இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஓசூர் பகுதியில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய்யின் தலைவா படத்திற்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வெளியாகததால், தமிழக ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று படத்தை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பல மாநிலங்களில் தலைவா பட சி.டி.க்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இப்படத்தில் வரும் அரசியல் பஞ்ச் டயலாக்கினாலே, இப்படத்தை தமிழகத்தில் வெளியிட மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்று விஜய் ரசிகர்கள் கூறிக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் ரசிகர்கள் ஓசூரில் ஒட்டிய நாளை முதல்வனே போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யைக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள இந்த போஸ்டர்கள் குறித்த விபரங்களை உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது








0 கருத்துகள்:
Post a Comment