புதுடெல்லியில் பலூன் விற்கும் மற்றும் சாலையோர சிறுவர்கள் மூலம் ‘ஸ்மாக்’ எனப்படும் போதைப்பொருளை விற்ற பலே பேர்வழியை போலீசார் இன்று கைது செய்தனர். டெல்லியில் உள்ள வீடற்ற சிறுவர்கள் மற்றும் பலூன் வியாபாரம் செய்யும் சிறுவர்கள் ஆகியோரை தனது போதைப் பொருள் விற்பனையில் முகவர்களாக ஈடுபடுத்திய அசோக் (49) என்பவனை போதை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்மாக் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ள போலீசார், சிறுவர்கள் மூலம் டெல்லியில் இருக்கும் போதைப் பிரியர்களுக்கு இவன் இந்த பாக்கெட்டுகளை விற்றதாக தெரிவித்தனர். ஒரு பாக்கெட் ஸ்மாக் 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் ஸ்மாக் விற்பனை செய்து வந்த இவன் தனது லாபத்தில் ஒரு சிறு பகுதியை இந்த முகவர்களுக்கு தந்துள்ளதாக தெரிகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment