சர்ச்சைக்குரிய சாமியார் அசராம் பாபுவின், சூரத் பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய சாட்சியான அவரது உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைகுரிய சாமியார் அசராம் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தனர். அவருடைய சகோதரி, அசராம் பாபுவின் மகன் நாராயண் சாய் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார் என்று புகார் அழித்தார். சாமியார் அசராம்பாபு ஏற்கனவே ஒரு பாலியல் பலாத்காரம் வழக்கில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 1997 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் இச்சம்பவம் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்திருந்தனர். அவர்களது புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய சாட்சியான சாமியாரின் உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். முக்கிய சாட்சியான சாமியாரின் உதவியாளர் அகில் குப்தா(வயது 35) நியூ மாண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஜான்சாத் சாலையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில் குப்தா நேற்றுஇரவு தனது வீட்டிற்கு திரும்பியபோது, அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment