This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 August 2013

மகள்களையே விபச்சாரத்திற்கு தள்ளிய தாய்க்கு ஜெயில்!!


தமிழ்நாட்டில் பெற்ற மகள்களையே பாலியலில் தொழிலில் ஈடுபடுத்திய தாயாருக்கு 41 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு புதுவையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் தனது மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ சென்னையில் வைத்து சி.பி.சி.ஐ.டி. பொலிசாரால் கைது செய்யப்பட்டார். ஜெயஸ்ரீக்கு உதவிய புரோக்கர்கள் ஆனந்த், கர்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக சென்னை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. 7 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அந்த தீர்ப்பில், தான் பெற்ற மகள்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய ஜெயஸ்ரீ இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தலா 10 ஆண்டு கால சிறை தண்டனையை 2 முறை அனுபவிக்க வேண்டும்.
மேலும் விபச்சார தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா 7 ஆண்டு சிறை தண்டனையை 3 முறை அனுபவிக்க வேண்டும். மொத்தமுள்ள 41 ஆண்டுகால சிறை தண்டனையையும் 10 ஆண்டுக்குள் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
மேலும் புரோக்கர்களாக செயல்பட்ட ஆனந்த், கர்ணன் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

தமிழக முதல்வர் சொன்ன புலிக்கதை


சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, நம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையை விலக்குவதற்காக இரண்டு கதைகளைக் கூறினார்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான வைத்திலிங்கத்தின் மகன் பிரபு - பிருந்தா திருமணத்தையும், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், ஏ.கே. போஸின் மகனுக்கும், மதுரை மேற்கு 1-ஆம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளருமான கே.பி. சிவசுப்ரமணியத்தின் மகள் சிவரஞ்சனிக்கும் நடைபெற்ற திருமணத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில் அவர் கூறிய கதை:
புலியாக மாறினாலும் பயம்

"சிலர் தேவையற்ற வீண் அச்சத்திற்கு ஆளாகி மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தைப் போக்கி, துணிச்சலுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்
.
ஒரு ஞானியின் நிஷ்டை கலைந்த போது, ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியைப் பார்த்த ஞானி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். “பூனையைக் கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றி விட்டால் உங்களுக்குப் புண்ணியம் உண்டு” என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.

இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் அப்பூனை வந்து ஞானி முன் நின்றது. பூனையைக் கண்ட ஞானி, “இப்போது என்ன பிரச்சனை?” என்று வினவினார்.
“என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றி விட்டால் நன்றாக இருக்கும்” என்றது பூனை.

உடனே பூனையை நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, அந்த நாய் வந்து ஞானியின் முன் நின்றது “இப்போது உனக்கு என்ன வேண்டும்?” என்று நாயிடம் கேட்டார் ஞானி. “புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள்”, என்றது நாய்.

ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, “இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றி விடுங்கள்” என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.

சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். “இப்போது உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் ஞானி. “எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது” என்று சொல்ல ஆரம்பித்தான்.

உடனே இடை மறித்த ஞானி, “சுண்டெலியே! உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டுப் போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம் தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு!” என்று கூறிவிட்டார் அந்த ஞானி.

ஆக, உள்ளத்தில் நம்பிக்கையும், அச்சமற்ற தன்மையும் இல்லாத வரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது.
உங்களைப் பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்றுப் போனால், அச்சம், சோர்வு ஆகியவை உடலைக் கூனாக்கி, உள்ளத்தை மண்ணாக்கி விடும்."

உடைந்த பானையானாலும் உயர்வு
"ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டுத் தேவைக்காக, தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தண்ணீர் எடுத்து வர இரண்டு பானைகளை வைத்திருந்தார். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்கவிட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வார்.

இரண்டு பானைகளில், ஒன்றில் சிறிய
 ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் போது, ஓட்டையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். ஓட்டையில்லாத பானை, ஓட்டையுள்ள பானையைப் பார்த்து, எப்போதும் அதன் குறையை பற்றி கிண்டல் செய்யும். இப்படியே பல நாட்கள் கடந்துவிட்டன.

ஒரு நாள் ஓட்டையுள்ள பானை, தன் எஜமானனிடம் சென்று, “ஐயா, என் குறையை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்குள்ள குறையால் வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது.

இதற்குப் பதில் அளித்த விவசாயி, “பானையே நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகளை கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால் தான், வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து இருந்தேன்.

அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து, எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன.
அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்” என்றார்.

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்திவிட்டது. தாழ்வு மனப்பான்மையை விலக்கிவிட்டு துணிச்சலுடன் நீங்கள் செயல்பட்டால், உங்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை.

வலிமை, வாழ்வை வானளவிற்கு உயர்த்தும். நம்பிக்கையைத் துணை கொண்டு நீங்கள் செயல்பட்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்

பாதுகாப்பு இல்லாத இந்தியாவில் நாம் ஆண்களா?


பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்தியாவில் நாம் ஆண்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார் நரேந்திர மோடி.
குஜராத் மாநிலத்தில் சோட்டா உதய்பூர் என்ற மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.

இதற்காக அம்மாவட்ட மக்கள் மோடிக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, சீதையும், சாவித்ரியும் வாழ்ந்த தேசம் இது. ஆனால் இன்றோ நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பு என்பது தற்போது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது.

நான் அரசியலுக்காக இதை கூறவில்லை. நாம் வீட்டில் இல்லாதபோது நமது சகோதரிகள் தனியாக தங்கியிருக்கும் வேளைகளில் அவர்களால் பயமின்றி நிம்மதியாக இருக்க முடிவதில்லையே ஏன் இந்த அவல நிலை?

இதே நிலை நீடித்தால் ஆண்கள் என்று நம்மை அழைத்துக் கொள்வதில் அர்த்தமே இல்லை. கணவன் என்று சொல்லிக்கொள்ளக் கூட நமக்கு உரிமை இல்லை. இதைவிட செத்துப் போகலாம். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு காரணம் பெண்களே என வக்கிரபுத்தி படைத்த சிலர் கூறி வருகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் பெண்கள் காரணமல்ல. ஆண்களுக்குள் இருக்கும் கேவலமான புத்திதான் காரணம். இதைப்போன்ற கேவலமான எண்ணங்களை எதிர்த்து போராட இந்த சமூகம் முன்வர வேண்டும்.

பெண்களை தவறாக சித்தரிப்பதும், பயன்படுத்துவதும் இந்த சமூகத்தின் மீது படிந்துள்ள நீங்காத கரையாக தொடர்ந்துக் கொண்டே வருகிறது. இந்த கரையை நீக்க நாம் கூட்டுப் பொறுப்புடன் போராட வேண்டிய வேளை இது என்று மோடி கூறியுள்ளார்

பனை மரங்கள்20 லட்சம் நட மாநகராட்சி முடிவு

 
 சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் பொது இடங்களில் 20 லட்சம் பனை மர கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையில் இந்தாண்டுக்குள் 5.5 சதவீதமாக உள்ள பசுமைப் போர்வையை 11 சதவீதம் என இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது தொடர்பான சிறப்புத் தீர்மானம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டது.
சிறப்புத் தீர்மான விவரம்: தமிழக முதல்வரின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினமாக கொண்டாட ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் முதல்வரின் பிறந்தநாளின் போது மரம், செடி நடும் பணிகள் தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வுகளின்படி, மாநகராட்சி
எல்லைக்குள்பட்ட 318 கி.மீ. நீர்வழித்தடங்களின் இருகரைகளின் 639 கி.மீ. நீளத்துக்கும், குளம், குட்டை, ஏரி ஆகியவற்றின் கரைகளிலும் 6.5 லட்சம் பனை மரங்களை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது இடங்கள் தவிர பொதுமக்கள் வீடுகளிலும் பனை மரங்கள் வளர்க்கும் வகையில் 20 லட்சம் பனை கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 6.5 லட்சம் பனை மரக் கன்றுகள் நடப்படும். இந்தப் பணியை தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் என்ற அமைப்பு மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்ளும்.
மேலும் ஒவ்வொரு வீட்டு உரிமையாளருக்கும் சிவப்பு சந்தனமரம் எனப்படும் செம்மரக் கன்றுகள் வழங்கப்படும். இதுபோன்று 6.5 லட்சம் மரக் கன்றுகள் வழங்கப்படும் வீடற்றவர்கள் பொது இடங்கள், சாலைகளில் மரக்கன்று நட்டு பராமரித்து, மரத்தின் பயனை பராமரித்தவரே பெறும் வகையில் விதிகள் வகுக்கப்படும். செம்மரக் கன்றுகள் வேண்டுவோர் மாநகராட்சியைத் தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல, சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒரு பப்பாளிக் கன்று வீதம் 6.5 லட்சம் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் 6.5 லட்சம் நொச்சி செடிகள் இந்தாண்டுக்குள் நடப்படும். அடுத்தாண்டு கூடுதலாக 6.6 லட்சம் நொச்சி செடிகள் நடப்படும்.
ஒரு நாட்டில் 33.3 சதவீதம் பசுமைப் போர்வை எனும் வனப்பகுதி இருக்கவேண்டும். ஆனால் சென்னையில் 5.5 சதவீதம் பரப்பில் மட்டுமே பசுமைப் போர்வை உள்ளது. இதனை இந்தாண்டுக்குள் 11 சதவீதமாக உயர்த்துவது என்ற இலக்கு நிறைவேற்றப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளுக்குள் சென்னையின் பசுமைப் போர்வை 25 சதவீதத்துக்கு மேல் என்ற இலக்கை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள பணியாளர்கள், அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

30 August 2013

பேஸ்புக் காதலனை தேடி அலையும் பெண்


பேஸ்புக் காதலனை தேடி இந்தியாவுக்கு வந்த மலேசிய பெண்ணிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசிய நாட்டை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கிறார்.
அவருக்கு பேஸ்புக் மூலம் கேரள மாநிலம் திரூரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, போன் மூலமும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து காதலனை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை வரவே, நேற்று முன்தினம் பெங்களூரில் இருந்து அந்த பெண் கொச்சிக்கு விமானம் மூலம் வந்தார்.
பின்னர் திரூருக்கு சென்று அங்குள்ளவர்களிடம் தன்னுடைய காதலன் பெயரை கூறி விசாரித்தார்.
இதுகுறித்த தகவலறிந்த சப்- இன்ஸ்பெக்டர் ரவி சந்தோஷ் தலைமையிலான பொலிசார் இளம்பெண்ணை திரூர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சம்பந்தப்பட்ட வாலிபர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும், கேரளாவில் இல்லை என்பதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து மலேசிய நாட்டு இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்,

பயங்கரவாதி யாசின் பத்கல் பிடிபட்டது எவ்வாறு?


இந்தியன் முஜாஹிதீன் தலைவர் யாசின் பத்கலை மிகப் பிரமாதமாக திட்டம் போட்டு பிடித்துள்ளது ஐபி எனப்படும் மத்திய உளவுப்பிரிவு.

நேபாளத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பத்கலை, மிகத் துல்லியமாக கண்டுபிடித்து உள்ளூர் பொலிசாரின் உதவியுடன் தூக்கியுள்ளது ஐபி.
இந்த அதிரடி வேட்டையில் நேபாள பொலிசாருடன் சேர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் வீரர்களும், பீகார் பொலிசாரும் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாகவே ஐபி, பத்கலைப் பிடிப்பதற்கான திட்டத்தை தீவிரமாக வகுத்து வந்துள்ளது.
பத்கல் நேபாளத்தில் ஒரு வீட்டில் தங்கியிருக்கும் தகவலை உறுதிப்படுத்திக் கொண்ட ஐபி குழுவினர் பீகார் பொலிஸ் தேசிய புலனாய்வு ஏஜென்சியினர், நேபாள பொலிஸ் குழுவினருடன் இணைந்து பத்கல் பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு அவனை மடக்கியுள்ளனர்.

அதன் பின்பு அவனை மோத்திஹரி என்ற இடத்திற்குக் கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது புனேவில் 2010ல் நடந்த குண்டுவெடிப்பு, மும்பையில் 2012ல் நடந்த குண்டு வெடிப்புச்சம் பவங்களுக்குத்தானே

காரணம் என்பதை பத்கல் ஒத்துக் கொண்டுள்ளானாம்.
ஆனால் சமீபத்தில் பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தனக்குத் தொடர்பு இல்லை என்று பத்கல் தெரிவித்துள்ளான்.
மேலும் இன்று டெல்லிக்கு பத்கல் கொண்டு வரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பலாத்கார சம்பவங்களில் முதலிடம் பிடிக்கும் சென்னை:


பாலியல் பலாத்கார சம்பவங்கள் சென்னையில்தான் அதிகளவில் நடைபெற்றுள்ளன என்று புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன.

பலாத்கார வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டுமென பெண்கள் அமைப்புகள் போராடின. இதையடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
எனினும், கடந்த வாரத்தில் மும்பையில் செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் தமிழகத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளன.
பாலியல் பலாத்கார சம்பவங்களில் சென்னைதான் முதலிடம் வகிக்கிறது என்றும் அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.


இதுகுறித்து மாநில குற்ற ஆவண காப்பக பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில், கடந்த 2012ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013ல்
பாலியல் குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் 50 சதவீதம் உயர்ந்துள்ளன.
கடந்த 2012ல் மாநிலம் முழுவதும் 291 பாலியல் வழக்குகள் பதிவாயின. 2013ல் தற்போது வரை 436 வழக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னையில் மொத்தம் 42 வழக்குகள் பதிவாகியுள்ளன.
விழுப்புரம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு 32 வழக்குகள்

பதிவாகியுள்ளன. கோவை மாநகரத்தில் 11 பலாத்காரம், 5 மானபங்கம், 22 பெண்களுக்கு எதிரான கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், கணவனால் கொடுமை குறித்த புகார்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் போன்ற புகார்கள் அதிகரித்துள்ளன.
2012ம் ஆண்டில் முதல் 7 மாதங்களில் மட்டும் 860 வழக்குகள் இந்த தலைப்புகளில் பதிவாகின.

ஆனால் நடப்பு 2013 முதல் 7 மாதங்களில் மொத்தம் 1,130 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான சம்பவங்களில் பொலிசார் இருதரப்பில் சமரசம் செய்யவே முயற்சிக்கின்றனர்.
வழக்கு பதிவு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கற்பழிப்பு: சோனியா-ராகுல் மீது குற்றச்சாட்டு


ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு, ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த உ.பி. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜோத்பூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்காக நாளை ஆஜராகாவிட்டால் அவரை கைது செய்ய போலீசார் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், தன் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் பின்னணியில் காங்கிரஸ் இருப்பதாக கூறி வந்த ஆசாராம் பாபு, இன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு வருகை தந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
‘எனக்கு எதிரான வழக்கின் பின்னணியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இருக்கிறார்கள். அவர்களின் அறிவுறுத்தல்களின்படி அனைத்தும் நடப்பதாக மக்கள் கூறுகின்றனர்” என்றார்.
ஆசாராம் பாபு இவ்வாறு கூறுவது துரதிர்ஷ்டவசமான குற்றச்சாட்டு என்றும், இதற்காக அவர் நாட்டு மக்களிடமும், சோனியாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷித் ஆல்வி வலியுறுத்தினார்

29 August 2013

இன்றும், நாளையும் திருப்பதி எல்லையை மூடும் போராட்டம்


 திருப்பதி இடம் பெற்றுள்ள ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், இன்று முதல், இரண்டு நாட்களுக்கு முழு அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. எனவே, இந்த நாட்களில், பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சிரமப்பட வேண்டாம் என, தெலுங்கானா எதிர்ப்பு போராட்ட குழுவினர் கூறியுள்ளனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், இன்று முதல் மூன்று தினங்களுக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த, பொது வேலை நிறுத்தம், இரு தினங்களாக குறைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர மாநிலம் முழுவதும், பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன."சித்தூர் மாவட்டத்தில், இன்று முதல் வரும், 31ம் தேதி வரை, அனைத்து தனியார் வாகனங்களுக்கும் தடை விதித்து போராட்டம் நடைபெறும்' என, ஐ.என்.டி.யு.சி., நேற்று முன்தினம் அறிவித்தது.இதையறிந்த திருமலை தேவஸ்தானம், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதன் பின், திருமலையில், பக்தர்கள் வரும் வாகனங்களுக்கு மட்டும், போராட்டக்காரர்கள் அனுமதியளித்தனர். இந்நிலையில், நேற்று, இந்தப் போராட்டம், இரு தினங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக, போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.இதன்படி, ரயில் மற்றும் விமானம் மூலம் வரும் திருப்பதி பக்தர்கள், திருப்பதி ரயில் நிலையம் மற்றும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து, குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படும், தேவஸ்தான இலவச பேருந்துகளில் அலிபிரியை அடையலாம்.அதே போன்று, சந்திரகிரியில் இருந்து, அலிபிரி வரையிலும், தேவஸ்தான இலவச பேருந்துகள் இயக்குவதற்கு, போராட்டக்காரர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
இதுகுறித்து, போராட்டக்காரர்கள் கூறியதாவது:திருப்பதி தேவஸ்தான இலவச பேருந்து தவிர, பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் வந்தால், திருப்பதியில் நுழைய விடமாட்டோம். சித்தூர் மாவட்டத்தில், சைக்கிளுக்குக் கூட அனுமதியில்லை.இந்தப் போராட்டத்தில், அனைத்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பெட்ரோல் "பங்க்'குகள், வங்கிகள், பால் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் கலந்து கொள்கின்றனர். எனவே, பக்தர்கள் திருப்பதிக்கு வந்து சிரமப்பட வேண்டாம்.இவ்வாறு, போராட்டக்காரர்கள் கூறினர்

காவல் நீட்டிப்பு! காரைக்கால் மற்றும் நாகை மீனவர்களுக்கு


ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மற்றும் நாகபட்டினம் மீனவர்களின் சிறை காவல் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற காரைக்கால் மீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இவர்களை விசாரணைக்கு திரிகோணமலை போலீஸாரிடம் இலஙகை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

அதன்பின், திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மீனவர்களுக்கு நேற்று வரை சிறைகாவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார். இதையடுத்து திரிகோணமலை சிறையில் மீனவர்கள் 31 பேரும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை மீனவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 31 மீனவர்களுக்கும் மூன்றாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி வரை சிறை வைக்க  நீதிபதி உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து 31 மீனவர்களும் திரிகோணமலை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

மணி நேரம்தலைகீழாக செஸ் விளையாடி சாதனை படைத்த


தமிழ்நாட்டில் செஸ் பயிற்சியாளர் ஒருவர் தலைகீழாக ஒருமணிநேரம் தொங்கியபடி செஸ் விளையாடி சாதனை படைத்துள்ளார்.
வில்லிசேரி ஷீரடி சாய்பாபா ஞானத்திருக்கோவில் சக்திபாலா அறக்கட்டளை சார்பில், கோவில்பட்டி சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் செஸ் பயிற்சியாளர் தங்கமாரியப்பன் தழைலகீழாக கயிற்றில் தொங்கியபடி செஸ் விளையாடும் சாதனை விழா நடைபெற்றது.
விழாவிற்கு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமை வகித்தார்.
வில்லிசேரி ஷீரடி சாய்பாபா கோவில் நிறுவனர் வேலுச்சாமி, தொழிலதிபர் துரைராஜ், தலைவர் ராமசந்திரன், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவசங்கரி வரவேற்றார்.
விழாவில் சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் செஸ் பயிற்சியாளர் தங்கமாரியப்பன் தழைகீழாக கயிற்றில் தொங்கியபடி 1மணி நேரம் செஸ் விளையாடி சாதனை புரிந்துள்ளார்.
இதனைக்கண்ட பார்வையாளர்கள் வியப்பு அடைந்ததுடன் அவரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
கோவில்பட்டி சுவாமிவிவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் பயிற்சியாளர்கள் மற்றும் அங்கு யோகா பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியர்கள் இதுபோன்ற பல்வேறு வகையான சாதனை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

 

டொலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!


இந்திய ரூபாயின் மதிப்பானது அமெரிக்க டொலருக்கு நிகராக மீண்டும் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.
டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 1.21% வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும் டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 19.2% வீழ்ச்சி அடைந்துள்ளது.
ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்ததால் டீசல், பெட்ரோல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 150 புள்ளிகள் சரிந்து 5,136 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17,500க்கும் கீழே சென்றுள்ளது.
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்பதால் ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் ஆசிய பங்குச்சந்தையிலும் சரிவு காணப்பட்டது.
மேலும் ஆசிய பங்குச்சந்தை வீழ்ச்சி காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு சரிவை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் பவுண்டுக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் சரிவடைந்து 105ஐ தாண்டியுள்ளது

28 August 2013

17 நாட்கள் மட்டுமே மனைவியான சிறுமி: அதிர்ச்சியில் கேரளா


கேராளாவைச் சேர்ந்த 17வயது சிறுமி ஒருவர் அரபு ஷேக் ஒருவர் தன்னை கட்டாயத் திருமணம் செய்து பாலியல் தொந்தரவு தந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
கோழிக்கோட்டில் உள்ள ஒரு அனாதை இல்லத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த யூலை மாதம் ஐக்கிய அரபு குடியரசு நாட்டை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.
பின்பு இவர்கள் இருவரும் தேனிலவு கொண்டாட இரண்டு வாரம் காலம் கோழிக்கோடு மற்றும் குமாரகம் சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுள்ளனர்.
அதன்பின்பு அந்த நபர் துபாய் சென்றுவிட்டார். ஆனால், தன் விருப்பத்திறகு மாறாக திருமணம் நடந்ததாகவும், தன்னை திருமணம் செய்த நபர், கோழிக்கோடு மற்றும் குமாரகத்திற்கு அழைத்துச் சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அந்த சிறுமி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் தனது மகளுக்கு அனாதை இல்லத்தில் உள்ளவர்கள், கட்டாய திருமணம் செய்து வைத்தனர் என்று கூறி அந்த சிறுமியின் தாயார், பொலிசில் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், வறுமை காரணமாக ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட எனது மகள் படிக்க ஆசைப்பட்டாள்.
ஆனால், அவளது விருப்பத்திற்கு மாறாக அவளை வெளிநாட்டுக்காரருக்கு கட்டாய திருமணம் செய்துவைக்க நிர்வாகத்தினர் வற்புறுத்தியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் சிறுவர், நீதிச்சட்டப்படி வரதட்சணை கொடுமைக்கு எதிரான குற்றம் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றம் ஆகிய பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு குறித்து முழு விவரத்தை அளிக்க வேண்டும் என்று பொலிசாருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த பெண்களை அரேபியர்கள் திருமணம் செய்துகொள்வது கேரளாவில் உள்ள சில மாவட்ட முஸ்லிம்களிடையே வழக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த ஐக்கிய அரபு குடியரசு நபரின் தகப்பனாரும் முன்பு இதுபோன்று கேரளாவில் திருமணம் செய்து, அவரது மனைவியை கேரளாவிலேயே விட்டுச்சென்றுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது
 

கலவரத்தில் சேதமடைந்த மசூதிகளை சரி செய்ய தயார்: மோடி


குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான மசூதிகள் சூறையாடப்பட்டன.
சேதமடைந்த மசூதிகளை அரசு செலவில் பழுது பார்த்து, சீர்படுத்தி தர வேண்டும் என குஜராத் இஸ்லாமிய நிவாரண கமிட்டி வேண்டுகோள் விடுத்தது.
இந்த வேண்டுகோளை குஜராத் அரசு நிராகரித்து விட்டது.
இதனையடுத்து, சேதமடைந்த 535 மசூதிகளை அரசு செலவில் சரிபடுத்தி தரும்படி உத்தரவிட வேண்டும் எனறு அந்த கமிட்டி குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த குஜராத் ஐகோர்ட், 'மசூதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை சரி செய்வதற்கு ஆகும் செலவை குஜராத் அரசு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
மக்களையும், மக்களின் சொத்துகளையும் பாதுகாக்க தவறிய மாநில அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த முறையீட்டின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, குஜராத் மாநில அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தா, 'மாநில அரசின் சார்பில் மசூதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி அந்த திட்டம் என்ன? என்பதை கோர்ட்டுக்கும், குஜராத் இஸ்லாமிய நிவாரண கமிட்டிக்கும் மாநில அரசு தெரிவிக்கும்' என கூறினார்.
இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து கூறிய அந்த கமிட்டியின் தலைவர் ஷகில் அகமத், 'அரசு என்ன திட்டத்தை அறிவிக்கிறது என்பதை தெரிந்துக்கொள்வதற்காக பொறுத்திருப்போம். ஆனால், மோடியின் ஆட்சி மீது படிந்த கரையை நீக்குவதாகவே அந்த திட்டம் இருக்கும்' என்றார்.
2014 - பாராளுமன்ற தேர்தலையும், முஸ்லிம் ஓட்டுகளையும் மனதில் வைத்துதான் குஜராத் அரசு தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர்.

