Search This Blog n

16 January 2015

கற்பழிப்பு வழக்கு தொடர்ந்த பெண் அவரது மனைவியாக வெளியேறினார்

 காதலன் மீது கற்பழிப்பு வழக்கு டெல்லியை சேர்ந்த 17 வயது பெண் தனது காதலன் திருமண ஆசை காட்டி கற்பழித்து விட்டதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி கோர்ட்டில் வழக்கு

 தொடர்ந்தார்.

இந்த வழக்கின் குறுக்கு விசாரணையின்போது திடீரென 'பல்டி' அடித்த அந்தப் பெண், வழக்கு தொடர்ந்த பின்னர் தனக்கு 18 வயது நிரம்பி விட்ட வேளையில், அந்நபருடன் பல முறை உடல் ரீதியான உறவு வைத்துக் கொண்டதாகவும், தாங்கள் இருவரும் முறைப்படி ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் கோர்ட்டில் தெரிவித்தார்.

தற்போது நான் கர்ப்பமாக இருப்பதால் கணவரின் துணை தேவை என கூறிய அந்தப் பெண், இந்த வழக்கை தள்ளுபடி செய்து, அவரை மன்னித்து விடுதலை செய்யும்படியும் நீதிபதியை கேட்டுக் கொண்டார்.

'பாதிக்கப்பட்ட பெண் தற்போது மேஜரான பிறகு இருவரும் விருப்பப்பட்டு உடல் ரீதியான தொடர்பு வைத்துக் கொண்டதாக கூறுகிறார். இந்நிலையில், அவர் மைனர் வயதில் இருந்தபோது கற்பழிக்கப்பட்டதாக போலீசார் தொடர்ந்துள்ள இந்த வழக்கை நிரூபிக்க போதுமான சாட்சியங்கள் சமர்ப்பிக்காததால் குற்றம்சாட்டப்பட்டவர் அந்தப் பெண்ணை 17 வயது சிறுமியாக இருந்தபோது கற்பழித்தார் என்ற வாதம் வலுவிழ்ந்து விட்டது.

எனவே, அந்தப் பெண்ணின் வேண்டுகோளை ஏற்று அவரது கணவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்கிறோம்’ என்று டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி பவன் குமார் ஜெயின் இன்று அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, காதலிலும் வழக்கிலும் வெற்றியடைந்த சந்தோஷப் புன்னகையுடன் இருவரும் கணவன்-மனைவியாக கோர்ட்டில் இருந்து வெளியே வந்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

Post a Comment