31 October 2019
சிறுவன் சுர்ஜித்தின் பெற்றோர்கள் செய்த கண்கலங்க வைக்கும் செயல்
தமிழகத்தில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், தற்போது சிறுவனின் பெற்றோர் செய்த செயலின்
புகைப்படம்
சமூகவலைத்தளங்களில் வைரலாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் திகதி மாலை அவரது வீட்டு தோட்டத்தில்
விளையாடிக் கொண்டிருந்த
2 வயது குழந்தை சுர்ஜித் அங்கிருந்த மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.இதனால், அந்த குழந்தையை மீட்க கடந்த 4 நாட்களாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், இந்த
நடவடிக்கைகள் எதுவும்
பலனளிக்காத நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்த நிலையில் மீட்டனர்.அந்தக் குழந்தையின் உடல் அழுகி சிதிலமடைந்திருப்பதால் உடனே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றிலிருந்து சுர்ஜித்தின் பெற்றோர் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் சுர்ஜித் விழுந்து இறந்த ஆழ்துளை கிணற்றிற்கு மாலை வைத்து, தாய் மற்றும் தந்தை வேதனையுடன் உள்ளனர்.இதைக் கண்ட இணைவாசிகள் சிலர், வேதனையான பதிவுகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் தாய்க்கு தெரியும் தன் மகன் எங்கே புதைக்கப்பாட்டான் என்று குறிப்பிட்டுள்ளார்.
29 October 2019
சிறுவன் சுஜித்தின் உடல். அழுகிய நிலையில் மீட்கப்பட்டஉண்மையில் நடந்தது என்ன
சிறுவன் சுஜித் ஆழ்த்துளை கிணற்றில், கிட்டத்தட்ட 80 மணி நேரம் உடல் மண்ணுக்குள் இருந்துள்ளது. மிகவும் மோசமான முறையில் சிதைந்த நிலையில்தான் உடலை மீட்டதாக சொல்கிறார்கள். எனவே குழந்தையின் உடல் இந்த அளவுக்கு எப்படி சிதைந்து,
அழுகிப் போனது என்ற கேள்விகள் பல எழுந்துள்ளன.கடந்த 25ம் திகதி மாலை 5. 40 மணிக்கு குழிக்குள் விழுகிறான் சுஜித். அவன் விழுந்ததைப் பார்த்து பதறிப் போய் ஓடி வந்து காப்பாற்றப் பார்க்கிறார் தாய் கலா மேரி. ஆனால், முடியவில்லை. அவர் போட்ட கூச்சலில் ஊரே
கூடுகிறது. தீயணைப்புப் படையினருக்கு தகவல் போகிறது. அவர்கள் விரைந்து வருகிறார்கள்.
சற்று நேரத்தில் கூட்டம் அதிகரிக்கிறது. போலீஸார் வருகிறார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வருகிறார்கள். மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது. மீட்கும் முயற்சிகள் தொடங்குகின்றன.அதைத்தொடர்ந்து, குழந்தை சுஜித் முதலில் 26 அடி ஆழத்தில் சிக்கியிருக்கிறான். அப்போது அவனை தெளிவாக பார்க்க முடிந்திருக்கிறது. இரு
கைகளும் மேல் நோக்கிய நிலையில் தலையின் மேற்பகுதி மட்டும் தெரிகிறது. அழுகிறான். பேசுவதும் தெளிவாக கேட்கிறது. அதுவரை அவன் பாதுகாப்பான நிலையில்தான் இருந்திருக்கிறான்.ஆனால், நேரம் செல்ல, செல்ல அவன் மெதுவாக கீழ் நோக்கி சரிந்து
செல்ல ஆரம்பித்திருக்கிறான். பார்த்துக் கொண்டிருந்தபோதே சிறுவன் 88 அடிக்குப் போய் விட்டான். மணிகண்டன் டீம் முயற்சி செய்தபோது குழந்தை 26 அடியில்தான் இருந்துள்ளது. ராஜேஷ் டீம் வந்து முயற்சி செய்தபோதுதான் சிறுவன் 80 அடிக்குக் கீழ்
போனது தெரியவந்தது.
அதன் பிறகுதான் குழந்தையின் நிலைமை மோசமடைந்திருக்க வாய்ப்புள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம். தலை மீது மண் சரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த சமயத்தில்தான் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காரணம் உடலை மீட்டபோது முழுமையான
உடல் பாகங்கள் கிடைக்கவில்லை என்கிறார்கள்.முழுமையாக உடல் பாகங்கள் கிடைக்காத அளவுக்கு இறந்த உடல் இருக்குமானால் அது எந்த அளவுக்கு சிதைந்து போயிருக்கக் கூடும் என்று யோசிக்க வைக்கிறது. எனவே குழந்தை சுஜித் இறந்தது சரியாக எப்போது
என்ற கேள்வி எழுகிறது.சுஜித் 2வது நாளிலேயே கூட இறந்திருக்கலாம் என்ற கூறப்படுகிறது. அதாவது தலையைச் சுற்றிலும் மண் விழுந்ததாக சொன்னபோதே குழந்தைக்கு
ஆபத்து தொடங்கியிருக்கலாம்.
தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தாலும் கூட, அதை நுகரும் சூழல் குழந்தைக்குக் கிடைக்காமல் போயிருக்கக் கூடும். மண் விழுந்து மேலும் அழுத்தியிருக்கக் கூடும். இப்படி பல்வேறு காரணிகள் குழந்தைக்கு எதிராக போனதால்தான் உயிரைக் காப்பாற்ற
முடியாமல் போனதாக கருதப்படுகிறது.பல மணி நேரம் இறந்த நிலையில், மண்ணுக்குள் புதைந்திருந்த காரணத்தாலும், ஈரம் காரணமாகவும், குழந்தையின் உடல் வேகமாக
அழுகியிருக்கலாம், சிதைந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.மொத்தத்தில் அத்தனை பேரையும் ஏங்கித் தவிக்க வைத்த குழந்தை சுஜித்துக்கு இப்படி ஒரு வலியுடன் கூடிய முடிவு வந்திருக்கக் கூடாது. அதுதான் அனைவரின் மனதையும்
உடைய வைத்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
16 October 2019
வெளிநாட்டிலிருந்து 40 வருடங்களின் பின் வந்து தாயைத் தேடிக் கண்டுபிடித்த பாச மகன்
டென்மார்க்கை சேர்ந்த இளைஞர் தனது தாயை தமிழ்நாட்டில் தேடி வந்த நிலையில் தற்போது அவர்களின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சியான முடிவை எட்டியுள்ளது.தமிழகத்தின் தஞ்சாவூரை சேர்ந்த
கலியமூர்த்தி – தனலட்சுமி தம்பதி வறுமை காரணமாக சென்னைக்கு 1979ஆம் ஆண்டு குடிபெயர்ந்த நிலையில் தங்களின் மகனை தத்து கொடுத்தார்கள்.ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் டென்மார்கில் வாழும் தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட சாந்தகுமார், டானிஸ்
எனும் தம்பதியால் டேவிட் கில்டென்டல் நெல்சன் என்ற பெயருடன் பாசமாக வளர்க்கப்பட்டார்.தற்போது வங்கி அதிகாரியாக
உள்ள சாந்தகுமாருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், தன்னை பெற்ற
தாய் மற்றும் குடும்பத்தாரை காண அவருக்கு ஆசை ஏற்பட்ட நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து உறவுகளை
