குடியரசு தின விழாவுக்கு இந்தியா வரும் அதிபர் ஒபாமாவுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாத தீவிரவாத தாக்குதலை சமாளிக்கும் திறன் வாய்ந்த சொகுசு காருக்கு
மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கார் பிரபலமாக 'பீஸ்ட்' என்றும் அழைக்கப்படுகிறது.
18 அடி நீளமும், எட்டு டன்கள் எடையும் கொண்ட இந்த காரின் ஆர்மர் பிளேட்டுகள் 8 இன்ச் தடிமன் கொண்டதாகும். ஒரு போயிங் 757 விமானத்தின் எடையையும் தாங்கக் கூடிய திறன் வாய்ந்தது. இந்த காரின் டயர்கள் மிக உறுதி வாய்ந்தது. அவ்வளவு எளிதில் பஞ்சராகாது. அதேபோல், டயருக்குள் பிரத்யேகமாக அடைக்கப்பட்டிருக்கும் காற்று எரிபொருள் டேங்க் வெடிப்பதை தடுக்கும் சக்தி வாய்ந்தது.
காருக்கு அடியில் ஆக்ஸிஜன் டேங்கும், தீயை அணைக்கும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்திலும் கூட படம் பிடிக்க கூடிய நைட் விஷன் கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரை எல்லோரும் ஓட்டிவிட முடியாது. அதற்கென பிரத்யேகமாக பயிற்சி பெற்ற சீக்ரட் சர்வீஸ் டிரைவரே ஓட்ட முடியும். குறிப்பாக, அந்த டிரைவர் ஹை ஸ்பீடு எஸ்கேப்-பிலும், 180-டிகிரி கோணத்தில் அப்படியே காரை சுழற்றி திருப்புவதிலும் வல்லவராக இருத்தல் அவசியம்.
ஒபாமா பயணிக்க உள்ள இந்த பீஸ்ட் காரில் சாட்டிலைட் போனும் உள்ளது. ஒபாமா எங்கிருந்தாலும் அதைப்பற்றி ஒரு நொடியில் தகவல் அமெரிக்காவுக்கு சென்றுவிடும். ஒபாமா தனது சொந்த காரையே குடியரசு தின விழாவில் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், பாதுகாப்பு கருதி பீஸ்ட்டை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்:
Post a Comment