27 August 2013

வேலூரிலிருந்து சென்னைக்கு 97 நிமிடங்களில் பயணித்த 'இதயம்'


விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் பாகங்களானது வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலிருந்து சென்னைக்கு 97 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கேதன்னஹல்லி கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன்(22). பெற்றோரை இழந்த இவரை பாட்டி மேச்சேரியம்மா வளர்த்தார்.
திருவண்ணாமலை தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த குபேந்திரன் கடந்த 24ம் திகதி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
இதனால் தீவிர சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர் குழுவினர் நேற்று முன்தினம் இரவு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குபேந்திரனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கண்களை தானம் செய்ய அவரது சித்தப்பா நடராஜ் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குபேந்திரனின் இதயம் சென்னை முகப்பேரில் உள்ள கே.எம்.செரியன் மருத்துவமனைக்கும், நுரையீரலை சென்னை குளோபல் மருத்துவமனைக்கும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.
உடல் உறுப்புகள் கொண்டு செல்ல வேலூர் மாவட்ட பொலிசாரின் உதவி கோரப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணியளவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சிஎம்சி மருத்துவர் சீதாராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் குபேந்திரனின் உடல் உறுப்புகளை நேற்று காலை 5.30 மணிக்கு பிறகு ஒவ்வொன்றாக அகற்றினர்.
காலை 7.55 மணிக்கு பிரீசரில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் பாகங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கொண்டு செல்லப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் 142 கி.மீ வேகத்தில் பொலீரோ ஜீப்பை பொலிஸ் ஒட்டுனர் சரவணன் ஒட்டியுள்ளார்.
97 நிமிடத்தில் சென்னை முகப்பேரில் உள்ள கே.எம்.செரியன் மருத்துவமனையில் இதயம் ஒப்படைக்கப்பட்டது. பின்ப அங்கிருந்து குளோபல் மருத்துவமனைக்கு நுரையீரல் அனுப்பிவைக்கப்பட்டது.
குபேந்திரனின் சிறுநீரகம், கல்லீரல், கண்கள் சிஎம்சிக்கு தானமாக பெறப்பட்டது. இதற்காக பெங்களூர், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ரோந்து பொலிசார் தீவிரமாக கவனித்து வந்துள்ளனர்.
 

மரணத்தில் தடவியல் நிபுணரை சேர்க்க முடியாது: உச்சநீதிமன்றம் !

 
இளவரசன் மரணம் தொடர்பான வழக்கில் தடவியல் நிபுணரை நியமிக்க முடியாது என்று சென்னை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை எ உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இது தொடர்பாக திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், ‘‘காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசன் கடந்த யூலை மாதம் 4ம் திகதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
ரயில்வே தண்டவாளம் அருகே அவர் பிணமாக கிடந்தார்.
இளரவசன் மரணம் குறித்து, அரசு நியமித்த நீதிபதி சிங்காரவேல் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணை கமிஷனில் தடயவியல் நிபுணர் சந்திரசேகரையும் சேர்க்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தனபாலன், செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றபோது இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் தடயவியல் நிபுணர் சந்திரசேகரையும் நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது.
தேவைப்பட்டால் அரசு, அந்த விசாரணை கமிஷனில் தடயவியல் நிபுணர் சந்திரசேகரை நியமித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். மேலும் இத்துடன் இந்த வழக்கை முடிந்து வைப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

 

சோனியா காந்தியை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றிருக்கலாமே..?:


புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் இருக்கும்போது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை நடத்திக் கூட்டிப்போகாமல் வீல் சேரில் உட்காரவைத்து, ஆம்புலன்ஸில் கொண்டு சென்றிருக்கலாமே? என குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அக்கறையுடன் கேட்டுள்ளார். 
நாடாளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு சட்ட மசோதா மீது நேற்று இரவு வரை காரசாரமான விவாதம் நடைபெற்றது. 8 மணிக்கு மேல், மசோதாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மீது ஓட்டெடுப்பு நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது, 8.15 மணி அளவில், சபையில் இருந்த சோனியா காந்திக்கு திடீரென்று நெஞ்சு வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது.
இதனையடுத்து மத்திய அமைச்சர் குமாரி  செல்ஜாவின் தோள் மீது கைபோட்டபடி நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த சோனியா, மகன் ராகுலுடன் காரில் ஏறி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார்.  அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சோனியா அனுமதிக்கப்பட்டார். டாக்டர் குழுவினர் சோனியாவுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து தீவிர சிகிச்சைக்குப் பிறகு, சோனியாவின் உடல் நிலை சீரானதையடுத்து இன்று அதிகாலை அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில் சோனியா கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்பட்டது குறித்து தனது ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி,  "சோனியாஜியின் உடல் நலத்தை கருத்தில்கொண்டு, அவரை நல்ல வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸில் கொண்டு சென்றிருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் வீல் சேர்கள், முதலுதவி படுக்கைகள் அவசர தேவைக்கு இருந்திருக்க வேண்டும். அதனை பயன்படுத்தி அவரை கொண்டு சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ," மருத்துவர்கள்தான் சோனியா உடல்நிலை குறித்து சரியாகக் கணிக்க முடியும். அவர்  விரைவில் குணமடைய அவர் வாழ்த்துகிறேன்"  என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சென்னையில் கல்லூரி மாணவர்கள் மோதல்

 
சென்னையில் நந்தனம் அரசு கல்லூரி, புது கல்லூரி மாணவர்கள் ஆயுதத்துடன் மோதிக்கொண்டனர். ராயப்பேட்டையில் ஏற்பட்ட மோதலில் திவாகர் என்ற மாணவருக்கு கொடுவாளால் வெட்டப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த நந்தனம் கல்லூரி மாணவர் திவாகர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திவாகர் அளித்த வாக்குமூலத்தில் தன்னைத் தாக்கியது புது கல்லூரியை சேர்ந்த சையது பஷீர் எனக் கூறினார்
 

26 August 2013

முதல்வர் ஜெயலலிதா ஆட்டோக்களுக்கான புதிய கட்டணத்தை அறிவித்தார்


உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து ஆட்டோக்களின் புதிய கட்டணத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் மட்டும் 71,470 ஆட்டோக்கள் ஓடுகின்றன. 1996,க்கு பிறகு கடந்த 2007 ஜனவரியில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வையடுத்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 ஆகவும் அடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.15 எனவும் கட்டணம் நிர்ணயிக்க தொழிற்சங்கங்கள் கோரின.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், புதிய ஆட்டோ கட்டணத்தை ஒகஸ்ட் 26ம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கடந்த 10ம் திகதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போக்குவரத்து துறை ஆணையர் பிரபாகர ராவ், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்பட 9 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உச்சநீதிமன்ற கெடு நாளை முடியவுள்ள நிலையில், சென்னையில் ஆட்டோக்களுக்கான புதிய கட்டணத்தை அறிவித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆட்டோ கட்டண உயர்வு தொடர்பாக கடந்த 22ம் திகதி எனது தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் மேற்கொள்ளப்பட்ட விவாதத்துக்கு பிறகு பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் அல்லது உரிமையாளர்கள் ஆகிய இரு தரப்பினரும் பயன் அடையும் வகையில் புதிய ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரம்:
முதல் 1.8 கி.மீ. தூரத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 அதற்குமேல் ஒவ்வொரு கி.மீட்டருக்கு கட்டணம் ரூ.12 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோக்களில் பயணிப்போர் கூடுதலாக 50 சதவீதம் இரவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
காத்திருப்பு கட்டணம், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ரூ.3.50 காசு என்ற வீதத்தில், ஒரு மணி நேரத்துக்கு ரூ.42 நிர்ணயம் செய்யப்படும்.
இந்த திருத்திய கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வரும்.
இதன் அடிப்படையில் பயணிகளிடம் இருந்து கட்டணத்தை வசூலிக்க வேண்டும். திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகித அட்டையை வரும் 15ம் திகதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது வட்டார போக்குவரத்து அலுவலகத்தினால் நடத்தப்படும் சிறப்பு முகாம் மையத்தில் இருந்து ஆட்டோ ஒட்டுனர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அக்டோபர் 15ம் திகதி வரை அவகாசம் வழங்கப்படும்.
இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு இடத்தை காட்டும் கருவியுடன், எலக்ட்ரானிக் டிஜிட்டல் பிரின்டருடன் கூடிய மீட்டர் இலவசமாக அரசு செலவில் பொருத்தப்படும்.
இதற்காக ரூ.80 கோடி செலவாகும். இதன் மூலம் பயணித்த தூரம் மற்றும் அதற்கான கட்டணம் அடங்கிய ரசீது பயணிகளுக்கு வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், பயணிகளிடம் இருந்து சரியான கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
மேலும், ஆட்டோக்களின் இயக்கங்களை கண்காணிக்கவும் வழிவகை ஏற்படும். ஆட்டோவில் பயணிப்போருக்கு ஏதேனும் ஆபத்து நேரும் சூழ்நிலை உருவானால், ஆட்டோ மீட்டருடன் பொருத்தப்பட்டுள்ள அபாய பொத்தானை பயணிகள் அழுத்தலாம்.
இதன்மூலம், பயணிகள் ஆபத்தில் இருப்பது கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வரும். அதன் அடிப்படையில் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பர்.
ஆட்டோக்களின் இயக்கங்களை போக்குவரத்து துறையும், காவல்துறையும் தீவிரமாக கண்காணிக்கும்.
இந்த கண்காணிப்பின் போது மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்துக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் லைசன்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படும்.
ஆட்டோ பறிமுதல் செய்யப்படுவதோடு, அதன் பர்மிட் ரத்து செய்யப்படும். ஆட்டோவில் பயணிப்போர் புகார் அளிக்க ஏதுவாக, பொதுவான புகார் எண் உருவாக்கப்பட்டு, அந்த தொலைபேசி எண் ஒவ்வொரு ஆட்டோவிலும் பிரதானமாக எழுதப்படும்.
இந்த நடவடிக்கையின் மூலம், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்
 

மதுவை ஊற்றி தெருவில் விட்ட சீனியர்கள்! ராகிங்கின்


தமிழ்நாட்டில் மதுவை குடிக்கவைத்து கல்லூரி மாணவர்கள் 8 பேர் ராகிங்கிற்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி பேருந்து நிலையத்தில் பயணிகள் பலர் பேருந்திற்காக காத்திருந்தபோது அங்கு 8 மாணவர்கள் மயங்கி நிலையில் கிடந்ததைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து 108 அவசர ஊர்திக்கு சிலர் தகவல் கொடுக்க விரைந்து வந்த அவசர ஊர்தியில் இருந்தவர்கள் மாணவர்களைப் பரிசோதித்துப் பார்த்தனர்.
அப்போது 8 பேரும் அதிக அளவில் மது அருந்தியதால் மயங்கிக் கிடப்பதாக தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து 8 பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்பு ஒரு மாணவருக்கு தெளிவு வந்தபின் அவரிடம் விசாரித்ததில். தருமபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. அந்தக் கல்லூரியில்தான் நாங்கள் படிக்கிறோம்.
இந்த கல்லூரியில் சீனியர் மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களான எங்களை அழைத்து ஓரு அறையில் அடைத்து, எங்களிடம் இருந்த பணத்தை மிரட்டி பெற்றுக் கொண்டனர்.
பின்பு டாஸ்மாக் பாரில் மதுபானங்கள் வாங்கி வந்தனர். சனிக்கிழமை காலையில் இருந்து மாலை வரை எங்களை மது அருந்த சொல்லி ராக்கிங் செய்தனர்.
மாலையில் வீடு திரும்புவதற்காக எழுந்தபோது மதுபோதையில் எங்களால் எழுந்திருக்க முடியவில்லை. பின்னர் சீனியர் மாணவர்கள் எங்களை கல்லூரி பேருந்தில் ஏற்றி அனுப்பினர்.
மேலும் நாங்கள் தருமபுரி பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்தது கூட எங்களுக்கு தெரியாது என்றும் நாங்கள் எப்படி மருத்துவமனைக்கு வந்தோம் என்று தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து கல்லூரி நிர்வாகமும், பொலிசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

25 August 2013

சூடுபிடிக்கும் அயோத்தி விவகாரம்! -தடையை மீறி இன்று .


அயோத்தியில் தடையை மீறி பேரணி செல்லப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் அறிவித்துள்ளதால் உ.பி.யில் பதற்றம் நிலவுகிறது. பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஏராளமான தொண்டர்களும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநி லம் அயோத்தியில் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பிரச்னைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்டது. அங்கு ராமர் கோயில் கட்ட பா.ஜ.வும் இந்து அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ராமர் கோயில் கட்டக்கோரி கோசி பரிக்ரமா யாத்திரை என்ற பெயரில் அயோத்தியில் இன்று பேரணி தொடங்கப்படும் என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்தது.
இந்த பேரணி பஸ்தி, பராய்ச், அம்பேத்கர் நகர், கோண்டா, பரபங்கி ஆகிய மாவட்டங்கள் வழியாக 300 கி.மீ. தூரம் சென்று செப்டம்பர் 13ம் தேதி மீண்டும் அயோத்தி வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டது. .இந்த பேரணிக்கு அரசு தடை விதித்தது. ஆனால், தடையை மீறி பேரணி இன்று தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் போலீசாரும் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பைசாபாத், கான்பூர், ஆக்ரா உள்ளிட்ட பல பகுதிகளிலும் 350க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரிஷத் அமைப்பின் தலைவர்களான பிரவீன் தொகாடியா, ராம்விலாஸ் வேதாந்தி ஆகியோருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாநாட்டை புறக்கணிக்கக் கோரி பாஜகவினர் போராட்டம்!


இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது இந்திய பிரதிநிதியோ யாரும் கலந்துகொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதிலும் நேற்று பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பா.ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி மாநில தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.டி.ராகவன், மீனவர் அணி மாநில தலைவர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது எல்.முருகன் பேசும்போது, லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ச தைரியமாக இந்தியா வந்து செல்கிறான். இலங்கை வெளியுறவு துறை அமைச்சரும் இந்தியாவுக்கே வந்து மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கிறான். இதையெல்லாம் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது, மீறினால் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும். என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா மாவட்ட தலைவர்கள் ஜெய்சங்கர், பிரகாஷ், காளிதாஸ் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

24 August 2013

ஆபாசப் படம் பார்த்தால்அலுவலக கணனிகளில் கடும் !!


அரசு அலுவலகங்களிலுள்ள கணனிகள் மூலம் வலைத்தளங்களுக்கு சென்று ஆபாசப் படங்களை பார்க்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.
கர்நாடக அரசுக்கு சொந்தமான வலைத்தளத்தின் மூலம் ஆபாச உடலுறவுக் காட்சிகளை ஒளிபரப்பும் வலைத்தளங்களுக்கு சென்று அரசு ஊழியர்கள் நேரத்தை வீணடிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து, சி.பி.ஐ. போலீசார் விசாரித்தபோது கர்நாடக அரசின் தலைமைச் செயலகமான விதான சவுதாவில் இருந்து வெளிநாடுகளில் உள்ள ஆபாச வலைத்தளங்களை பல அரசு ஊழியர்கள் பார்த்து ரசித்ததாக தெரிய வந்தது.
இந்நிலையில், கர்நாடக சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரத்துறை மந்திரி ஜெயச்சந்திரா நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில்,
‘இவ்விவகாரம் தொடர்பாக எனக்கு ஏதும் தெரியாது அரசு ஊழியர்கள் தவறு செய்தது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் சிலர் கைபேசிகளில் ஆபாசப் படங்களை பார்த்து ரசித்தக் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகி சந்தி சிரித்தது நினைவிருக்கலாம்
 

தொடர்ந்து மியான்மர் ராணுவமும் இந்திய எல்லைக்குள் ஊடுருவல்


இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவத்தின் தலைவலியை சமாளிக்கவே இந்திய அரசு திணறிக் கொண்டிருக்கும் வேளையில் புதிய திருகுவலியாக மியான்மர் ராணுவப் படைகள் மணிப்பூரில் உள்ள எல்லைக்கோட்டை கடந்து ஊடுருவி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியா - மியான்மர் நாடுகளுக்கிடையே சுமார் 398 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது.
இங்குள்ள 76-வது கம்பம் அருகே கடந்த வியாழக்கிழமை மியான்மர் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
சன்டேல் மாவட்டத்தில் உள்ள போலன்பை கிராமத்தில் கூடாரம் அமைக்கவும் அவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக போலன்பை கிராமத் தலைவர் அளித்த புகாரையடுத்து உள்ளூர் போலீசார் எல்லைப் பகுதி அருகே சென்று பார்த்தனர். அப்போது கூடாரம் அமைப்பதற்காக மியான்மர் ராணுவ வீரர்கள் தரையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இதனை கண்ட பொலிஸார் இது தொடர்பாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த அத்துமீறல் தொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக மாநில அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்

 

ஒரு கம்ய்பூட்டர் எனில், காங்கிரஸ் தான் அதன்



 இந்தியா ஒரு கம்ப்யூட்டர் எனில் காங்கிரஸ் தான் அதில் பொருத்தப்பட்டிருக்கும் இயல்பான புரோகிராம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் காங்கிரஸ் நடத்தும் பயிற்சிப் பட்டறை  ஒன்றிற்காக வெவ்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 300 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இந்தியாவின் சிறந்த பண்புகளின் அடிப்படைக் கூறுகளாக இருப்பது காங்கிரஸ் தான். எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் மீது  சுமத்தும் அவதூறுகளுக்கு ஆத்திரத்துடன் பதில் அளிக்க முற்படக் கூடாது. கோபமும், ஆவேசமும் எமக்கு பொருத்தமனாதல்ல.  அதற்காக பொறுமையுடன் அமைதியாகவும் இருக்கக் கூடாது. உடனடியாக எமது பதில் நடவடிக்கையை மேற்கொண்டுவிட வேண்டும் என்றார்.

23 August 2013

மாநிலங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் :


 பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
 தென் மாநிலங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளதை அடுத்து கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளன.
தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தென் மாநிலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடும் என்று, மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.
கடலோரத்தில் இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையம், மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய இரு அணுமின் நிலையங்களை சுற்றி 500 மீட்டர் தூரத்துக்கு படகுகள் செல்லக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மீறி படகுகள் சென்றால், படகின் உரிமையாளர் மற்றும் படகு ஓட்டுனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் படகுகளை தீவிரமாக கண்காணிக்கும் முயற்சியில் மீன்வளத்துறை இறங்கியுள்ளது  என்பது குறிப்பிடத் தக்கது.
 

மக்களவையில் அமளி 11 உறுப்பினர்கள் மீது சஸ்பெண்ட்


 ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் மீது மத்திய அரசு முன்மொழிந்த சஸ்பெண்ட் நடவடிக்கைத் தீர்மானத்துக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

சில உறுப்பினர்கள் மக்களவைத் தலைவர் மேஜையில் இருந்த மைக்கை இழுத்த போது அது கீழே விழுந்தது. இந்த களேபரத்தால் மக்களவை வியாழக்கிழமை நண்பகலுக்குப் பிறகு நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.

நிலக்கரிச் சுரங்கம், தெலங்கானா: மக்களவை அதன் தலைவர் மீரா குமார் தலைமையில் வியாழக்கிழமை காலை தொடங்கியது. அப்போது "நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் காணாமல் போனது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று பாஜக உறுப்பினர்கள் குரல் எழுப்பி அவையின் மையப் பகுதியில் அமளியில் ஈடுபட்டனர்.

அதேவேளையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் சிலர், தனி தெலங்கானா மாநிலத்தை உருவாக்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர். இதைத் தொடர்ந்து, அமளி நீடித்ததால் கேள்வி நேரம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை அலுவல் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியதும் நிலக்கரிச் சுரங்கக் ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் காணாமல் போனது குறித்து அமளி ஏற்பட்டது.

சஸ்பெண்ட் தீர்மான நடவடிக்கை: இதற்கிடையே கமல் நாத், "கடந்த சில நாள்களாக ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த ராஜகோபால் ரெட்டி, வி. அருண் குமார், ஸ்ரீநிவாஸ் ரெட்டி, அனந்த் குமார் ரெட்டி, ஹர்ஷா குமார், ஆர்.எஸ். ராவ் ஆகிய காங்கிரஸ் உறுப்பினர்கள், எம். வேணுகோபால் ரெட்டி, என். சிவபிரசாத், கே. நாராயண ராவ், கிரிஷ்டப்ப நிம்மாலா ஆகிய தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் தெலங்கானா விவகாரத்தை எழுப்பி அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கின்றனர்.

அவர்களை கூட்டத்தொடரின் மீதமுள்ள நாள்களுக்கு சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்' என்றார்.

இதையடுத்து, சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில், "இத்தீர்மானத்தை அனுமதிக்க மாட்டோம். தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை பாஜக ஆதரிக்கிறது. ஆனால், தனி மாநிலத்தை உருவாக்க ஆளும் காங்கிரஸ் கூட்டணி நடந்து கொண்ட விதம் மிகவும் வருத்தம் அளிக்கிறது' என்றார்.

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: சுஷ்மாவுக்கு ஆதரவாக அவைக்குள் இருந்த காங்கிரஸ் கூட்டணி நீங்கலான அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர். திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி அவையின் மையப் பகுதிக்கு வந்து குரல் எழுப்பினார். இதேபோல, கமல் நாத் வாசித்த தீர்மான வரிகளில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் என். சிவபிரசாத் மையப் பகுதியில் கடுமையாகக் கூச்சலிட்டார். அப்போது மக்களவைத் தலைவர் மேஜையில் இருந்த மைக்கை இழுக்கும் முயற்சியில் வேணுகோபால் ரெட்டி ஈடுபட்டார்.

மைக் உடைப்பு: கமல்நாத் வாசித்த சஸ்பெண்ட் நடவடிக்கை தீர்மானத்தை நிறைவேற்றும் நடைமுறைகளை மக்களவைத் தலைவர் மேற்கொள்ள முயன்றார். அப்போது சில காங்கிரஸ் உறுப்பினர்கள் (தீர்மான வரியில் இடம் பெற்றிருந்தவர்கள்), தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டு மீரா குமார் மேஜையில் இருந்த மைக்கை இழுக்க முற்பட்டனர். அவர்களை அவை ஊழியர்கள் தடுத்தனர். இந்நிலையில், மைக்கின் ஒரு பகுதி கீழே விழுந்தது. இதைத் தொடர்ந்து, கடும் அமளி நீடித்ததால் மக்களவை அலுவலை நண்பகல் 12.45 மணி வரை மீரா குமார் ஒத்திவைத்தார்.

பிறகு மூத்த உறுப்பினர் பிரான்சிஸ்கோ சர்தினா தலைமையில் அவை கூடியதும் உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் தீர்மான நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து, அவை நடவடிக்கை நாள் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது

22 August 2013

பள்ளியில் அதிரடி ரெய்டு! மாணவர்களிடம் சிக்கிய போதைப்பாக்குகள்


தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் அதிரடி சோதனை செய்ததில் பான் மசாலா, குட்கா போன்ற போதைபாக்கு பாக்கெட்டுகளும், செல்போன், மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அலுவலர்கள் நேற்று சில அரசு பள்ளிகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
மணிக்கட்டி பொட்டல் அரசுமேல்நிலைப்பள்ளி, இடலாக்குடி அரசு பள்ளி, கொட்டாரம் அரசு பள்ளி ஆகியவற்றில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களிடம் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது பள்ளி மாணவர்கள் படிக்கும் நேரத்தில் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்ததால் சோதனை செய்த அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் மாணவர்களிடம் செல்போன்கள் உள்ள கைப்பேசிகள் அவற்றில் பயன்படுத்திய மெமரி கார்டுகள், சென்ட் பாட்டில்கள், தனியாக வைத்திருந்த சிம் கார்டுகள், பிரேஸ்லெட், பெரிய பக்கிள்சுடன் கூடிய பெல்டுக்கள், வெளிநாட்டு, மற்றும் கோல்டு வாட்சுகள், போதை பான்மசாலா, குட்கா பாக்கெட்டுகள், நவீனநாகரீக சீப்புகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதைப்போல் சில மாணவர்களின் முடி அலங்காரம் சினிமா நடிகர்கள் பாணியில் வளர்த்தும், மோசமான தோற்றத்தில் டை அடித்து மாற்றியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களுக்கு சி.இ.ஓ. அறிவுரை வழங்கினார். மேலும் படிக்கும் காலகட்டத்தில் இதுபோன்று கவனத்தை திசைதிருப்பி தவறான பாதையில் செல்லவைக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இது குறித்து சி.இ.ஓ. ராதாகிருஷ்ணன் கூறுகையில்,ஒழுக்கமுள்ள பள்ளியை உருவாக்க முதலில் ஆசிரியர்கள் ஒன்றுபட்ட கூட்டு செயல்பாட்டை உருவாக்கவேண்டும். ஆசிரியர்களின் கடமை கற்பித்தலோடு மட்டும் நின்றுவிடக்கூடாது.
ஒழுக்கம் குறைந்த மாணவர்களை திருத்துவதோடு, ஏழ்மையான குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அர்ப்பணிப்போடு செயல்படவேண்டும்.
ஒழுக்கம் குறைந்த மாணவர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தும்போது அவர்களையும் திருத்தமுடியும் என்ற நம்பிக்கை உருவாகும்.
ஒழுக்கமும், பண்பும் உள்ள மாணவர்கள் வாழ்வின் அனைத்து பருவங்களிலும் மிகச்சிறந்த மனிதர்களாக திகழமுடியும் என்ற உண்மையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
மேலும் ஒவ்வொரு மாணவர்களின் வீடுகளும் அவர்களின் நடத்தையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே முக்கியமான பள்ளி பருவத்தில் உபயோகிக்கக்கூடாத பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை நல்ல பாதைக்கு அழைத்து செல்லவே இந்த சோதனை நடத்தப்பட்டது என்றார்.
பள்ளி மாணவர்களிடம் நடத்திய சோதனையின் போது பல நடிகைகளின் புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைப்போல் அவர்கள் பேண்ட், மற்றும் சட்டைபாக்கெட்டில் வைத்திருந்த யூனிபார்முடன் கூடிய பல மாணவிகளின் புகைப்படத்தை பார்த்து சோதனை செய்த அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களிடம் அறிவுரை கூறியதுடன் அவர்களின் பெயர் விவரங்களை வெளியிடவேண்டாம் என ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்பட்டது.
போதை பாக்குகள் வைத்திருந்த மாணவர்களிடம் அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை குறித்து விளக்கப்பட்டது. பள்ளி அருகாமையில் இருக்கும் கடைகளில் போதை பாக்குகள் ரகசியமாக விற்கப்படுகின்றனவா என சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ஒழுக்கம் குறைந்த மாணவர்களின் பெற்றோர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களிடம் கவுன்சிலிங் நடத்தப்படவுள்ளது. வாரம் ஒருமுறை திடீரென பள்ளிகளில் சோதனை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்

காட்டுத்தீயாக பரவிய வதந்தி! தீபாவளியை முன்கூட்டியே கொண்டாடிய!!


மத்திய பிரதேசத்தில் பரவிய வதந்தியை நம்பி முன்கூட்டியே தீபாவளியை கொண்டாடிய மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 22ம் திகதி வருகிறது. அதற்கு இன்னும் 2 1/2 மாதங்கள் இருக்கும் நிலையில் மத்திய பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் முன்கூட்டியே பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.
40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுபோல் பட்டாசு வெடித்து கடந்த 4ம் திகதி கொண்டாடிவிட்டனர்.
அந்த மாவட்டத்தில் உள்ள 40 கிராமங்களில் அன்றைய தினம் தீபாவளி விற்பனை சூடுபிடித்தது. வேலையில்லாமல் இருந்தவர்கள் பட்டாசு மற்றும் தீபாவளி பொருட்கள் விற்பனை கடைகள் வைத்து பணம் சம்பாதித்தார்கள். கோவிலுக்கு செல்லும் ஜீப்கள், வேன்களில் கூட்டம் அலைமோதியது.
இதனை அறிந்த பக்கத்து மாவட்ட மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஏன் முன்கூட்டியே தீபாவளி கொண்டாடினீர்கள் என்று கேட்டதற்கு அந்தப் பகுதியில் விசித்திரமான வதந்தி பரவியதே காரணம் என்று தெரியவந்ததுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது கடும் மழை பெய்யும். இதனால் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட முடியாமல் போய்விடும்.
தீபாவளி கொண்டாடா விட்டால் தலைப்பிள்ளைக்கு ஆபத்து, வீட்டில் துன்பம் ஏற்படும். இதை தவிர்க்க வேண்டுமானால் முன்கூட்டியே தீபாவளி கொண்டாட வேண்டும் என்றும் 3 முறை கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் எனவும் வதந்தி பரவியது.
இதைக் கேட்டதும் கிராம மக்கள் உடனே பட்டாசு வெடித்தும், கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியும் தீபாவளியை கொண்டாடியதால் கிராமங்கள் களை கட்டியுள்ளது.
இது குறித்து மகேந்திரவாடி கிராம பஞ்சாயத்து தலைவியின் கணவர் நரேந்திரா கூறுகையில், எனது கிராமத்தில் மக்கள் கடந்த 4ம் திகதி தீபாவளி கொண்டாடினார்கள். தொடர்ந்து 15 நாட்களுக்கு விழா கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு குடும்பத்தினரும் தீபாவளி இனிப்பு பலகாரங்கள் செய்து விருந்தளித்தனர். தீபாவளியையொட்டி சல்கான்பூரில் உள்ள புகழ்பெற்ற கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
முன்கூட்டியே தீபாவளி கொண்டாடியதால் வேன், ஜீப், டிரைவர்கள் வழக்கத்தை விட கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி ஒரு நடைக்கு ரூ.3,000 முதல் 3,500 வரை சம்பாதித்தனர். எனவே இந்த வதந்தியை டிரைவர்களும், வியாபாரிகளும் கிளப்பி விட்டிருக்கலாம் என கருதுகிறேன் என்றார்.
அதே சமயம் சில கிராமங்களில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் தீபாவளி கொண்டாடினார்கள்.
மேலும் கிராம அதிகாரிகள் கூறுகையில், படிப்பறிவில்லாத கிராம மக்கள் மூடப்பழக்கத்தால், வதந்தியை நம்பி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் யாருமே வதந்தியை வதந்தி என்று நம்பாமல் உண்மை என்று நம்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்
 

20 August 2013

இந்தியா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை!!.


எல்லையில் தாக்குதல் நடவடிக்கை தொடர்ந்தால் பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய ராணுவ காலாட்படை பிரிவின் மேஜர் ஜெனரல் வி.பி.சிங் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். காஷ்மீர் மாநிலம் ரஜௌரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியது: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவது உள்பட்ட பல்வேறு மிகப்பெரிய தவறுகளை பாகிஸ்தான் தொடர்ந்து செய்து வருகிறது. இதுபோன்ற செய்கைகளால் இந்தியாவை எந்த வகையில் பலவீனப்படுத்தி விடவோ, அச்சுறுத்தவோ முடியாது.

இனிமேலும் எல்லையில் தாக்குதல் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும். எப்போது தாக்குவது, எந்த இடத்தை தாக்குவது என்பதை நாங்கள் முடிவு செய்வோம். இந்த நடவடிக்கை இந்தியா ராணுவத்தின் பலத்தை உணர்த்துவதாக அமையும். எல்லையில் இனி மேலும் தாக்குதல் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டால், முழு பலத்துடன் உரிய பதில் நடவடிக்கை எடுக்கலாம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சரும், ராணுவத்தின் உயர் அதிகாரிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றார் அவர்.
இதனிடையே இந்திய எல்லைப் பகுதியில் தொடர் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள 120 பட்டாலியன் படைப்பிரிவின் காமாண்டர் எ. சென்குப்தா இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியது: ஜனவரி மாதத்தில் இரு ராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதும் இப்போது பூஞ்ச் பகுதியில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும் பாகிஸ்தானின் சிறப்புப் படை மற்றும் பயங்கரவாதிகள் இணைந்து நடத்தியது என இந்தியா குற்றம்சாட்டியது. இதன் பிறகும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்த மீறல் அதிகரித்துள்ளது.
இந்தப்பகுதியில் இதுவரை எந்த தாக்குதலையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்றாலும், அவர்கள் நமது பாதுகாப்பு அரண்கள் மீது தாக்குதல் நடத்துவது என எதையாவது செய்வார்கள். ஆனால், நாங்கள் எவ்வித தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 70 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் துருப்புகள் மீறியுள்ளன. இது கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களைவிட 85 சதவீதத்துக்கும் அதிகம்.
2003ம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு கடந்த வாரங்களில் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகமாகியுள்ளது.கடந்த 9 நாள்களும் இடைவெளியின்றி போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள் குறித்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் துருப்புகளின் அத்துமீறிய தாக்குதல்களால் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 5 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் காயமடைந்துள்ளனர். எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீது மட்டுமின்றி ரோந்துப் படையினர், மக்கள் வாழும் பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்துகின்றனர்.கடந்த இருநாள்களாக இந்திய ராணுவ பாதுகாப்பு அரண்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதோடு மட்டுமில்லாமல் குண்டுகள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டும் தாக்குதல் நடத்துகின்றனர்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மதிப்பதில்லை. ஒப்பந்தத்தை மீறி நாள்தோறும் நம்மீது தாக்குதல் நடத்துகிறது. ஆனால், இந்திய துருப்புகள் எப்போதும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதில்லை. அவர்கள் ஆத்திரமூட்டும் செயல்களை செய்தாலும் நாம் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகிறோம். பாகிஸ்தான் துருப்புகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நமது பாதுகாப்பு அரண்களை எந்நேரமும் விழிப்புடன் கண்காணித்து வருகிறோம். எல்லைக்கு அப்பாலிருந்து வரும் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்க நமது வீரர்கள் தயாராக உள்ளனர். நாம் ஏற்கெனவே அம்மாதிரியான பதிலடியை இப்பகுதியில் கொடுத்திருக்கிறோம். இதில் அவர்களது 5 பாதுகாப்பு அரண்கள் சேதமடைந்துள்ளன.
அதிகாரிகள் உறுதியாக கூறினால் அதிக திறன் வாய்ந்த நவீன ஆயுதங்களால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளோம். எந்த காரணமும் இல்லாமல் உயிரிழப்பு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கடந்த ஒரு வாரமாக நம்மீது தாக்குதல் நடத்துகின்றனர். எல்லைக்கு அப்பால் 200-300 பயங்கரவாதிகள் ஊடுருவலுக்கு தயாராக உள்ளனர். அவர்களின் ஊருருவல் முயற்சி தோல்வியடைந்ததால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானின் இந்நடவடிக்கை 2003-ல் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு முந்தைய காலத்துக்கு நம்மை கொண்டு செல்லும் என நம் ராணுவ வீரர்கள் எண்ணுகின்றனர். நம்முடைய உத்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தற்போதைய பாகிஸ்தான் துருப்புகளின் நடவடிக்கைகள் எல்லையில் அமைதியை முடிவுக்கு கொண்டுவரும் நிலையை ஏற்படுத்தி உள்ளன.என்றார் சென்குப்தா.