தேடினார்.ஆனால், அவர்கள் கிடைக்காததால் டென்மார்குக்கு திரும்பின்னர்.பின்னர் ஒவ்வொரு
வருடமும் விடுமுறை நாட்களில் சாந்தகுமார் தனது தாய் மற்றும் குடும்பத்தாரை தேடி தமிழக தெருக்களில் அலைந்தார்.கூடவே, அவருக்கு மும்பையைச் சேர்ந்த குழந்தைகள் தத்தெடுப்பு குறித்து
தன்னார்வு தொண்டு
நிறுவனம் உதவி கிடைக்கவே அந்த நிறுவனத்தின் இயக்குநர் அருண் டோஹ்லி மற்றும் வழக்கறிஞர் அஞ்சலி பவர் ஆகியோருடன் சேர்ந்து
தேடுதலைத் தொடங்கினார். அப்போது
ஒரு சமயம் அம்மா உங்களை தேடி உங்கள் மகன் வந்திருக்கிறேன், எங்கு இருக்கிறாய் அம்மா என தனக்கு தெரிந்த தமிழில் பேசிக் கொண்டே தேடினார். மேலும், பார்ப்போரிடம் எல்லாம் அவங்க கிடைத்ததும் அவங்கள மகாராணி
போல் வைத்து பார்த்து
கொள்ள வேண்டும் என்று கலங்கினார்.இந்நிலையில், நீதிமன்றம் மூலம்
தனது ஆவணங்களை பெற்ற சாந்தகுமார் தனது
அண்ணன் ராஜன் என்பவரும் டென்மார்க்கில் தத்துக் கொடுக்கப்பட்டதை கண்டுபிடித்தார்.தனது அண்ணனை டென்மார்க்கில் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார் சாந்தகுமார். இதேபோல், தஞ்சையில்பல்வேறு இடங்களில் தேடி அலைந்தும் சாந்தகுமாரின் தாய் தனலட்சுமி குறித்த அவரது குடும்பத்தார் குறித்து
தகவல் தெரியவில்லை.
இந்தசூழலில், தான் தனது தாய் சென்னைக்கு குடிபெயர்ந்தது அவருக்கு தெரிந்தது.பின்னர் டென்மார்குக்கு சென்ற அவருக்கு தாய் தனலட்சுமி சென்னையை அடுத்த மணலியில் இளைய மகன் சரவணனிடம் இருப்பது தெரியவந்தது.அதை அடுத்து சாந்தகுமார் மற்றும்
அவரது குழந்தைகள் சென்னையில் இருக்கும் தனலட்சுமியிடம் வீடியோ
அழைப்பில் பேசியுள்ளார். சில வருடங்களாகத் தாயைத் தேடி தமிழகம் வந்த சாந்தகுமார் தான் கற்றுக்கொண்ட சிறு சிறு
தமிழ் வார்த்தைகளில் தாய் உடல்நலம் விசாரிக்க, தாய் தனலட்சுமி கண் கலங்கினார். வரும் நவம்பர் மாதம் தாயைச் சந்திக்க டேவிட் சாந்தகுமார் டென்மார்க்கிலிருந்து தமிழகம் வருவதாகக் கூறியுள்ளாராம்.இது குறித்து
சாந்தகுமாருக்கு உதவிய வழக்கறிஞர் கூறுகையில், டென்மார்கைச் சேர்ந்த தம்பதிக்குத் தனது குழந்தையை தனலட்சுமி
தத்து கொடுத்த சில வருடங்களில் அவரின் கணவர் கலியபெருமாள் இறந்துவிட்டார்.
அடுத்தடுத்த நெருக்கடிகளில் நொடிந்து போன தனலட்சுமி சென்னையில் பல்வேறு இடங்களில் வேலை செய்து அவரின் இளைய மகன் உள்ளிட்ட பிள்ளைகளை வளர்த்துள்ளார்.சாந்தகுமாருக்குத் தாயிருக்கும் இடம் தெரிந்ததும், அவர் தொடர்பான
ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களைச் சரி பார்த்தோம். தனலட்சுமி சாந்தகுமார் மற்றும் ராஜன் உள்ளிட்டோரின் புகைப்படங்களை இதுநாள் வரை பத்திரமாக வைத்திருந்தார். அதன்மூலம், தனலட்சுமி தான் சாந்தகுமாரின் தாய் என்பதை உறுதி செய்தோம் என மகிழ்ச்சியுடன் கூறினார்.
