டெல்லி அருகேஉள்ள காசியாபாத்தில் மருத்துவமனையில் ஒன்றில் இரவு பணியின்போது மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு மாணவி பணியின்போது, சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக ஓய்வு அறைக்கு சென்று தூங்கியுள்ளார். அப்போது ஊழியர் ஒருவர் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
உடனடியாக மாணவி சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டதும், மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அங்கு சென்றனர். உடனடியாக பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த ஊழியர் தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து மாணவி மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் காவல் நிலையம்
சென்று புகார் அளித்தனர்.
அவர்களின் புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உடனடியாக ஊழியரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
0 கருத்துகள்:
Post a Comment