர் அழைக்கப்படுவார் என்று தெரிகிறது.
சுனந்தா கொலை வழக்கு
முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17–ந்தேதி டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சுனந்தா மரணம் தொடர்பாக அண்மையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட இறுதி மருத்துவ அறிக்கையில், சுனந்தாவின் உடலில் விஷம் கலந்து இருந்தால் அவருக்கு மரணம் நிகழ்ந்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
4 மணி நேரம் விசாரணை
இதைத் தொடர்ந்து சுனந்தாவின் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் கடந்த 1–ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறார்கள். 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லி போலீசின் சிறப்பு விசாரணை குழுவினர் சசி தரூரை வசந்த் விகார் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை நள்ளிரவு வரை
சுமார் 4 மணி நேரம் நீடித்தது.
அப்போது 2 துணை போலீஸ் கமிஷனர் மற்றும் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை அவரிடம் எழுப்பினர்.
இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்சி நிருபர்களிடம் கூறியதாவது:–
போலீஸ் எழுப்பிய கேள்விகள்
சம்பவம் நடந்த 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் 17–ந்தேதி நடந்த நிகழ்வுகள் குறித்து சசிதரூரிடம் விசாரிக்கப்பட்டது.
குறிப்பாக சுனந்தா இறந்த நேரத்தில் சசிதரூர் எங்கே இருந்தார்? சுனந்தாவின் கைகளில் இருந்த காய அடையாளங்கள் எப்படி ஏற்பட்டது? சசி தரூர் யாரையாவது சந்தேகிக்கிறாரா? சுனந்தாவுக்கு அல்பிராக்ஸ் மாத்திரைகளை கொடுத்தது யார்? ஐ.பி.எல். தொடர்பாக சுனந்தாவுக்கு யாராவது கொலை மிரட்டல் விடுத்தார்களா? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
போலீசாரின் விசாரணைக்கு சசிதரூர் மிகவும்
ஒத்துழைப்பு கொடுத்தார். கேள்விகள் கேட்டபோது அமைதியாக காணப்பட்டார். அவர் அளித்த பதில்களை சிறப்பு விசாரணை குழுவினர் ஆய்வு செய்வார்கள். இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் அழைக்கப்படுவார்
அப்போது நிருபர்கள் சிறப்பு விசாரணை குழு, ஐ.பி.எல். போட்டி கோணத்தில் இந்த வழக்கை எதிர்நோக்குகிறதா? என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த பஸ்சி, இது தொடர்பாக கூறப்படும் விஷயங்கள் பொருத்தமானதாக இருந்தால் நிச்சயமாக அது பற்றியும் விசாரிக்கப்படும் என்றார்.
சசிதரூர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா? என்ற மற்றொரு கேள்விக்கு, முதலில் அவருடைய(சசி தரூர்) பதில்கள் ஆய்வு செய்யப்படும். அடுத்த ஓரிரு நாட்களில் அவர் விசாரணைக்காக அழைக்கப்படலாம் என்று தெரிவித்தார்.
திறந்த மனதுடன்...
மேலும் அவர் கூறுகையில், இந்த வழக்கு தொடர்புடைய பிரச்சினைகளை திறந்த மனதுடன் மேற்கொண்டு வருகிறோம். சுனந்தாவின் மரணத்துக்கு யாராவது குற்றப் பொறுப்பு கொண்டு உள்ளனரா?
அப்படியென்றால் அவர்கள் யார்? என்பதுதான் வெளிப்படையாக உள்ள கேள்வி. இந்த வழக்கில் இதுவரை யாரையும் நாங்கள் சந்தேகிக்கவில்லை. முதலில் விசாரணை நடவடிக்கைகள் முடிவடையட்டும். விசாரணை எவ்வளவு நேரம் நடத்தப்பட்டது என்பது குறித்து கூறவிரும்பவில்லை. அவர் இரவு 7 மணிக்கு போலீஸ் நிலையம் வந்ததால் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தோம் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)