14 October 2019
காணாமல் போன மகன் 20 வருடங்களுக்கு பின் கிடைத்த இன்ப அதிர்ச்சியில் தாய்
6 வயதில் காணாமல் போன மகனை 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாய் ஒருவர் மீட்டுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த நெகிழ்ச்சி சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது
, திட்டக்குடியை அடுத்த திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா. கணவனை இழந்த நிலையில், மகன் மற்றும் மகளை
விவசாயக் கூலி
வேலை செய்து காப்பாற்றி வந்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது 6 வயது மகனை மரத்தடியில் அமர வைத்து விட்டு, வயலில் வேலை செய்யச் சென்ற அவர், திரும்பி வந்து பார்த்தபோது, மகனைக் காணாமல் பரிதவித்துள்ளார்.பல இடங்களில் தேடியும்
மகன் கிடைக்காத நிலையில், அன்றாடம் அழுது நொந்து கொண்டிருந்த அவர், தனது மகளுடன் பெங்களுர் பகுதியில் வீட்டு வேலைக்காகச் சென்றுவிட்டார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வரும் போது, மகனைப் பற்றிய தகவல் ஏதாவது கிடைக்கிறதா
என விசாரித்து வந்துள்ளார்.
இதனிடையே, மகளை வளர்த்து திருமணம் செய்து கொடுத்துவிட்டதால், சிலமாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான திருமந்துரைக்கு திரும்பியுள்ளார்.இந்த நிலையில், அண்மையில், ராமநத்தத்தில் உள்ள உறவுக்கார பெண் ஒருவரின் வீட்டிற்கு
$சென்றுள்ளார் இந்திரா. அப்போது அந்த உறவுக்காரப் பெண், தொழுதூர் பகுதியில் கட்டிட கூலி வேலைக்குச் சென்றபோது, தன்னுடன் ஒருவர் வேலை செய்ததாகவும், அந்த இளைஞர் இந்திராவின் கணவர் சரவணனின் சாயலில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரைத் தேடி
உறவினர்களுடன் சென்று விசாரித்த போது, அவர் தனது பெயர் இம்ரான் என்றும், தனது தந்தை அபிபுல்லா ராமநத்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் இம்ரான் தன் மகன்தான் என்ற
உறுதியுடன் இருந்த தாய் இந்திரா, அபிபுல்லாவை சந்தித்து தன் மகன் காணாமல் போனதைக் கூறியுள்ளார். அதன்பின்னர், 15, 16 ஆண்டுகளுக்கு முன்பு 10 வயது சிறுவனாய் அவன் தெருவோரத்தில் அழுது கொண்டு நின்றதாகவும், அவனை அழைத்து வந்து தான் வளர்த்து வருவதாகவும் கூறிய அபிபுல்லா, முறைப்படி பொலிசாரிடம் கூறி முடிவு
காணக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தாய் இந்திராவின் புகாரின் பேரில், விசாரணை செய்த பொலிசார், இம்ரான் என்ற பெயரில் வளர்ந்து வந்த அந்த இளைஞர், இந்திராவின் மகன்தான் என்பதை உறுதி செய்து தாயுடன் அனுப்பி வைத்தனர். 6 வயதில் காணாமல் போன அந்த சிறுவன் 10 வயது வரை ஒரு பெரியவரின் பராமரிப்பில் இருந்து வந்ததாகவும், அவர் விட்டுச் சென்றவுடன், அபிபுல்லாவின் பராமரிப்பில் வந்ததாகவும், சிறுவனின் தாய் இந்திரா தெரிவித்துள்ளார்.
யாருமற்ற நிலையில், வாழ்ந்து வந்த நிலையில், மீண்டும் தனது மகன் கிடைத்தது, பெரு வரம் கிடைத்ததற்கு ஒப்பானது என்று நெகிழ்கிறார் ஏழைத்தாய் இந்திரா, இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களையும் பெரும் நெகிழ்ச்சியில், ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)