இந்தியர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளியது மலேசிய பொலிஸ்!

 
மலேசியாவில், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட, மூன்று இந்தியர்கள் உட்பட, ஐந்து ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மலேசியாவில், பினாங் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில், ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. பயங்கர ஆயுதங்களுடன், இவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து அதிக புகார்கள் வந்தன. இதையடுத்து, இவர்களை ஒடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். கடந்த வார இறுதியில், 200 பேரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களில், ஐந்து பேர் போலீசாரிடம் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

பினாங் மாகாணத்தின், சுங்காய் நிபாங் பகுதியில், கோபிநாத், 31, உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டனர். இதே மாகாணத்தில் மற்றொரு பகுதியில் நடந்த சண்டையில், சுரேஷ், 25, ரேகன், 25, ஆகியோர் கொல்லப்பட்டனர்.

படவெளியீட்டிற்கு உதவிய ஜெயலலிதாவுக்கு நன்றி: விஜய்,,


தலைவா படத்தினை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பல சிக்கல்களை சந்தித்து வந்த தலைவா படமானது 20ம் திகதி தமிழகத்தில் வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகஸ்ட் 9ம் திகதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளல் திரையிட முடியவில்லை.
கடந்த பத்து நாட்களாக நான், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், திரையரங்கு அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் இந்த பிரச்சனையானது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.
மீடியாக்களில் வந்த பல கட்டுக்கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார்.
பல வேலைகளுக்கு மத்தியில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் என்னோடு பொறுமை காத்த அத்தனை ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு ‘தலைவா’ திரைப்படத்தை குடும்பத்தோடு தியேட்டரில் பார்த்து ரசிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கையில் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்

19 August 2013

சீனப் போர் விமானம் இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவலா?


சீனாவை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியான லடாக்கில் பறக்கும் தட்டு போன்ற பொருள் மீண்டும் பறந்ததை பார்த்ததாக, இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் இதுகுறித்து ராணுவத் தலைமையகத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர்.
சீனாவின் எல்லையை ஒட்டிய உயர்ந்த மலைப் பிரதேசமான லடாக்கின் லகான் ஹேல் பகுதியில், கடந்த 4-ஆம் தேதி அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு போன்ற பொருள் பறந்ததை தாங்கள் பார்த்ததாகவும், அது சுமார் 4 மணி நேரம் பறந்ததாகவும் இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
ஆனால், பறந்த பொருள் விமானமா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், இந்தச் சம்பவத்தை அடுத்து, சீனாவை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த சில மாதங்களில் சீனாவின் எல்லையை ஒட்டிய லடாக் பகுதியில் இதுபோன்ற அடையாளம் தெரியாத பொருள் பல தடவை பறந்ததாக, அங்கு முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள் தகவல் அளித்தனர். அப்போதும் அது விமானமா என்பது குறித்து அவர்களால் யூகிக்க முடியவில்லை.
ஆனால், இதுகுறித்து ஆய்வு செய்த இந்தியாவின் உயரிய அறிவியல் ஆய்வு நிறுவனமோ, லடாக் போன்ற உயர்ந்த மலை. மெல்லிய காற்று மண்டலப் பகுதியில் வியாழன், வெள்ளி கோள்கள் கண்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
இதை ராணுவ வீரர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர் என்று குறிப்பிட்டிருந்ததாகவும் ராணுவ வட்டாரங்கள் கூறின.
இந்த நிகழ்வு குறித்து நாடாளுமன்றத்தில் பதில் அளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, லடாக் பகுதியில் அடையாளம் தெரியாத பொருள் பறந்ததாக அங்குள்ள ராணுவ வீரர்கள் தகவல் தந்தது உண்மை. ஆனால், அது சீனாவின் ஊடுருவலா என்பதை அவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்

கர்ஜிக்கும் விஜயகாந்த் நாட்டுக்கள் காட்டு யானைகள்:


காட்டு யானைகள் அட்டகாசத்தால், அமைதியை இழந்து, அச்சத்தோடு வாழும் மக்களின் நிம்மதியான வாழ்விற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழக வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள நகரங்கள், கிராமங்களில், காட்டு யானைகள் அட்டகாசத்தால், மக்கள் பாதிப்படைந்து, துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அப்பகுதிகளில் மக்கள் வெள்ளை உடையோடு நடமாடினால் யானைகளால் ஆபத்து ஏற்படும் என்று வனத்துறை எச்சரிக்கும் அளவிற்கு நிலைமை உள்ளது.
காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து செய்யும் அட்டகாசத்தால் கரும்பு, வாழை, நெல், கம்பு மற்றும் சோளம் ஆகிய பயிர்கள் சேதம் அடைவதுடன், அதை தடுக்க முயற்சிக்கும் விவசாயிகள் தாக்கப்படுவதும், அதனால் உயிரிழப்பு, பொருள் இழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டாக இச்சம்பவம் தொடர்கிறது.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில், 40 கிராமங்களில் கடந்த 10 நாட்களாக, நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்களை யானைகள் நாசம் செய்துள்ளது. மாவட்ட வனத்துறை அதிகாரிகள், யானைகளை விரட்டுவோம் என்று கூறி வந்தாலும், விழுப்புரம் மாவட்டத்தை விட்டு அவை விரட்டப்படுவதாக தெரியவில்லை. விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட வனப்பகுதிகள் ஒன்றிணைந்து இருப்பதால், வனத்துறையினரும் இணைந்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களிலும் யானைகளால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து யானைகளை விரட்டுவதுடன், அதனால், இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அமைதியை இழந்து, அச்சத்தோடு வாழும் மக்களின், நிம்மதியான வாழ்விற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
 

மெகா சைஸ் புத்தகம் குள்ளமான பெண் வெளியிட்ட ,,


ஜெய்ப்பூரைச் சேர்ந்த குள்ளமான பெண், "மெகா' சைஸ் புத்தகத்தை நேற்று வெளியிட்டார். இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தின் உயரம் 30 அடி, அகலம் 24 அடி, எடை 2,000 கிலோ. முனி ஸ்ரீ தருண் சாகர் எழுதிய இந்தப் புத்தகத்தை 25 அங்குலம் உயரமுள்ள ஜோதி ஆம்கே வெளியிட்டார்.
"இந்த மெகா சைஸ் புத்தகத்தை நான் வெளியிட்டுள்ளது மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. இந்தப் புத்தகம் நன்றாக உள்ளது. ஜெய்ப்பூர் மக்கள் விருப்பத்தக்கவர்கள்' என ஜோதி ஆம்கே தெரிவித்தார்.
இந்தப் புத்தகம் 1500 கிலோ இரும்பு, 100 லிட்டர் வண்ணச்சாயம் மற்றும் 400 கிலோ ஆளி விதை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாத் மற்றும் நாசிக்கிலிருந்து வரவழைக்கப்பட்ட 10 பேர் 4 நாள்களில் புத்தகத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த சாதனையைப் பாராட்டி முனி ஸ்ரீ தருண் சாகர், ஜோதி ஆம்கேவுக்கு லிம்கா புக் சாதனை புத்தக நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடந்தாண்டு ஜூலை 28ஆம் தேதி ஆமதாபாதில் 25 அடி உயரம் 17 அடி அகலம் கொண்டு உருவாக்கப்பட்ட புத்தகமே சாதனையாக இருந்தது.
இது முனி ஸ்ரீ தருண் சாகர் எழுதிய புத்தகத்தின் 7ஆவது தொகுதியாகும்.
இதுவரை வெளிவந்துள்ள 6 தொகுதியும் சுமார் 60 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. இப்போது வெளியாகியுள்ள மெகா சைஸ் புத்தகத்தை சிறிய வடிவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளனர்

காணாமல் போனவர்கள் பட்டியலில் 300 வெளிநாட்டவர்கள்


உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 16,17 தேதிகளில் ஏற்பட்ட பெருமழை, நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டது.
அப்போது புனித யாத்திரை வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டு பின்னர் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டனர்.
இதில் காணாமற்போனவர்களைப் பற்றிய விபரங்களும் தயாரிக்கப்பட்டன. அதில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் 300 பேரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இவர்கள் ருத்ரபிரயாக், சமோலி, உத்தரகாசி மாவட்டங்களில் காணாமற்போனதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை காணாமற்போனவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தின் அதிகாரி அஜய் பிரத்யோக் தெரிவித்துள்ளார்.
இதுவரை மொத்தம் 5,100 பேர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக இவர் கூறியுள்ளார். வெளிநாட்டவர்களில் 100 பேர் நேபாள் நாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் எனவும், மற்ற நாடுகளின் குடிமக்கள் குறித்த எண்ணிக்கை இன்னும் சரியாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல நாடுகளில் இருந்தும் தங்களுக்கு காணாமற்போனவர்களைப் பற்றிய விசாரணைகள் வந்துகொண்டிருப்பதாகவும் ஆனால் அதில் பல விபரங்கள் உறுதி செய்யப்படாமல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட சமயத்தில் பிற நாடுகளில் இருந்து இந்தியா வந்திருந்து திரும்ப வராமல் போனவர்கள் பட்டியல் தங்களுக்கு கிடைத்த பின்னரே, இது குறித்து தகுந்த விபரங்கள் அளிக்க இயலும் என்று உத்தரகாண்ட் மாநிலத்தில் பணிபுரியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

18 August 2013

நீர்மூழ்கி கப்பல் வெடிப்பிற்கு பாதுகாப்பு விதிமுறை மீறலே காரணம்:


