எதிர்கட்சிகளிடம் இருந்து டெல்லியில் உள்ள எதிர்கட்சிகள் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், எதிர்கட்சிகள் வழங்கும் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள். இருப்பினும் இந்த செயலை ஸ்டிங் ஆபரசேன்கள் மூலம் பதிவு செய்து எதிர்கட்சிகளின் செயலை அம்பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று
அரவிந்த் கெஜ்ரிவால் கூறுவது இது முதல் முறையல்ல. கடந்த சில தினங்களுக்கு முன், டெல்லி வாக்காளர்கள் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில்
ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியது பெரும் சர்ச்சையானது. தொடர்ந்து இதுபோன்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறி வந்ததால், கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்து இருந்தது .
இதையடுத்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் கமிஷனையும் நாட்டின் சட்டங்களை மதிப்பதாகவும்,இந்த கருத்து தேவையற்றது என கருதினால் இது போன்ற பேச்சை தாம் நிறுத்திவிடுவதாகவும் கூறி இருந்த நிலையில், தற்போது தொண்டர்களை பணம் வாங்குமாறு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment