Search This Blog n

12 August 2013

மருத்துவ உலகில் அதிசயம்: குழந்தைக்கு தீப்பிடித்து!!!


எரிவதை கண்டறிவதில் திணரும் மருத்துவர்கள் தமிழ்நாட்டில் தீப்பிடித்து எரியும் குழந்தை ராகுலின் உடல் மாற்றத்தை கண்டறிவதில் மருத்துவர்கள் திணறி வரும் நிலையில், குழந்தையின் வியர்வை, சிறுநீரகம், ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள டி.பரங்குனி கிராமத்தை சேர்ந்த கர்ணன் ராஜேஸ்வரி தம்பதியினருக்கு 2வதாக பிறந்த ராகுல் என்ற குழந்தையின் உடலில் அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது.
தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ள குழந்தை ராகுலுக்கு சென்னை கீழப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குழந்தையின் முன் பகுதியில் தீப்பிடித்துள்ளது. ஆனால் முதுகில் தீப்பிடிக்காததால் மருத்துவர்கள் தொடர்ந்து குழப்பம் அடைந்து வருகின்றனர். குழந்தை உடலில் இருந்து வெளியாவது வாயுவா, பாஸ்பரஸா என்பதில் கண்டறிய மருத்துவர்கள் தொடர்ந்து திணறி வருகின்றனர்.
இதனால், குழந்தையின் வியர்வை, சிறுநீரகம், ரத்த மாதிரிகளை தனியார் ஆய்வகத்துக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆய்வு முடிவு வெளியாக உள்ளதால் குழந்தையின் உடலில் தீப்பிடிப்பதற்கான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

0 கருத்துகள்:

Post a Comment