 
ரஷ்யா குற்றச்சாட்டு  இந்தியாவில் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறியதற்கு பாதுகாப்பு விதிமுறைகள் மீறலே காரணம் என்று ரஷ்ய துணை பிரதம மந்திரி டிமிட்டி ரோகேசின் தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்த புதன்கிழமையன்று அதிகாலை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்திய கப்பற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் தமிழக வீரர் வெங்கட்ராஜூ உள்பட 18 பேர் இறந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.
இந்த கப்பலானது ரஷ்யாவில் பழுதுபார்த்து புதுப்பிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 29ம் திகதியன்று இந்தியா வந்ததாகும்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ரஷ்ய துணை பிரதம மந்திரி டிமிட்ரி ரோகோசின், ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ரஷ்யாவில் 1997ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சிந்து ரக்‌ஷக் என்ற இந்திய கடற்படை கப்பலானது வெடித்து சிதறியது என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்த கப்பலில் உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன்.
மேலும் இந்த கப்பலானது சமீபத்தில்தான் ரஷ்யாவில் முழுமையாக பழுதுபார்க்கப்பட்டு அனுப்பப்பட்டதாகும்.
15,000 கடல் மைல்களுக்கு மேல் அந்த கப்பல் பயணம் செய்துள்ளதால், இந்த விபத்திற்கு தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இருக்க முடியாது.
இதற்கான காரணம் குறித்து ஆராயப்படுகிற வேலையில், கப்பலில் உள்ள கருவிகள் காரணம் என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கவில்லை.
இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் என்று இந்தியா இதுவரை கூறவில்லை. பாதுகாப்பு விதிமுறைகள் மீறலே இந்த நீர்மூழ்கி கப்பல் விபத்துக்கான காரணமாக இருக்க முடியும்.
மேலும் இந்த கப்பலில் பேட்டரிகள் ரீசார்ஜ் செய்யப்படுகிற பகுதியில் வெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது.
இந்த பகுதியானது கப்பலில் உள்ள அனைத்து பாதுகாப்பு கருவிகளுடனும் இணைக்கப்பட்டுள்ள மிகவும் பாதுகாப்பான பகுதியாகும்.
18 கடற்படை வீரர்கள் இறந்திருப்பதாக அஞ்சப்படுகிற இந்த விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளார்

ஆடை வாங்குபவர்களுக்கு வெங்காயம் இலவசம்:


வெங்காய விலை உயர்வைக் கருத்தில் கொண்டு காசியாபாத் ஜவுளிக் கடைகளில் ஆடை வாங்குபவர்களுக்கு வெங்காயம் இலவசம் என்ற அதிரடி சலுகையை அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் வெங்காய விலை அதிகரித்தள்ளதால் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் தொழிலதிபர்கள்.
உத்தர பிரதேச மாநிலத்தில், காசியாபாத் நகரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் விளம்பரப் பலகையைப் பார்த்து வாடிக்கையாளர்கள் அசந்து போயிள்ளனர்.
வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களோடு இலவச இணைப்பாக வெங்காயத்தைக் கொடுத்து கண்களில் ‘ஆனந்தக் கண்ணீர்' வரவழைக்கிறார்கள்.
அதில் நம்மூர் ஆடித்தள்ளுபடி மாதிரி, இக்கடையில் குறைந்தபட்சம் 2000 ரூபாய்க்கு துணி வாங்குவோருக்கு வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் இலவசம் என எழுதப்பட்டிருந்தது.
இதேபோல் ஜாம்ஷெட்பூரில் உள்ள டீலர் ஒருவர், தனது ஸ்டோரில் கார் மற்றும் லாரி டயர்கள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 5 கிலோ வரை வெங்காயம் இலவசமாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
டெல்லியில் அரசு ஒரு புறம், மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்வதற்காக நகரம் முழுவதும் நடமாடும் வேன்களை அறிமுகம் செய்துள்ளன.
ஆனால் மற்றொரு புறம் வியாபாரிகள் இது போன்ற தந்திரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

சீன பழமொழிக்கேற்ப மாறிய தமிழ்நாடு: ஜெயலலிதா பெருமிதம்


தமிழ்நாட்டில் எனது ஆட்சியானது சீனப் பழமொழிக்கேற்ப செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னை பல்கலைக்கழகத்தின் 155வது பட்டமளிப்பு விழா, 2011, 2012ம் ஆண்டுகளுக்கான துணை பட்டமளிப்புவிழா ஆகிய முப்பெரும் விழா சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா கட்டிடத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான கே.ரோசய்யா தலைமை தாங்கினார். முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டமளிப்புவிழா பேருரை நிகழ்த்தினார்.
அவர் நிகழ்த்திய பேருரையில், இந்தியாவில் உள்ள மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக்கழகமும் ஒன்று.
மிகச்சிறந்த கல்வி பாரம்பரியம் மிக்க இந்த பல்கலைக்கழகத்தை தொலைநோக்கு சிந்தனையாளர்களும், ஜாம்பவான்களும் சேர்த்து உருவாக்கி இருக்கிறார்கள். இங்கு படித்த மாணவர்கள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.
சர் சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர் ஆகிய இரு நோபல் பரிசு விஞ்ஞானிகளையும், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் ஆகிய குடியரசுத் தலைவர்களையும் உருவாக்கிய பெருமை சென்னை பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
ஒரு ஆண்டை மனதில் வைத்து சிந்தித்தால் நெல் பயிரிடு. 10 ஆண்டுகளை மனதில் வைத்து சிந்தித்தால் மரக்கன்றுகளை நடு. 100 ஆண்டுகளை மனதில் வைத்து சிந்தித்தால் மக்களுக்கு கல்வி கொடு என்பது சீன பழமொழி. எனது தலைமையிலான அரசு இந்த மூன்றையும் செய்திருக்கிறது.
இப்போதும், அடுத்த 10 ஆண்டுகளிலும், அடுத்தடுத்து பல தலைமுறையினரும் போற்றிப்புகழத்தக்க வகையில் நல்லாட்சியை கொடுக்க வேண்டும் என்று நான் உறுதிகொண்டுள்ளேன்.
கல்வி நிறுவனங்கள் மூலமாக போதிய எண்ணிக்கையில் உயர்தரமிக்க நிபுணர்களை உருவாக்கி மனித வள ஆற்றலை மேம்படுத்த வேண்டும். மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது எனது அரசின் தலையாய நோக்கம் ஆகும்.
சென்னை பல்கலைக்கழக கல்வியில் தமிழகத்தை சர்வதேச மையமாக உருவாக்குவதே லட்சியம்.
அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் உலகத்தரமான கல்வியை வழங்கும் வகையில் நமது கல்வி நிறுவனங்கள் சிறப்பு மையங்களாக உருவாக வேண்டும் என்று நான் சிந்தித்து பார்க்கிறேன்.
உயர்கல்வித்துறையை பொறுத்தமட்டில், ஆராய்ச்சியிலும் சரி, வளர்ச்சி மேம்பாட்டிலும் சரி தமிழ்நாடு 21-ம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ரூ.2 கோடி செலவில் 10 பல்கலைக்கழகங்களில் வீடியோ-கான்பரன்சிங் வசதியுடன் ஸ்மார்ட் வகுப்புகள், ஆங்கிலம், சீனம், ஜப்பான், ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை படிக்கும் வகையில் 10 பல்கலைக்கழகங்களில் ரூ.1½ கோடி செலவில் மொழி ஆய்வகங்கள், மாணவர்களை தொழில்முனைவோர்களாக்கும் வண்ணம் 10 பல்கலைக்கழகங்களில் ரூ.2 கோடி செலவில் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மையங்கள், வெளிநாடுகளை சேர்ந்த புகழ்பெற்ற பேராசிரியர்கள் தங்கள் கல்வி அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வசதியாக ரூ.1 கோடி செலவில் 10 பல்கலைக்கழகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய உலகத்தரத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க 10 பல்கலைக்கழகங்களில் ரூ.10 கோடி செலவில் பாடத்திட்ட மேம்பாட்டுப் பிரிவுகள், கிராமப்புற இளைஞர்களின் வேலைத்திறனை அதிகரிக்கவும், அவர்களை வேலைவாய்ப்பு தகுதிமிக்கவர்களாக உருவாக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளில் கிராமப்புற பகுதிகளில் புதிதாக 22 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கிராமப்புறங்களில் தொழில்கல்வியை மேம்படுத்தும் வண்ணம் 10 பாலிடெக்னிக் கல்லூரிகள், 2 பொறியியல் கல்லூரிகள், சென்னை பல்கலைக்கழகம் உள்பட 6 பல்கலைக்கழகங்களில் வியாபார கூட்டு மையங்கள், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே குறிப்பிட்ட காலத்திற்கு வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்,சென்னை பல்கலைக்கழகம் உள்பட 8 பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப மாற்று மையங்கள், 30 கல்லூரிகளில் மென்திறன் பயிற்சி மையங்கள் போன்ற வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்திக்கொள்ளும் வகையில் விலையில்லா மடிக்கணனி என ஏராளமான திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி உள்ளது.
விலையில்லா மடிக்கணனி வழங்கும் திட்டம், வெளிநாடுகளில் நமது மாணவர்களை தலைநிமிர வைத்திருக்கிறது.
இதுவரை 5 லட்சத்து 45 ஆயிரத்து 402 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கி உள்ளோம் என்பதை பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் எனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒட்டுமொத்த பார்வைதான் மேற்கண்ட நடவடிக்கைகள். சர்வதேச கல்வி தரத்திற்கு இணையான கல்வியை வழங்கும் வகையில் நமது பல்கலைக்கழகங்களை உருவாக்க வேண்டும்.
மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய முக்கிய சாதனங்களாக பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும் என்று மாணவர்களுக்குநிகழ்த்தியுள்ளார்
                                                       { புகைபடங்கள், }




17 August 2013

விசா விதிமுறைகளை இறுக்கியது கனடா! இந்தியர்களை!!


 
கடந்த பத்தாண்டுகளில் மற்ற எந்த நாட்டையும்விட கனடா நாட்டில்தான் பணி புரியும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது.இதனைக் குறைத்து, உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் முயற்சியில் கனடா அரசு இறங்கியுள்ளது. அதன் விளைவாகவே விசா விதிமுறைகள் தற்போது கடினமாக்கப்பட்டுள்ளன. புதிய விசா விண்ணப்பப்படிவங்களுக்கு திருப்பிக் கிடைக்காத புதிய கட்டண விகிதங்கள் போடப்பட்டுள்ளன. புதிய ஊழியருக்கான விளம்பரம், முதலில் உள்ளூர் பத்திரிகைகளில் மூன்று மாதங்களுக்கு முன்னால் தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு அளிக்கப்படவேண்டும். இதுமட்டுமில்லாமல், நிறுவனதாரர்கள் குறைந்தது இரண்டு முறைகளிலாவது இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிரூபிக்க வேண்டும்.
ஆங்கிலமும், பிரெஞ்ச் மொழியும் தெரிந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும். இது இல்லாமல் எவரேனும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கு வலுவான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். கனடா நாட்டவர்களுக்கு அளிக்கப்படும் சராசரி ஊதியத்தைவிட 15 சதவிகிதம் குறைவாகக் கொடுப்பதன் மூலம் ஒரு வெளிநாட்டவரை இங்கு பணியில் அமர்த்தலாம் என்ற நடைமுறை இதுவரை இருந்து வந்தது.
கடந்த ஏப்ரலில் இந்த நடைமுறையை முற்றிலும் நீக்க அரசு முடிவெடுத்து இத்தகைய புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. தற்காலிகமாகப் பணிபுரிய வரும் வெளிநாட்டவர்களை விடுத்து, கனடா ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்ககூடிய இந்த விதிமுறைகள் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வசீகரத்தைக் கொடுக்காது என்று சட்ட நிறுவனம் ஒன்றின் நிர்வாக பங்குதாரரான சஜன் பூவய்யா தெரிவிக்கின்றார்.
 

16 August 2013

உத்தரகண்டில் மீண்டும் கன மழை; நிலச் சரிவு


 
உத்தரகண்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பழமைவாய்ந்த மடம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
 உத்தரகண்டில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பவுரி மாவட்டத்திலும் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. இதனால் அலக்நந்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள கேஷோராய் மடமும் தப்பவில்லை. இந்த மடம் 1625-ம் ஆண்டு கட்டப்பட்டது.
 இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என பேரிடர் மேலாண்மை அதிகாரி ரவ்நீத் சீமா தெரிவித்தார். ஆற்று வெள்ளத்தில் கேஷோராய் மடம் கொஞ்சம் கொஞ்சமாக அடித்து செல்லப்பட்ட நிலையில் தற்போது அதன் பக்கவாட்டுச் சுவர்கள் மட்டுமே எஞ்சி நிற்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 இதற்கிடையே உத்தர்காசி மாவட்டம் பத்கோடில் அதிகபட்சமாக 106 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக சமோலி மாவட்டம் கமிதாவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன. ஹரித்துவாரில் கங்கை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
 உத்தர்காசியில் உள்ள குணால் கிராமத்தில் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஹரித்துவார் மாவட்டத்தில் லக்ஷர் என்ற இடத்தில் கங்கை நதியில் 24 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருப்பினும் அனைவரும் காப்பாற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

ஏழை - பணக்காரர் இடைவெளியை குறைக்க போகிறாராம் முலாயம்


ஏழை, பணக்காரர்கள் இடையே நிலவும் இடைவெளியை, வளர்ச்சி மூலம் நீக்க வேண்டும்,'' என, சமாஜ்வாதி கட்சித் தலைவர், முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
 உ.பி., தலைநகர் லக்னோவில் நேற்று, சமாஜ்வாதி கட்சி தலைமையகத்தில், தேசிய கொடியேற்றி, முலாயம் பேசியதாவது:பட்டினி சாவே இல்லாத வகையில், புதிய திட்டங்கள் பின்பற்ற வேண்டும். ஏழை, பணக்காரர்களுக்கு இடையே நிலவும் இடைவெளியை, வளர்ச்சியால் நீக்க வேண்டும். கொஞ்சம் பேர், வசதி, வாய்ப்புகளுடன் சுகபோகமாக வாழ்கின்றனர்; லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்; இந்நிலை மாற வேண்டும்.நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளின் கனவுகள், இன்னும் நிறைவேறவில்லை. நாட்டில் அனைவருக்கும், உணவு, உடை, இருப்பிடம் கிடைக்க சபதம் ஏற்போம்.
 "எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும், பாகிஸ்தானை கண்டித்து, பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்' என, பல முறை நான் வலியுறுத்தினேன். நேற்று முன்தினம், அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது."எல்லையில் இந்தியா அத்துமீறுகிறது' என தெரிவித்து, அதை கண்டித்து, பாகிஸ்தான் பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அதைப் பார்த்து, நம் பார்லிமென்டிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இவ்வாறு, முலாயம் கூறினார்.
 "ஆட்சிக்கு வரும் முன்னர் வரை, "ஏழை, பணக்காரர்கள் இடைவெளியை குறைப்போம்' என கூறும் அரசியல்வாதிகள், ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த அறிவிப்பை மறந்து விடுவர். உத்தர பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த பிறகும், சமாஜ்வாதி தலைவர் முலாயம், இந்த கோஷத்தை மறக்காமல் கூறியது, ஆட்சி, அதிகாரம் அவர் கையில் இல்லை; மகன் அகிலேஷ் கையில் இருப்பதை காட்டுகிறது போலும்' என, கூட்டத்தில் சிலர் முணுமுணுத்தனர்
 

வளர்ச்சி குறித்து விவாதிக்கத் தயாரா? :



மோடிக்கு திக்விஜய் சிங் சவால்  பிரதமரின் சுதந்திர தின உரையை விமர்சித்துள்ள குஜராத் மோடி, கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறார்,'' என, மத்திய வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் காட்டமாக கூறியுள்ளார்.
 மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்:நாட்டின் சுதந்திர தின விழாவில், நாட்டின் பெருமைகளையும், ஒற்றுமையையும் பற்றி பேசுவது தான், அரசியல் தலைவர்களுக்கு நல்லது. தனிப்பட்ட முறையில், பிரதமரை விமர்சிப்பது சிறந்தது அல்ல.
 நாட்டின் கதாநாயகனாக, தன்னை கருதி, கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறார் மோடி.மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணிஷ் திவாரி:பிரதமர் குறித்து விமர்சித்துள்ள, குஜராத் முதல்வர் மோடி, தன் பேச்சை வாபஸ் பெற வேண்டும்.
 காங்., பொது செயலர் திக்விஜய் சிங்:பிரதமராகும் ஆசையில், வரம்பு மீறி பேசி வரும் குஜராத் முதல்வர் மோடி, நாட்டின் வளர்ச்சி குறித்து, என்னுடன் விவாதம் நடத்த தயாரா?
 மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல்:மோடியின் ஒவ்வொரு உரையிலும், தவறான தகவல்களும், புள்ளிவிவரங்களும் நிறைந்துள்ளன.
 இதற்கிடையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன் வீட்டில் சுதந்திர தின விழாவையொட்டி நடந்த விழாவில், கட்சியினர் மத்தியில் பேசுகையில், ""அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதற்கான தினம் இதுவல்ல. எதிர்கால திட்டங்கள் குறித்து மட்டுமே சிந்திக்க வேண்டும்,'' என்று குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பா.ஜ., லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மோடியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ""பிரதமரின் உரையில், லால்பகதூர் சாஸ்திரி பற்றி குறிப்பிடாதது பற்றி, மோடி விமர்சித்தது சரிதான்,'' என்று குறிப்பிட்டுள்ளார்
 

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? பிரதமர் மன்மோகனுக்கு மோடி சவால்

 
நாட்டின் வளர்ச்சி குறித்து, என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?'' என, பிரதமர் மன்மோகனுக்கு, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.

 சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மன்மோகன் சிங், டில்லி செங்கோட்டையில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உரையாற்றினார். வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், பிரதமர் வேட்பாளராக, பா.ஜ., சார்பில் முன்னிறுத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படும், குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, குஜராத்தில் புஜ் நகரில் நடந்த, சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். பிரதமரின் சுதந்திர தின உரைக்கு, பதிலளிக்கும் வகையில், மோடி பங்கேற்கும் விழா அமைக்கப்பட்டு இருந்தது.

 விழாவில் உரையாற்றிய, நரேந்திர மோடி கூறியதாவது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று முன் தினம், தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய போது, எல்லையில், அத்துமீறி வரும் பாகிஸ்தானின் செயலை கடுமையாகக் கண்டித்து இருந்தார். ஆனால், பிரதமர், தன் சுதந்திர தின உரையில், பாகிஸ்தானின் செயலை கடுமையாகக் கண்டிக்கவில்லை. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் செயல் குறித்து, பிரதமர் பேசிய விதம் கவலை அளிப்பதாக உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக, பிரதமர், கடுமையாக பேசியிருக்க வேண்டும். ஆனாலும், ஏன் பேச பயப்படுகிறார் என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் நம் வீரர்களை, உற்சாகப்படுத்தும் வகையிலாவது பேசியிருக்க வேண்டும். பாகிஸ்தான் ராணுவம், நம் எல்லைக்குள் புகுந்து, நம் வீரர்களை சுட்டுக் கொன்று விட்டு போகிறது. மத்திய அரசு இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது; மத்திய அரசின் பொறுமை, நாட்டு மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் தவறான அணுகுமுறையால், பார்லிமென்ட் முடங்கிப் போய் உள்ளது. நான், பிரதமரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன்... "நீங்கள் ஒரு பெரிய நாட்டையே ஆளுகிறீர்கள்; நாங்கள் சிறிய மாநிலத்தை ஆட்சி செய்கிறோம். நாட்டின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், இதுவரை சாதித்தது என்ன என்பது குறித்தும், என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?'
 நாட்டை மீட்கணும்:
 குஜராத்தின் வளர்ச்சி நம் நாட்டின் வளர்ச்சி; இதை கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். சுதந்திர தின உரையில், ஒரு குடும்பத்தைப் பற்றி
 மட்டுமே, பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சர்தார் வல்லபாய் படேல், லால்பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்கள் நினைவுகூர தகுதியற்றவர்களா? இவர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தானே? பிரதமரின் பேச்சில் அரசியல் கலப்பு இருக்கக் கூடாது. முதலில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து, நாட்டை மீட்க வேண்டும். 60 ஆண்டுகளுக்கு முன், நடந்த நேருவின் உரை பற்றி, பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கடந்த, 60 ஆண்டுகளில், காங்கிரஸ் என்ன செய்துள்ளது? நிலைமை மாறிய மாதிரி தெரியவில்லை? தற்போது, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கும், நாடு முன்னேற்றம் காணாமல் இன்னும் பின்தங்கியே இருப்பதற்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசே காரணம். சீன விவகாரத்தில், பிரதமர் பின்வாங்குகிறார்; வெளியுறவு கொள்கைகளின் அம்சங்கள் சரியில்லை. பொருளாதாரத்தை சீரமைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, மக்கள் முன் எடுத்து வைக்க, மன்மோகன் சிங் தவறிவிட்டார்.
 ஜனாதிபதி தன் சுதந்திர தின உரையில், அதிகரித்து வரும் ஊழல் பற்றி கவலை தெரிவித்து இருந்தார்; ஆனால், பிரதமர் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல் மவுனமாக இருக்கிறார். சோனியா குடும்பம் ஊழலில் சிக்கி தவிக்கிறது. உணவு பாதுகாப்பு மசோதா, மக்களின் உணவைப் பிடுங்கும் மசோதாவாக உள்ளது. இந்த மசோதா குறித்து, மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. ஊழலுக்கு முடிவு கட்ட, வாக்காளர்கள் வரும் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இவ்வாறு மோடி பேசினார். மோடி தேசிய நீரோட்டத்திற்கு வருவதால், மாநில மொழியான குஜராத்தியில் பேசாமல், இந்தியில் பேசினார்.
 டி.ஜி.பி., மயக்கம்:
 முதல்வர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து விட்டு, உரையாற்றினார். அவரது
 மேடை அருகே, குஜராத் டி.ஜி.பி., அமிதாப் பதக் பாதுகாப்புக்கு நின்று இருந்தார். மோடி உரையாற்ற துவங்கிய, சில நிமிடங்களில், அமிதாப் பதக் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும், அருகிலிருந்த அதிகாரிகள், அவரை உடனடியாக, மேடையின் பின்பக்கம் தூக்கி சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளிலும், போலீஸ் துறை சார்பில் நடந்த, சுதந்திர தின விழாவிலும் கலந்து கொண்டார். இடைவிடாத பணி காரணமாக அவர் சோர்வடைந்திருந்தார்.
 மோடி பேச்சுக்கு காங்., கண்டனம்:

 ""பிரதமரின் சுதந்திர தின உரையை விமர்சித்துள்ள குஜராத் மோடி, கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறார்,'' என, மத்திய வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் காட்டமாக கூறியுள்ளார்.

 மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: நாட்டின் சுதந்திர தின விழாவில், நாட்டின் பெருமைகளையும், ஒற்றுமையையும் பற்றி பேசுவது தான், அரசியல் தலைவர்களுக்கு நல்லது. தனிப்பட்ட முறையில், பிரதமரை விமர்சிப்பது சிறந்தது அல்ல. நாட்டின் கதாநாயகனாக, தன்னை கருதி, கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறார் மோடி. இவ்வாறு அவர் கூறினார்.மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணிஷ் திவாரி, ""பிரதமர் குறித்து விமர்சித்துள்ள, குஜராத் முதல்வர் மோடி, தன் பேச்சை வாபஸ் பெற வேண்டும்,'' என்றார். காங்., பொது செயலர் திக்விஜய் சிங், ""பிரதமராகும் ஆசையில், வரம்பு மீறி பேசி வரும் குஜராத் முதல்வர் மோடி, நாட்டின் வளர்ச்சி குறித்து, என்னுடன் விவாதம் நடத்த தயாரா?'' என்றார். மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல், ""மோடியின் ஒவ்வொரு உரையிலும், தவறான தகவல்களும், புள்ளிவிவரங்களும் நிறைந்து உள்ளன.'' என்றார்