உத்தரபிரதேசத்தில் போலீஸ் நிலையத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
உத்தரபிரதேசத்தில் தொடரும் பாலியல் பலாத்காரம் சம்பவங்களால் மாநில அரசு மீதும், காவல்துறை மீதும் அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர். ஆனால் பாலியல் பலாத்காரத்தை தடுக்க வேண்டிய காவல்துறையே அச்செயலில் ஈடுபட்டிருப்பது அங்கு
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தின் பதான் மாவட்டத்துக்கு உட்பட்ட முசாகஜ் போலீஸ் நிலைய வளாகத்தில் காவலர் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வீர்பால் யாதவ் மற்றும் அவ்னாஷ் யாதவ் ஆகிய இருவரும் போலீஸ்காரராக பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் கடந்த 31–ந் தேதி அருகில் உள்ள பதத்பூர் கிராமத்துக்கு சென்று, அங்கு வசித்து வரும் 14 வயது சிறுமி ஒருவரை காரில் கடத்தி வந்தனர். பின்னர் அவர்களது குடியிருப்பில் வைத்து சிறுமியை
வலுக்கட்டாயமாக இருவரும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் பதத்பூர் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தியதுடன், அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
பாலியல் பலாத்காரம் தொடர்பான புகாரின் பேரில், 2 போலீசார் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் இருவரும் இடைநீக்கமும் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ், குற்றவாளிகள் இருவரையும்
உடனே கைது செய்ய உத்தரவிட்டார். இந்த பாலியல் பலாத்கார சம்பவத்துக்கு மாநில பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே
தலைமறைவான இரண்டு போலீசாரையும் காவல்துறையினர் வலைவீசி தேடினர். அவர்கள் இன்று பரேலி ரெயில்வே நிலையத்தில் காவல்துறையிடம் வசமாக சிக்கினர். இருவரையும் போலீசார் கைது செய்தனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment