ஆஸ்திரேலிய நாட்டில் தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா மாகாணங்களில் காடுகளில் தீப்பிடித்தது. அங்கு 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் நிலவுவதாலும், கடுமையான காற்று வீசுவதாலும், தீயை அணைக்க 2 ஆயிரம் தீயணைப்பு
வீரர்கள் போராடுகின்றனர்.
தரை மார்க்கமாகவும், வானில் விமானங்களில் பறந்தும் தீயின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கிறார்கள். ஆனாலும் தீ, கட்டுக்குள் அடங்கவில்லை.
தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு மலையில் தீப்பிடித்ததால், 5 வீடுகள் எரிந்து நாசமாயின.
இந்த தீயின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
விக்டோரியா மாகாணத்தில், கடந்த திங்கட்கிழமையிலிருந்து 300-க்கும் மேற்பட்ட தீ சம்பவங்களை தீயணைக்கும் படையினர் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும் அங்கு மாய்ஸ்டன் நகரில் ஒரு வீடு எரிந்து தரை மட்டமாகி விட்டது. இதுவரை இந்த தீயினால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
ஆஸ்திரேலியாவில் கடந்த 2009-ம் ஆண்டு காட்டுத்தீ பரவியதில் 173 பேர் உயிரிழந்ததும், 2 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமானதும் நினைவுகூரத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment