சாலை விபத்து சாதாரணம் என்பது போல் ஆகிவிட்டது, இந்தியாவில். சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடாக இந்தியா மாறியிருக்கின்றது என்பது மிகக் கொடுமையான ஒரு விஷயம். இந்தியா முழுவதும், வருடத்திற்கு தோராயமாக 1.37 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
மூன்று லட்சம் பேர் தங்களின் கை, கால்களை இழக்கின்றனர். நான்கு லட்சம் பேர் படுகாயமடைகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். எவ்வளவுதான் சாலை பாதுகாப்பு விதிமுறைகள்
விதிக்கப்பட்டாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை. மாறாக அதிகரித்துக் கொண்டுதான் போகின்றது. 2003-ல் 21.2 சதவீதம் பத்து ஆண்டுகளில்(2013) 28.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக தமிழகம்தான் அதிக பங்கு வகிக்கின்றது.
தமிழ்நாட்டில் மட்டும் 15% விபத்துகள் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2014ஆம் ஆண்டு மட்டுமே தமிழகத்தில் 62 ஆயிரத்துக்கும் அதிகமான விபத்துகள் நடந்துள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் அதிகம், காயமடைந்தவர்கள் 6000க்கும் மேல்.
தமிழ்நட்டில் மட்டும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 8 விபத்துகள் நிகழ்கின்றது. அதில் குறைந்தது 2 இறப்புகள் நிகழ்கின்றது. சராசரியாக ஒரு நாளைக்கு 40 பேர் தமிழகத்தில் சாலை விபத்தால் இறக்கின்றனர். இவற்றிக்கு மக்களின் அலட்சிய போக்கு மட்டும் காரணம் என்று கூறமுடியாது, அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கும் முக்கிய காரணமாக இருக்கின்றது. ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை இன்றளவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், சாலை விபத்துகளுக்கு சீரற்ற சாலைகளும் ஒரு காரணம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர் ஆய்வாளர்கள்.
அதிகாரிகள் சார்பில் கூறப்படுவதாவது, 'தமிழகத்தில் இருக்கும் மக்கள் தொகையில் அனைவரையும் எங்களால் கண்காணிக்க முடியாது. இந்தியாவில் நகர சாலைகளில் வேக வரம்பு 40 கிலோமீட்டராகவும், குடியிருப்பு பகுதியில் 30 கிலோ மீட்டராகவும், தேசிய நெடுஞ்சாலையில் 80 கிலோமீட்டர் வரையிலும் ,
அதிவேக சாலையில் 100 கிலோ மீட்டர் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டாலும், இரு சக்கர வாகன ஓட்டிகளும், நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் இதனை மதிப்பதில்லை. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் அணியாமலும், செல்போனில் பேசிக் கொண்டும், மது அருந்தியும் வாகனம் ஓட்டுவதாலேயே அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்ற நிலையில் வாகன ஓட்டிகள் அவர்களது உயிரையும், தனி மனிதனுடைய உயிரையும் நினைத்து கவனத்துடன் விதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டவேண்டும்' என்று கூறுகின்றனர்.
இது தவிர, மது அருந்திவிட்டு வாகனம்
ஓட்டியதாக 2014-ஆம் ஆண்டு 55,238 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. அவர்களில் 46,140 பேரிடம் அபராதம் வசூலிக் கப்பட்டது. மேலும் மது அருந்திவிட்டு தொடர்ச்சி யாக வாகனம் ஓட்டியதாக 5,903 பேர் ஓட்டுநர் உரிமங்கள் தாற்காலிக நீக்கம் செய் யப்பட்டது. மேலும், 16,616 பேர் வாகன ஓட்டுநர்களின் உரிமங்களை ரத்து செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வளவு சட்டங்களை அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தாலும் கூட மக்கள் அதை கடைபிடிப்பதே இல்லை. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, ஃபோனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுவது, குறிப்பிட்ட வேகத்தை கடைபிடிக்காதது என வாகான விதிமுறைகளை மீறிக்கொண்டிருக்கும் வரை விபத்துகள் தொடரத்தான் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment