ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவரை ரோடு ரோலர் என்று விமர்சித்த மத்திய அமைச்சரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் மத்திய அரசு பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக லத்தேகர் நகரில் நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இதனை தொடங்கி வைத்து பேசுகையில், அப்போது அவ்விழாவில் கலந்து கொண்ட மருத்துவர் பாரதி காஷ்யப்பை ரோடு ரோலருடன் ஒப்பிட்டு பேசினார். குண்டாக இருக்கும் பாரதி காஷ்யம் ரோடு ரோலர் போல தன்னை எதிர்கொள்ளும் பிரச்னைகளை நசுக்கி வருகிறார் என்று கூறியுள்ளார்.
இவர் கூறிய வார்த்தைகளால் விழாவில் பதற்றம் நிலவியது, பலரும் தங்கள் முகத்தை சுளித்துக்கொண்டனர்.
இது குறித்து பாரதி காஷ்யப் கூறுகையில், அமைச்சர் என்னை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ததாக கருதவில்லை என்றும் இதற்கு முன்பு கூட பல விழாக்களில் என்னை அவர் பாராட்டியுள்ளார் எனவும் கூறியுள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment