குஜராத்தில் நடைபெற்ற வர்த்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு துறை செயலர் ஜான் கெர்ரி இன்று தனது இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் போது அவரது வாகனம் விபத்தில் சிக்கியது. அதிருஷ்டவசமாக ஜான் கெர்ரி இதில் காயமின்றி தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ள அவரது செய்தி தொடர்பாளர் ஜான் பெஸ்கி, அகமதபாத் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, ஜான் கெர்ரியின் வாகன அணிவகுப்பில் சென்று கொண்டிருந்த இரு கார்கள் விபத்தில் சிக்கியது. விபத்துக்குள்ளான இரு கார்களில் முதல் காரில் ஜான் கெர்ரி இருந்தார். இருப்பினும் அவருக்கோ பிற அதிகாரிகளுக்கோ எந்த காயமும் ஏற்படவில்லை
என்று தெரிவித்தார்.
இதனிடையே, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி, தனது இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பாகிஸ்தானுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, முன்கூட்டியே அறிவிக்கப்படாத பயணம் ஆகும். அங்கு அவர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ராணுவ தளபதி ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது, தீவிரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வார் என்று தெரிகிறது....
0 கருத்துகள்:
Post a Comment