2001-2011ம் ஆண்டுகளில் இஸ்லாமிய மக்கள்தொகை 24 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்தநாட்டு மக்கள்தொகையில் இஸ்லாமிய மக்கள்தொகை எண்ணிக்கை 13.4 சதவீதத்தில் இருந்து 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மதவாரியாக நடத்தப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள மாநிலமாக ஜம்மு காஷ்மீர் முதலிடத்தில் (68.3 சதவீதம்), உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக அசாமும் (34.2 சதவீதம்), மேற்கு வங்காளமும் (27 சதவீதம்), உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாமிய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 29 சதவீதமாக இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பில் வளர்ச்சி விகிதம் 24 சதவீதமாக உள்ளது. இது தேசிய மக்கள்தொகை சராசரியை (18 சதவீதம்) விட அதிகமாக உள்ளது.
மொத்த மக்கள்தொகையில் இஸ்லாமியர்களின் பங்கு, மிகவிரைவான உயர்வை அசாம் கண்டுள்ளது. 2001-ம் ஆண்டைய கணக்கெடுப்பின் போது மாநிலத்தில் 30.9 சதவீதம் இஸ்லாமியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய கணக்கெடுப்பில் 34.2 சதவீதம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம், கடந்த 30 வருடங்களாக வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியோருபவர்களால் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த தகவல்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் ஜெனரலால் தற்போது தொகுக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது..
மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே 8.8. சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக குறைந்துள்ளது. வங்காளதேசத்தில் இருந்து
சட்டவிரோதமாக வருபவர்களால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மேற்கு வங்காளமும் காணப்படுகிறது. இந்த மாநிலத்திலும் இஸ்லாமிய மக்கள் தொகை எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் கடந்த 2001ம் ஆண்டு இஸ்லாமிய மக்கள்தொகை 25.2 சதவீதமாக இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பில் 27 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் வளர்ச்சி விகிதம் 1.8 சதவீதமாக உள்ளது. இது தேசிய இஸ்லாமிய மக்கள்தொகை (.8 சதவீதம்) சராசரியைவிட இருமடங்கு அதிகமானது.
உத்தரகாண்ட் மாநிலத்திலும் இஸ்லாமிய மக்கள்தொகை 11.9 சதவீதத்தில் இருந்து, 13.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் 2001 முதல் 2011ம் ஆண்டு வரையில் இரண்டு சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.
2011ம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி மற்ற மாநிலங்களியிலும் இஸ்லாமிய மக்கள்தொகை குறிப்பிட்ட அளவு உயர்ந்துள்ளது. கேரளாவில் 24.7 சதவீதத்தில் இருந்து, 26.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கோவா மாநிலத்திலும் 6.8 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் 67 சதவீதத்தில் இருந்து 68.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அரியானாவில் 5.8 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், டெல்லியில் 11.7 சதவீதத்தில் இருந்து 12.9 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment